Kota Srinivasa Rao demise: 750+ படங்கள்.. அரசியலிலும் கால் பதித்தவர்! யார் இந்த கோட்டா சீனிவாச ராவ்?
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய வில்லன் நடிகராக வலம் வந்தவர் கோட்டா சீனிவாச ராவ். பல்வேறு படங்களிலும் இவரது நடிப்பு தனித்துவமாகக் கவனிக்கப்படும். 83 வயதான கோட்டா சீனிவாச ராவ், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். யார் இந்த கோட்டா சீனிவாச ராவ்.. இவரது பின்னணி, கலைப்பயணம் குறித்து நாம் பார்க்கலாம்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த சில காலமாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல் நலக்கோளாறு சிக்கல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியும் இருந்தது. இதற்கிடையே இன்று அவர் ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். யார் இந்த கோட்டா சீனிவாச ராவ் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கோட்டா சீனிவாச ராவ்
தெலுங்கு சினிமா மட்டுமின்றி தெலுங்கு நாடகத் துறையிலும் கோட்டா சீனிவாச ராவ் நடித்துப் புகழ்பெற்றவர். மேலும், தமிழ், இந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் 1978ஆம் ஆண்டு வெளியான 'ப்ராணம் கரீது' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவரது தனித்துவமான நடிப்பு இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளது.. தமிழை பொறுத்தவரை விக்ரமின் சாமி படத்தில் இவரது கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. அதன் பிறகு குத்து, கோ என ஏகப்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இதுவரை அவர் 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விருதுகள்
வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 1985ல் பிரதிகதனா என்ற படத்திற்காக அவர் முதல்முறையாக மாநில அரசின் நந்தி விருது பெற்றார். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளில் ஒன்பது மாநில நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். 2015ஆம் ஆண்டில், இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பிற்காக இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
மனைவி மற்றும் குழந்தைகள்
கோட்டா சீனிவாச ராவ் 1942 ஜூலை 10ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கான்கிபாடு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சீதா ராம ஆஞ்சநேயுலு ஒரு மருத்துவர். சீனிவாச ராவ் ஆரம்பத்தில் மருத்துவராக ஆகவே விரும்பியிருக்கிறார்.. ஆனால் நடிப்பின் மீதான ஆர்வத்தால் சினிமா பக்கம் வந்துவிட்டார். கல்லூரி நாட்களில் நாடகங்களில் நடித்து தனது கலைப் பயணத்தை ஆரம்பித்த கோட்டா சீனிவாச ராவ், இளங்கலை பட்டம் படித்தவர்.
மேலும், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர் வங்கியில் ஊழியராகப் பணியாற்றினார். அவரது மனைவி பெயர் ருக்மணி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் கடந்த 2010ல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்திருந்தார்.
அரசியலில் கோட்டா சீனிவாச ராவ்
கோட்டா சீனிவாச ராவ் நடிகர் மட்டுமின்றி ஒரு அரசியல்வாதியும் கூட. பாஜகவில் இருந்த அவர், 1999 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தில் விஜயவாடா கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
தமிழில் இவரது நடிப்பில் கடந்த 2018ல் காத்தாடி மற்றும் சாமி 2 படங்கள் வெளியானது. தெலுங்கில் இவர் அதன் பிறகும் கூட சில ஆண்டுகள் படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் 2023ல் வெளி வந்த சுவர்ண சுந்தரி என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications