Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடி, நரம்பு, சதை, ரத்தம், புத்தினு! எல்லாமே "அவர்"னு ஊறி போன ஒருவர்! யார் இந்த சிபி சக்கரவர்த்தி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடிக்கும் 173 ஆவது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அவர் யார் என்பதை பார்க்கலாம். டான் படத்தை தாண்டி அவரை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

ரஜினியின் ஜெயிலர் 2 படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து 173 ஆவது படமானது கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Who is Cibi Chakaravarthi

இந்த சிபி சக்கரவர்த்தி "டான்" படத்தை இயக்கியுள்ளார். அதை தாண்டி அவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். சிபி சக்கரவர்த்தி ரஜினியின் தீவிர ரசிகர். அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரி முடித்த பிறகு குறும்படங்களை இயக்கி வந்தார்.

பின்னர் அட்லியிடம் உதவி இயக்குநராக சிபி பணியாற்றினார். அவருடன் தெறி படத்தில் பணியாற்றியுள்ளார். அடுத்தது மெர்சல் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

மெர்சல் படம் வெளிநாட்டில் படப்பிடிப்பு எடுத்துக் கொண்டிருந்த போது படக்குழுவினருக்கு பிரச்சனைகள் வந்த போது சிபிதான் அதை தீர்த்து வைத்தாராம். அவர் நிறைய வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளார்.

மெர்சலுக்கு பிறகு அட்லியிடம் இருந்து வெளியே வந்த சிபி, டான் என்ற படத்திற்கான கதையை எழுதினார். அந்த கதையுடன் நிறைய தயாரிப்பு நிறுவனங்களையும் ஹீரோக்களையும் நாடினார். பின்னர் பெரும் போராட்டத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்தார்.

40 கோடி ரூபாய் போட்டு எடுத்த அந்த படம் ரூ 125 கோடி வசூலை அள்ளியது. உணர்வுப்பூர்வமான படங்களை அவர் எடுத்தாலும் அவருக்கு ஆக்ஷன் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே ஆக்ஷன் கதைகளையும் அவர் எழுதினார்.

சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகர். அவரது சமூகவலைதளங்கள் முழுக்க ரஜினியை கொண்டாடி வைத்திருக்கிறார். ரோபோ, பேட்ட உள்ளிட்ட படங்களில் புகைப்படங்களையும் டிரெய்லர்களையும் வரவேற்று பதிவு போட்டுள்ளார்.

மேலும் ரஜினியுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு கபாலி படத்தின் படப்பிடிப்பின் போது அட்லி மூலம் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரஜினியின் பிறந்த நாளன்றுதான் சிபிக்கும் பிறந்தநாளாம். தற்போது ரஜினிக்காக சிபி இயக்கும் படம் அவரது 2ஆவது படமாகும்.

தன்னிடம் உள்ள கதையை வைத்து ரஜினியை இம்பிரஸ் செய்த சிபி விரைவில் படப்பிடிப்பை தொடங்குவார் என தெரிகிறது. சுருக்கமாக சொல்ல போனால் நாடி, நரம்பு, சதை, ரத்தம், புத்தினு எல்லாமே ரஜினிதான்னு உடம்பு முழுவதும் ஊறிப் போன ஒரு ஆள்தான் சிபி என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+