Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் படங்களை தேடி தேடி ரீமேக் பண்ணுவாரே.. சொந்த ரசிகரையே கட்டிவைத்து கொலை..கன்னட ஹீரோ தர்ஷன் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னட ஹீரோ.. சேலஞ்சிங் ஸ்டார்.. டி பாஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் தர்ஷன் கைது செய்யப்பட்டு உள்ளார். அதுவும் கொலை வழக்கில். அதுவும் தனது சொந்த ரசிகரையே கொலை செய்த வழக்கில் கைதாகி உள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. ரேணுகா சாமி என்ற அந்த நபரை கொலை செய்ய தர்ஷன் தனது ரசிகர்மன்ற உதவியையே நாடி இருக்கிறார். ரேணுகா சாமி எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில்.. அவரை தேடி கண்டுபிடிக்க ரசிகர் மன்ற உதவியை நாடி.. அதன்பின் ரேணுகா சாமியை கார் ஷெட்டில் வைத்து டார்ச்சர் செய்து கொன்றுள்ளனர் தர்ஷனின் பவுன்சர்கள். இதை கண் இமைக்காமல் ரசித்தும் இருக்கிறார் தர்ஷன்.

Darshan Kannada Actor Bangalore Crime

யார் தர்ஷன்: தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்வது வழக்கம். அதிலும் நடிகர் கணேஷ், தர்ஷன் எல்லாம் ஒரு தமிழ் படத்தை விட மாட்டார்கள். பிதாமகன் படத்தின் ரீமேக்கில் கூட தர்ஷன்தான் சூர்யா ரோலில் நடித்து இருப்பார்.

இங்கே ஆட்டோக்களில் ரஜினி போட்டோ போல அங்கே பெரும்பாலும் டி பாஸ் என்று போட்டு தர்ஷன் போட்டோவை பார்க்கலாம். அந்த அளவிற்கு தர்ஷனுக்கு ரசிகர் பட்டாளம் உண்டு.

ஆனால் இவர் பல முறை இதற்கு முன்பே கைதாகி உள்ளார். விஜயலட்சுமி என்ற பெண்ணை 2000ம் ஆண்டு திருமணம் செய்து அதன்பின் அந்த பெண்ணை துன்புறுத்திய வழக்கில் தர்ஷன் ஏற்கனவே கைதாகி இருக்கிறார். ஹோட்டல் ஊழியரை தாக்கிய வழக்கு தொடங்கி பல வழக்கில் இவர் கைதாகி உள்ளார்.

அதெல்லாம் போக தற்போது உச்சபட்சமாக கொலை வழக்கில் தர்ஷன் உள்ளே சென்றுள்ளார். என்னதான் நடந்தது என்று பார்க்கலாம்.

என்ன நடந்தது?: "சேலஞ்சிங் ஸ்டார்" என்று அழைக்கப்படும் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, அவரது இந்நாள் காதலி பவித்ரா கவுடா மற்றும் பதினொரு பேர் திரைப்பட பாணியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பவன், வினய், பிரதோஷ், நந்தீஷா, தீபக், லக்ஷ்மண், நாகராஜு, கார்த்திக், நிகில், கேசவ் மூர்த்தி மற்றும் ராகவேந்திரா ஆகிய 11 பேர் தர்ஷன் மற்றும் அவரின் காதலி பவித்ரா உடன் கைது ஆகி உள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தால் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தர்ஷனின் தீவிர ரசிகராக அறியப்பட்ட ரேணுகா சாமி, பவித்ராவுக்கு தொடர்ச்சியான ஆபாச மற்றும் அவதூறு மெசேஜ்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. பவித்ரா - தர்ஷன் 10 வருடமாக காதலில் உள்ளனர். இவர்தான் தர்ஷன் தனது மனைவியை பிரிய காரணம்.

இதை விரும்பாத தர்ஷன் ரசிகர் ரேணுகா சாமி பவித்ராவுக்கு கோபமாக மெசேஜ் அனுப்பி உள்ளார். தர்ஷன் தனது மனைவி விஜயலட்சுமியை பிரிந்ததற்கு பவித்ரா காரணம் என்றும், அவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் ரேணுகா சாமி தொடர்ந்து பவித்ராவுக்கு மெசேஜ் அனுப்பி மிரட்டி உள்ளார்.

புகார்: இந்த விவகாரம் பற்றி ரேணுகா சாமி பற்றி பவித்ரா தர்ஷனிடம் கூறி உள்ளார். இதையடுத்துதான் ரேணுகா சாமியை தர்ஷன் தனது பவுன்சர்கள் மூலம் கொன்றுள்ளார்.

ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டு, பெங்களுருவில் உள்ள காமக்ஷிபாளையாவில் உள்ள வாய்க்காலில் பிணமாக வீசப்பட்ட நிலையில் ஜூன் 8ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார். இறந்தவர் சித்ரதுர்காவிலிருந்து கடத்தப்பட்டு, பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அங்கு உள்ள கார் ஷெட்டில் இரவு 11 மணியளவில் இறந்தார் என்று காவல்துறை கூறுகிறது. இவர் சித்ரதுர்காவில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

உடல் மீட்பு: கடந்த ஜூன் 9 ஆம் தேதி, உடல் வீசப்பட்ட இடத்தில் அடையாளம் தெரியாத சடலத்தை நாய்கள் சாப்பிடுவதை அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் காவலாளி கண்டுபிடித்தார், அவர் காமாட்சிபால்யா காவல்துறைக்கு புகார் அளித்தார். பின்னர் இறந்தவர் ரேணிகா சாமி என அடையாளம் காணப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ஷன் ரசிகர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரான ராகவேந்திரா என்ற ரகு தர்ஷன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தர்ஷன் கைது செய்யப்பட்டு உள்ளது.

சிசிடிவி கேமராக்கள் மற்றும் தடயவியல் பகுப்பாய்வைப் பயன்படுத்தி சடலத்தின் அடையாளத்தைக் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ரேணுகா சாமி தர்ஷன் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் என்பதால் நூல் பிடித்து சென்ற விசாரணையில் தர்ஷன் தான் அனைத்தையும் செய்தார் என்று கூறப்படுகிறது.

எல்லாம் உறுதி: காதலியை கிண்டல் செய்த ரேணுகா சாமியை பவுன்சர்ஸ் வைத்து தர்ஷன் மோசமாக தாக்கி உள்ளார். அதில் ரேணுகா சாமி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இதில் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் தர்ஷன் இருந்துள்ளார். அவர் கண் முன்தான் கொலை நடந்து உள்ளது.

கொலை: போலீஸ் விசாரணையில், இறந்த ரேணுகா சாமி சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பெங்களூரு வந்தடைந்தது தெரியவந்தது. பின்னர் பிற்பகல் 2:30 மணியளவில் காமக்ஷிபாளையா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள ஷெட் ஒன்றிற்கு ரேணுகா சாமி அழைத்துச் செல்லப்பட்டார். மூன்று மணி நேரம் கழித்து தர்ஷன் அந்த ஷெட்டிற்குள் நுழைந்ததாக சிசிடிவி காட்சிகள் தெரிவிக்கின்றன. தர்ஷன் முன்னிலையில் தாக்குதல் நடந்துள்ளது. அவர் போன சில நிமிடங்களில் உடல் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை நடந்த இடத்தில் தர்ஷன் இருந்தது உறுதியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+