அன்று டாக்டர் ஆக முடியல.. ஆனால் இன்று ரூ.1000 கோடி கம்பெனிக்கு அதிபதி! திரும்பி பார்க்க வைத்த தமிழர்
சென்னை: அன்று மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவை அடைய முடியாமல் போன ஒருவர் இன்று அதே மருத்துவத் துறையில் நாடே அடுத்த கட்டத்திற்குச் செல்லும் அளவுக்கு மிகப் பங்களிப்பைக் கொடுத்துள்ளார். யார் அவர்.. என்ன செய்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்,
பொதுவாக நமது கனவுகளை நம்மால் அடைய முடியவில்லை என்றால் நாம் துவண்டு போவோம். ஆனால் இங்கே ஒருவர் கனவை அடைய முடியாத போதிலும், சோர்வு இல்லாமல் உழைத்து அதே துறையில் மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளார். அவர் தான் ஜிஎஸ்கே வேலு.

யார் இவர்: இந்தியாவில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலுவின் பங்களிப்பு ஈடு இணையற்றது.. நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்திய மிக முக்கிய நபர்களில் அவரும் ஒருவர்.. இந்தியா சுகாதாரத் துறைக்கே மிகப் பெரிய பங்களிப்பைத் தந்துள்ள இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது மற்றொரு சிறப்பு.
கன்னியாகுமரி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்த ஜி.எஸ்.கே.வேலு. மதுரைக்கு அருகே தான் அவர் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். மேலும் தமிழ் வழியில் தான் இவர் பள்ளிப் படிப்பை முடித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ- மாணவிகளைப் போலவே இவருக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. ஆனால், கட் ஆப்பில் சில மார்க் குறைவாகப் பெற்றதால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
படிப்பு: ஆனாலும், துவண்டு போகமல் அவர் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸில் பார்மசியில் இளங்கலை பிரிவில் சேர்ந்தார். தொடர்ந்து 1991இல், அவர் லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் சேர்ந்து எம்பிஏ பட்டம் பெற்றார். அத்துடன் நிற்காமல் கொல்கத்தாவில் உள்ள IBAM கல்வி நிறுவனத்தில் அவர் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
படிப்பை முடித்ததும் வேலு முதலில் சென்னையில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அண்ட் மெஷின்ஸ் இன்க் என்ற மருத்துவ உபகரண விநியோக நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலுவின் பணி அங்குள்ள அனைவரையும் கவர்ந்தது. பணியில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே அவர் நிறுவனத்தின் முக்கிய ஊழியர்களில் ஒருவராக மாறினார். அப்போது 1989இல் இவரது மேனேஜர் வேலுவின் வேலையைக் கண்டு கவர்ந்தார்.
முதல் பிஸ்னஸ்: மேலும் வேலுவுடன் இருவரும் இணைந்து ஒரு பிஸ்னஸை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுள்ளார். அப்போது வேலுவுக்கு வயதும் குறைவு அனுபவமும் குறைவு.. இருந்தாலும் வந்த வாய்ப்பை தவறவிட வேலுவுக்கு விருப்பமில்லை. என்ன ஆனாலும் சரி ஒரு கை பார்த்துவிடலாம் என்று தனது பாஸ் உடன் இணைந்து அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். தொடக்கம் முதலே வேலுவின் நேர்த்தியான வேலை அவரது நிறுவனம் லாபம் ஈட்டக் காரணமாக இருந்தது.
தீயாக வேலை செய்த அவர் ஆறு ஆண்டுகளில் 25 லட்ச ரூபாயைச் சேர்த்து வைத்தார். அதன் பிறகு அவர் 1997ஆம் ஆண்டில் தனது நீண்ட நாள் கனவை நனவாக்கினார். தனக்கென தனியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். முந்தைய வேலைகளில் அவருக்குக் கிடைத்த அனுபவம் அவரது நிறுவனத்தை மிகச் சிறப்பாக நடத்த உதவியது.
சாம்ராஜ்யம்: 1997இல் அவர் ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் என்ற மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினார்.. குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்வது தான் ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பிஸ்னஸ் மாடல்.. இவரது நிறுவனத்தின் மருத்துவ உபகரணங்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருந்துள்ளது. அதேநேரம் விலையும் குறைவாக இருந்ததால் பல்வேறு மருத்துவமனைகளும் இவரிடம் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்க ஆர்வம் காட்டின.
இதன் மூலம் மளமளவென இவரது நிறுவனம் வளர்ந்தது. மேலும், மருத்துவம் சார்ந்த பல்வேறு துறைகளில் இவரது நிறுவனம் விரிவடைந்தது. இப்போது இவரது நிறுவனம் சுமார் 1000 கோடிக்கும் மேல் பிஸ்னஸ் செய்கிறது. மேலும், இவரது நிறுவனத்தின் நிகர மதிப்பு மட்டும் சுமார் ரூ.300 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அன்று ஒரு காலத்தில் டாக்டர் ஆகும் கனவை சில மார்க்குகளில் தவறவிட்ட இவர், அதே சுகாதாரத் துறையில் நாடே அடுத்த கட்டத்திற்குச் செல்லும் அளவுக்கு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுத்துள்ளார் என்பதே உண்மை.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications