முன்னாள் முதல்வரை தோற்கடித்த சுயேச்சை! பிரச்சாரமே செய்யாமல் வெற்றி? யார் இந்த இன்ஜினியர் ரஷீத்’?
சென்னை: ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவை ஒரு சுயேச்சை வேட்பாளர் தோற்கடித்துள்ளார். இது அந்த மாநிலத்தில் பெரிய கட்சியான ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யார் இந்தச் சுயேச்சை வேட்பாளர்? அவர் வென்றது எப்படி?
ஜம்மு & காஷ்மீரின் இளம் முதல்வர் என்று பெயர் எடுத்த ஓமர் அப்துல்லாவை ஒரு சுயேச்சை வேட்பாளர் நடந்து முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில் தோற்கடித்துள்ளார். இதுதான் நாடு முழுவதும் உள்ள அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரை ஒரு சுயேச்சை வேட்பாளர் தோற்கடிக்க முடியுமா? அதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்குக் கிடைத்த பெருமை. இந்தத் தோல்வியை ஏற்றுச் சுயேச்சை வேட்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஓமர்.
யார் அந்தச் சுயேச்சை வேட்பாளர்?
ஜம்மு & காஷ்மீர் மக்களால் இன்ஜினியர் ரஷீத் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் இவர், தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை. வீடு வீடாகப் போய் ஓட்டு கேட்கவில்லை. பேரணி மற்றும் ரோடு ஷோக்களை நடத்தவில்லை.
அப்படி இருந்தும் 472481 வாக்குகளை பாரமுல்லா மக்களவைத் தொகுதிகள் வாரி வழங்கியுள்ளனர். கிட்டத்தட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவை 204142 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவச் செய்துள்ளார்.
இந்தத் தகவல்கள் எல்லாம் இருக்கட்டும், அவர் ஏன் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை? ஏனென்றால் அவர் சிறையில் கைதியாகக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவர் பதவியேற்பதற்காக வெளியே செல்ல அனுமதிக் கோரி இப்போது நீதிமன்றத்தில் ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அப்துல் ரஷீத் ஜம்மு & காஷ்மீரில் உள்ள லாங்கேட் தொகுதியிலிருந்து 2 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆகவே இந்த மாநில அரசியலில் அதிகம் அறியப்பட்டவர் அப்துல். அதனால்தான் அம்மாநில மக்கள் அவரை இன்ஜினியர் ரஷீத் என்று அடைமொழி போட்டு அழைக்கத் தொடங்கினர்.
இவர் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் இப்போது திகார் சிறையில் இருக்கிறார். அவரை வெளியே வரவழைக்கத்தான் ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் 6 சுயேச்சைகளில் அவரும் ஒருவர்
இந்திய அளவில் 2024 மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 8,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆனால், இத்தனை பேர்களில் வெறும் 6 பேர்தான் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த ஆறுபேர்களில் அப்துல் ரஷீத் ஒருவராக இருக்கலாம். ஆனால், அதிலும் இவர் தனி ஒருவன். ஏனென்றால், மற்ற சுயேச்சைகள் தேர்தல் களத்தில் வாக்குக் கேட்டுப் பிரச்சாரம் செய்யக் கூடிய வாய்ப்பை பெற்றிருந்தனர்.
இந்த இன்ஜினியருக்கு அதுவும் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ரஷீத் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.
வேறு எந்த மாநிலத்திலும் ஒரு முன்னாள் முதல்வரை ஒரு சுயேச்சை தோற்கடிக்க முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
"இன்ஜினியர் ரஷீத்துக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி அவரை சிறையிலிருந்து விடுவிக்கும்" என்று ஓமர் ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வரை தோற்கடித்த ஷேக் அப்துல் ரஷித் யார்?

1.ஜம்மு காஷ்மீர் அவாமி இத்தேஹாத் கட்சியின் நிறுவனர்.
2. அவர் 2008, 2014 ஆகிய இரண்டு சட்டசபைத் தேர்தல்களில் ஜம்மு & காஷ்மீர் லாங்கேட் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர். ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றுள்ளார்.
3. 2008 ஆம் ஆண்டு தனது கட்டுமான பொறியியலாளராக இருந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியனர். 17 நாள் பிரச்சாரத்திற்குப் பிறகு அவர் லாங்கேட் தொகுதியில் வெற்றி பெற்றார்.
4.2019 ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் தலைவர் இவர்.
5. அவரது இரண்டு மகன்களான அஸ்ரார் ரஷீத் மற்றும் அப்ரார் ரஷித் ஆகிய இருவரும் தந்தை சார்பாக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். மகன்களின் உழைப்புதான் ரஷீத்தை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications