Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில்பாலாஜி இவர் கன்ட்ரோல்ல தான் இருக்காராம்.. யார் இந்த டாக்டர் ரகுராம்? இதுலதான் ஸ்பெஷலிஸ்ட்டே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து வரும் ஏ.ஆர்.ரகுராம், இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர்.

அமலாக்கத்துறை கைதின் போது, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, ஐகோர்ட் உத்தரவின்படி செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Who is Doctor AR Raghuram who monitoring Minister Senthil balaji in Kauvery hospital

காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜி: காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது மயக்கவியல் சிகிச்சை தருவதற்கு அவரது உடல் தகுதியோடு இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. இதய சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையில் மருத்துவக் குழுவினர் பல்வேறு பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மூத்த மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக பரிசோதனை நடைபெற்று வருகிறது. தற்போது செந்தில் பாலாஜி ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை பல்வேறு நிபுணர்கள் கண்காணித்துவருகின்றனர் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஏ.ஆர்.ரகுராம்?: அமைச்சர் செந்தில் பாலாஜியை தீவிரமாக கண்காணித்து வரும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஆர். ரகுராம் 1979 இல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் படித்தவர். 1991 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் MCH (கார்டியோ தொராசிக் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை) படிப்பை முடித்தவர்.

இந்தியாவில் உள்ள சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர். ஏ.ஆர்.ரகுராம், இந்தத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். அவருக்கு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல நிபுணர்: இந்திய மருத்துவ சங்கம், இந்திய இருதய அறுவை சிகிச்சை சங்கம், தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் சங்கம் - அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம் போன்ற மதிப்புமிக்க சங்கங்களில் உறுப்பினராக உள்ளார் டாக்டர் ஏ.ஆர்.ரகுராம்.

டாக்டர் ரகுராம், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ராயல் பிரின்ஸ் ஆல்ஃபிரட் மருத்துவமனை, சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள், சிம்ஸ் மருத்துவமனை, போன்ற தேசிய மற்றும் சர்வதேச மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். 2016 இல் இங்கிலாந்தின் எடின்பரோவில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸில் பெல்லோஷிப்பை (FRCS) முடித்தார் ரகுராம்.

Who is Doctor AR Raghuram who monitoring Minister Senthil balaji in Kauvery hospital

சிக்கலான ஆபரேஷன்: கடந்த ஆண்டு கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட 55 வயதான பெண் ஒருவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஈசிஜி ரிப்போர்ட் அசாதாரணமாக இருந்ததால் அவருக்கு உடனடியாக கரோனரி ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அதில் இதய ரத்தக்குழாய்களில் சிக்கலான 4 குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் ரத்த ஓட்டத்தை சீராக்க பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அயோர்ட்டாவில் சுரப்பு சரி செய்யப்பட்டது. கசிந்த அயோர்ட்டிக் வால்வு மாற்றப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சையின்போது, அயோர்ட்டிக் வால்வு இணைக்கப்பட்ட மிகக் குறுகிய அடித்தளத்தைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதற்கு செயற்கை வால்வை பொருத்துவதற்கு வேரை விரிவுபடுத்தும் மற்றொரு செயல்முறை தேவை என்று காவேரி மருத்துவமனை கார்டியோ-தொராசிக் சர்ஜன் டாக்டர். ஏ.ஆர்.ரகுராம் தெரிவித்ததன் அடிப்படையில் அந்த ஆபரேஷனும் நடத்தப்பட்டது. ஒரே சிட்டிங்கில் ஏழு மணி நேரத்தில் ஆபரேஷனை முடித்து அப்பெண்மணியின் உயிரைக் காப்பாற்றினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+