விஜய்யின் "கழுகு பார்வை"! சல்மான், ஷாரூக் டோம் குரூஸ்ஸின் ஃபேவரைட் பவுன்சர்! யார் இந்த நயீம் மூசா?
சென்னை: விஜய்யை 360 டிகிரி கோணத்தில் பாதுகாக்கும் பவுன்சர் நயீம் மூசா யார் என்பதை பார்க்கலாம். விஜயுடன் நயீம் மூசா எப்படி பயணத்தை தொடங்கினார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
விஜய் பிரச்சாரத்திற்கு வந்த போது தொண்டர் ஒருவர் தூக்கி வீசிய கூல்டிரிங்ஸ் பாட்டிலை விஜய் லாவகமாக பிடித்தார். அப்போது பவுன்சர் இந்த கேட்ச்சை பார்த்து அசந்தார். இது வைரலானது.

அது போல் ரேம்ப் வாக்கின் போது தொண்டர் வீசியடித்த மாலையை விஜய் மீது படாமல் பவுன்சர் கேட்ச் பிடித்தார். இதுவும் வைரலானது. விஜய் எங்கு சென்றாலும் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது பவுன்சர் நயீம் மூசா! யார் இவர் என்பதை பார்க்கலாம்.
கேரளாவின் மாஹேவை சேர்ந்தவர் நயீம் மூசா. கேரள மாநிலத்திற்குள் அமைந்துள்ள புதுச்சேரியின் அந்தச் சிறிய பகுதி மாஹே (Mahe) ஆகும். புதுச்சேரி அருகே என்றாலும் இந்த பகுதி மக்கள் மலையாளம் பேசுகிறார்கள்.
பாடி பில்டரான நயீம், துபாய் சென்றார். அங்கு பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் செக்யூரிட்டி நிறுவனத்தை தொடங்க 2007இல் முடிவு செய்தார். அதன்படி அவர் UAE-ல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு நெருங்கிய பாதுகாப்பு (close protection) அளிக்கும் ஒரு முன்னணி பாதுகாப்பு நிறுவனத்தை 2008-ல் தொடங்கினார்.
அதன் பெயர் Gentur Security LLC ஆகும். சல்மான் கான், டோம் குருஸ் (Mission: Impossible - Ghost Protocol துபாயில் படமாகும்போது), மற்றும் Formula 1 சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் , வில் ஸ்மித் ஆகியோரை நயீம் மூசா பாதுகாத்தார்.

மைக்கேல் ஷூமேக்கர் சம்பவம் (வேடிக்கையான கதை!): விமான நிலையத்தில் ஷூமேக்கரை ஒரு Maserati காரில் அழைத்துச் செல்ல நயீம் தயாரானார். ஆனால் ஷூமேக்கர் "நான்தான் ஓட்டுவேன், நீ பின்னால் வா" என்று சொல்லிவிட்டார். Shaikh Zayed Road-ல் வந்தவுடன் ஷூமேக்கர் வேகமாக பறந்தார் - ஒரு Formula 1 சாம்பியனை Maserati-ல் பின்தொடர்வது சாத்தியமே இல்லை! ஆனால் அதை செய்து முடித்தார்.
துபாயில் ஆயுதம் இல்லாத பாதுகாப்பு
துபாயில் பாதுகாப்பு அதிகாரிகள் எந்த ஆயுதமும் வைத்திருக்கக் கூடாது - யாரையும் தொடக்கூட கூடாது. நயீம் மூசா "ஆயுதங்களால் குற்றங்களை தடுக்க முடியாது; வெளிப்படைத்தன்மையும் நட்புணர்வும்தான் சிறந்த பாதுகாப்பு" என்று நம்புகிறார்.
விஜயுடன் தொடர்பு
நடிகர்-அரசியல்வாதி விஜயின் நெருங்கிய பாதுகாவலராகவும் செயல்படுகிறார். விஜய் 2024 பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
விஜயின் பிரசாரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவதால், அவரது பாதுகாப்பு குழு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று அனைத்து 234 தொகுதிகளிலும் நடைபெறவுள்ளது; வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறும். விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) என இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
நயீம் மூசா என்பவர் சாதாரண பாடி கார்ட் அல்ல. சல்மான் கான் முதல் மைக்கேல் ஷூமேக்கர் வரை உலகப் புகழ்பெற்றோரை பாதுகாத்த, துபாயில் தனது சொந்த பாதுகாப்பு நிறுவனத்தை வைத்திருக்கும் ஒரு மலையாளி. இப்போது தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் நிகழ்வான விஜயின் தவெக பயணத்திலும் அவரின் நம்பகமான பாதுகாவலராக இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கும் மூசாதான் பாதுகாப்பு கொடுக்கிறார். துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள சட்டதிட்டங்களை அறிந்த ஒரு பாதுகாவலரை வைத்திருப்பது அவசியம். எனவே துபாய் செல்லும் பிரபலங்கள் மூசா நிறுவனத்தை தொடர்பு கொண்டு பவுன்சர்களை கேட்பார்கள்.
விஜய்க்கு ஒய் பாதுகாப்பையும் தாண்டி மூசாவின் பவுன்சர் குழு சிறப்பான பாதுகாப்பை அளித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரத்தின் போது வேகமாக விஜய் சைக்கிள் ஓட்டிய போது அதன் பின்னால் மூசா ஓடி வந்தார். எனவே விஜய்யை 360 டிகிரி கோணத்தில் பாதுகாத்து வருகிறார் என்கிறார்கள். அமிதாப் பச்சன், சல்மான்கான், ஷாரூக் கான், ரஜினி, கமல், சூர்யா, மம்முட்டி, மோகன்லால், ரன்வீர் சிங் , ராம் சரண் உள்ளிட்டோர் துபாய் சென்றாலே மூசாவின் நிறுவனம்தான் பாதுகாப்பு அளிக்கும்.
இந்த நிறுவனம் பவுன்சர்களாக மட்டும் இல்லாமல் ஒரு விழாவையே நடத்துவார்கள். பிரபலங்கள் எந்த நேரத்தில் வரவேண்டும், எந்த கேட் வழியாக வெளியேற வேண்டும் என்பதை இந்த பவுன்சர்கள்தான் சொல்வார்கள். இவர்களின் அனுமதி இல்லாமல் வேறு யாருமே பிரபலத்தை நெருங்கவே முடியாது.
தவெக தொடங்குவதற்கு முன்பே கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, கட்சி அறிமுக விழா, விக்கிரவாண்டி மாநாடு முதல் இன்று வரை விஜய்க்கு நயீம்தான் பாதுகாவலர்.
அது போல் துபாயில் டி20 போட்டி, இசைக் கச்சேரிகள் நடந்தாலும் துபாய் போலீஸும் மூசாவின் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியைத்தான் நாடுவார்களாம். துபாய் மட்டும் இல்லாமல் கத்தார், ஓமன், குவைத், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பஹ்ரைன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் மூசாவிற்கு கிளைகள் இருக்கின்றன.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!











Click it and Unblock the Notifications