அதிகம் படித்தவர்.. இத்தாலிய-அமெரிக்கர்.. பல சாதனைகள் படைக்க காத்திருக்கும் 'முதல் பெண்மணி' ஜில்!
சென்னை: கமலா ஹாரிஸ் மட்டும் கிடையாது, ஜோ பிடன் மனைவி ஜில் பிடனும் அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனைகளை படைக்க உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவிட்ட நிலையில், அடுத்த அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன், பதவியேற்க உள்ளார்.
துணை அதிபராக கமலா ஹாரீஸ் பதவியேற்கிறார். அமெரிக்க துணை அதிபராகப் போகும் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்கர், ஆசிய அமெரிக்கர் என்ற பல பெருமைகளை பெறுகிறார் கமலா ஹாரீஸ்.
ஜோ பிடன் மனைவி ஜில் பிடனும் இந்த வரிசையில் பல சாதனைகளை படைக்க உள்ளார். அதிபரின் மனைவி 'முதல் பெண்மணி' என்று அழைக்கப்படுகிறார். அந்த இடத்தில்தான் பல புதிய அறிமுகங்களை நிகழ்த்த உள்ளார் ஜில் பிடன்.

வாழ்க்கையை மீட்டவர்
1977ல் ஜில் பைடனை திருமணம் செய்தார் ஜோ பிடன். ஜோ பிடன் மனைவி நெய்லியா 1972ம் ஆண்டு, கார் விபத்தில் இறந்த நிலையில், 2 மகன்களுடன் கஷ்டப்பட்ட ஜோ பிடன், ஜில் பிடனை 2வது மனைவியாக மணமுடித்தார். வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தவர்.. தாயை இழந்த இரு மகன்களையும் அன்பு காட்டி வளர்த்தவர்.. என்று ஜில் பற்றி பல முறை சிலாகித்துள்ளார் ஜோ பிடன்.

இத்தாலிய அமெரிக்கர்
ஜில் பிடன், இத்தாலிய-அமெரிக்க குடும்பத்தில் பிறந்தவர். எனவே, இத்தாலிய பின்னணி கொண்ட முதல், 'முதல் பெண்மணி' என்ற பெருமையை ஜில் பெறுகிறார். ஜில் பிடன் ஒரு கல்லூரி பேராசிரியர். வெள்ளை மாளிகையில் குடியேறிய பிறகும் பேராசிரியர் பணியை தொடரப்போவதாக அறிவித்துள்ளார். அப்படி செய்தால் அமெரிக்க வரலாற்றில் வேலைக்கு செல்லக்கூடிய முதலாவது 'முதல் பெண்மணி' என்ற பெயர் கிடைக்கும்.

படிப்பு
ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்க வரலாற்றில் அதிகம் படித்த 'முதல் பெண்மணி' என்ற பெருமையும் ஜில் பிடனுக்கு கிடைக்கும்.

மனைவி பாதுகாப்பு
பல பொது நிகழ்ச்சிகளில் ஜோ பிடன் மீது நடத்தவிருந்த தாக்குதல்களை தடுத்து முறியடித்தவர் ஜில் பிடன். அவருக்கு ஒரு தனியார் பாதுகாவலர் போலவே செயல்பட்டு வந்தார். ஜோ பிடன் அதிபரானதும், அவர் பாதுகாப்பு பொறுப்பு ஜில் பிடனிடமிருந்து, சீக்ரெட் சர்வீசுக்கு மாறிவிடும் என்று வேடிக்கையாக சொல்கிறார்கள் அமெரிக்கர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications