7 மாதங்களில் அமைச்சரவையில் கம்பேக்! யார் இந்த மனோ தங்கராஜ்.. அவரை வைத்து திமுக போடும் வியூகம் என்ன!
சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். யார் இவர்! இவருக்கு என்ன துறை ஒதுக்கப்படலாம்.. மீண்டும் இவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இன்று தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனியர் அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல மனோ தங்கராஜ் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பற்றி நாம் பார்க்கலாம்.

மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலைச் சேர்ந்தவர் மனோ தங்கராஜ்.. பள்ளியாடியில் உள்ள எல்.எம்.எஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் உள்ள என்.எம்.சி.சி கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். அங்கு மாணவர் சங்கத் தலைவராகவும் இருந்தார். அப்போது தான் அவருக்கு அரசியலில் முதலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
திமுகவில் இணைந்த அவர், தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்தார். அவர் 1996 முதல் 2006 வரை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு அவருக்குச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முதல்முறையாக திமுக தலைமை வாய்ப்பு கொடுத்திருந்தது. பத்மநாதபுரம் தொகுதியில் களமிறங்கினார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் ராஜேந்திர பிரசாத் மற்றும் பாஜக சார்பில் ஷீபா பிரசாத் ஆகியோர் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மனோ தங்கராஜ் வெற்றி பெற்றார்.
மீண்டும் வெற்றி
2016- 2021 அதிமுக ஆட்சியின்போது திமுக தலைமை பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், அதை கன்னியாகுமரியில் முன்னின்று நடத்தியிருந்தார் மனோ தங்கராஜ்.. இதனால் உள்ளூரில் செல்வாக்கு மிக்க தலைவராகவே இருந்தார். இதன் காரணமாகவே 2021 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பத்மநாதபுரம் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.
அமைச்சரவையில் உள்ளே வெளியே
அந்தத் தேர்தலில் 87 ஆயிரம் வாக்குகளைப் பெற்று சுமார் 26 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மனோ தங்கராஜ் மீண்டும் வெற்றி பெற்றார். இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றிருந்த மனோ தங்கராஜுக்கு கன்னியாகுமரியில் செல்வாக்கு இருந்தது. இதன் காரணமாக 2021 அமைச்சரவையில் அவரும் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஐடி துறை முதலில் ஒதுக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் அவர் ஐடி துறை அமைச்சராக இருந்தார். 2023 மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஐடி துறைக்கு பதிலாக அவருக்குப் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது. சுமார் 1.5 ஆண்டுகள் அவர் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது சில பல சர்ச்சைகளும் எழுந்தன.

எந்த துறை கிடைக்கும்
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதற்கு உட்கட்சி மோதலும் காரணமாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஏழே மாதங்களில் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. அவருக்கு மீண்டும் பால்வளத்துறை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
எதற்காக மீண்டும் பதவி
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோ தங்கராஜ்.. அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், கன்னியாகுமரியில் போட்டி கடுமையாக இருக்கும். அங்கு பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. தற்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லை. இதனால் அடுத்தாண்டு நடக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டே மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. நாளை மாலை பதவியேற்பு விழா நடக்கும் நிலையில், அப்போது அவருக்கு என்ன துறை என்பது தெரிய வரும்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications