தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரம் இதுதான்! கெத்து காட்டிய டிஎன் சேஷனை மறக்க முடியுமா? நரசிம்மராவ் - ஜெ. உடன் மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'SIR' எனப்படும், வாக்காளர் பட்டியலில் நடைபெறும், சிறப்பு தீவிர திருத்தம் விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆளும் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரம் எப்படிப்பட்டது? தேர்தலை மிகவும் வெளிப்படையாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடத்துவது எப்படி? என்று கற்றுக்கொடுத்த தமிழக கேடரை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையருமான டிஎன் சேஷன் பற்றி இப்போது ஒரு ரீவைண்ட் போவது அவசியம்.

who-is-indias-former-chief-election-commissioner-tn-seshan-how-electin-line-changed-in-his-tenure

தற்போது நம் நாட்டின் 'டாக் ஆப் தி டவுன்' ஆக இருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தில் நிலவும் குழப்பம் தான். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களாக உள்ள விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சந்து ஆகியோரின் ஆலோசனைகளை புறம்தள்ளி 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தை எடுத்து கொண்டால் தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் என்று இருந்தாலும் கூட அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அதிகாரம் தான். தேர்தல் ஆணையத்தின் தலைவர் என்பதை காட்ட வேண்டும் என்பதற்கு மட்டுமே தலைமை தேர்தல் ஆணையர் என்ற பொறுப்பு தனித்து காட்டப்பட்டுள்ளது. மற்றபடி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் 3 பேரும் சேர்ந்து ஆலோசித்து தான் எடுக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் மெஜாரிட்டி அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் ஞானேஷ் குமாரோ இதில் வித்தியாசமானவர். விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் ஆகியோரின் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை கேட்டகாமல் செயல்பட்டதாக அவர்மீது புகார் எழுந்துள்ளது. இது பெரிய விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஞானேஷ் குமாரின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவான செயல்பாடுகள் என்றும், பிரதமர் மோடி, அமித்ஷாவின் பேச்சை கேட்டு ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சரி இப்போது, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் இதில் எப்படி ஸ்பெஷல் எனப் பார்ப்போமா..

1990ம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 10வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றவர் டிஎன் சேஷன். தனது அதிரடியான செயல்பாட்டுக்கு பெயர் பெற்றவர். இந்திய தேர்தல் முறையையே மொத்தமாக மாற்றி அமைத்தவர். 1993ம் ஆண்டில் முதல்முறையாக, வாக்காளர் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தினார். வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாவிட்டால் தேர்தலையே நடத்தமாட்டேன் என்று உறுதியாக நின்று வெற்றியும் பெற்றார்.

பெயரளவில் மட்டுமே இருந்த தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்தினார். பிரச்சார செலவுகளுக்கு கட்டுப்பாடு விதித்தது, பணபலம் மற்றும் அடியாட்பலத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அந்த காலத்தில் பெரும் பிரச்சனையாக இருந்த வாக்குச்சாவடி கைப்பற்றல், தேர்தல் வன்முறை உள்ளிட்டவை அரங்கேறும் பகுதிகளில் சற்றும் யோசிக்காமல் தேர்தலை ரத்து செய்து பெயர் பெற்றவர்.

ஒற்றை வரியில் கூற வேண்டும் என்றால் சுதந்திரமான அமைப்பு என்று பெயரளவுக்கு மட்டுமே இருந்த தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உண்மையான அதிகாரங்களை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தி அதிரடி காட்டியவர்.

அரசியல்வாதிகளுக்கு அடிபணியாதவர் "I eat politicians for breakfast!".. நான் அரசியல்வாதிகளை காலை உணவாக சாப்பிடுவேன்.. "Show me where in the Constitution it says the Election Commission must obey the government" .. அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்தில் தேர்தல் ஆணையம் அரசாங்கத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதை எனக்கு காட்டுங்கள் என்ற அவரது கர்ஜனைகள் வெகு பிரசித்தி.

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் மறைந்த முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவ் மற்றும் மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதா ஆகியோருடனான மோதலை சொல்லலாம். டிஎன் சேஷன் எவ்வளவு பிடிவாதக்காரர், அரசியல் ஆளுமைகளுக்கு ஒருபோதும் அடிபணியாதவர் என்பது அதை படித்தால் உங்களுக்கே புரியும்.

ஆந்திராவை சேர்ந்த பிவி நரசிம்மராவ் 1991 முதல்1996 வரை பிரதமராக இருந்தார். அப்போது தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக டிஎன் சேஷன் இருந்தார். தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் டிஎன் சேஷன் உறுதியாக இருந்தார். ஆனால் அதனை ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதமர் பிவி நரசிம்மராவும் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்ற காங்கிரஸ் அமைச்சர்களை கண்டித்தது, தேர்தலை ஒத்திவைப்பதாக மிரட்டியது உள்ளிட்டவை பிரதமர் பிவி நரசிம்மராவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் டிபி சேஷனின் அதிகாரத்தை கட்டுப்படுத்த பிவி நரசிம்ம ராவ் அரசு 1993ல் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி இரு தேர்தல் ஆணையர்களை நியமித்து, இந்தியத் தேர்தல் ஆணையம் தனிநபரின் கீழ் செயல்படாத வகையில் உருவாக்கப்பட்டது. தனது அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிவி நரசிம்மராவ் செயல்பட்டதால் கோபமான டிஎன் சேஷன் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் பின்னடைவை சந்தித்தார். டிஎன் சேஷன் வெற்றி பெறவில்லை.

1995ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையருடன் 2 தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யலாம். அனைவருக்கும் சமமான பொறுப்பு உண்டு என்று அறிவித்தது. அதன்படி தான் தற்போது வரை இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் உள்ளனர். இந்த விவகாரத்தில் டிஎன் சேஷன் தோற்றாலும் கூட பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது அவரது தைரியத்துக்கு சான்றாக இன்றும் உள்ளது.

அதேபோல், தமிழகத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் டிஎன் சேஷனுக்கும் இடையே மோதல் பெரிய அளவில் பேசும் பொருளானது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது தேர்தல் விதிகளை கறாராக அமல்படுத்தியதால் ஜெயலலிதா டென்ஷனானார். இருவருக்கும் மோதலாக மாறியது. அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் தகுதிநீக்கம் தொடர்பான விவகாரங்கள் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருந்ததும் இந்த மோதலை தீவிரப்படுத்தியது.

1994ல் டிஎன் சேஷன் சென்னை வந்தபோது அதிமுகவினர் கருப்பு கொடிகளுடன் திரண்டனர். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி காவல்துறை அவருக்கு பாதுகாப்பு வழங்க தயங்கியதால் நீண்டநேரம் டிஎன் சேஷன் சென்னை விமான நிலையத்திலேயே இருந்தார். பிறகு தனியார் ஹோட்டலில் தங்கியபோதும்ந்த இடத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு மிரட்டினர். அதிமுக தொண்டர்கள் அந்த நட்சத்திர ஹோட்டலைச் சூழ்ந்து அவரை மிரட்டியதாக கூறப்பட்டது.

இந்த மோதல் வெறும் அரசியல் போராட்டமாக மட்டுமின்றி சட்ட போராட்டமாக மாறியது. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற செயல்பாடுகள் மற்றும் தகுதிநீக்க விவகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையர் மீது பாரபட்சம் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் முடிவுகளின்படி கூட்டாக செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதிகாரமிக்க முதலமைச்சருக்கும், தலைமை தேர்தல் ஆணையருக்கும் இடையே நடந்த இந்த மோதல் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த உத்தரவுதான் தற்போது ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டார். இரு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இன்று தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில் டிஎன் சேஷனின் செயல்பாடுகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதோடு, டிஎன் சேஷன் போன்ற தைரியத்துடன் அரசியல்வாதிகளுக்கு தலைவணங்காமல் இருக்க வேண்டும் என்று விமர்சகள் கூறுவதோடு, இந்தியாவின் தேர்தல் வரலாறு உள்ளவரை ஜனநாயகத்தின் பாதுகாவலராக டிஎன் சேஷனின் பெயர் நிலைத்திருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி

டிஎன் சேஷன். கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் டிகிரி முடித்தார். பிறகு யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். ஐபிஎஸ் பணிக்கு தேர்ச்சி பெற்றும் பணிக்கு சேராமல் ஐஏஎஸ் ஆனார். 1955ம் ஆண்டில் தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் ஆக பணிக்கு சேர்ந்தார். கோவை, திண்டுக்கல் என்று பல்வேறு மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், தமிழ்நாட்டின் முக்கிய துறைகளில் வெவ்வேறு பொறுப்புகளையும் வகித்தார். மத்திய அரசு பணிக்கு சென்றும் வெவ்வேறு பொறுப்புகளை வகித்தார்.

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் அணு சக்தி கமிஷனின் செயலாளராகவும், விணவெளி துறையின் செயலாளரகவும் செயல்பட்டார். அதுமட்டுமின்றி பாதுகாப்பு தறயைின் செயலாளராகவும் 10 மாதம் பணி செய்த பிறகு பணி ஓய்வு பெற்றார். பிறகு 1990ம் டிசம்பர் 12ம் தேதி முதல் 1996 டிசம்பர் 11ம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டார். இவரது இந்த நியமனத்துக்கு அப்போதைய சட்டத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணிய சாமி தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+