அடுத்த பாஜக தலைவர் யார்? அமித்ஷா - குருமூர்த்தி நாளை ஆலோசனை.. லிஸ்ட்டில் இருக்கும் தலைவர்கள்!
சென்னை: தமிழகத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார். அதன்பிறகு நாளை மறுநாள் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் ஒருபகுதியாக மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தியுடன், அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்துவிட்டது. இருகட்சியின் தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தன. அதிமுகவுடன் இனி கூட்டணி இல்லை என்று பாஜகவினரும், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுகவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் தொடர்ந்து கூறி வந்தனர்.

ஆனால் தற்போது இந்த நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் சேரும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கு கடந்த மாதம் 25ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் அமித்ஷா வீட்டில் அவரை சந்தித்து பேசியது தான் முக்கிய காரணமாகும்.
இதனால் இரு கட்சிகளும் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை இன்னும் வெளிப்படையாக அதிமுக, பாஜக தலைவர்கள் அறிவிக்கவில்லை. இருப்பினும் இரு கட்சிகளும் தமிழகத்தில் மீண்டும் கூட்டணி அமைப்பது உறுதி என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். ஏனென்றால் அமித்ஷா சந்திப்பில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அதன்படி தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றும் நடவடிக்கையை பாஜக மேலிடம் தொடங்கி உள்ளது. இதற்கிடையே அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கவும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் நாளை அமித்ஷா தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து நாளை நாளை இரவு சுமார் 7.30 மணிக்கு விமானத்தில் புறப்படும் அமித்ஷா இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு அவர் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகிறார்.
அதன்பிறகு நாளை மறுநாள் அந்த ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அப்போது பாஜக மாநில தலைவர் மாற்றம், கட்சியின் செயல்பாடு, அதிமுகவுடனான கூட்டணி உள்ளிட்டவை பற்றி அமித்ஷா நிர்வாகிகளுடன் கருத்துகள் கேட்க உள்ளார். மேலும் இந்த வேளையில் அமித்ஷா, தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான குருமூர்த்தியை சந்தித்து பேச உள்ளார். நாளை பிற்பகல் 3 மணியளவில் இருவரும் சந்தித்து பேச உள்ளனர். இந்த வேளையில் தமிழக அரசியல் நிலவரம், அதிமுக உடனான கூட்டணி, பாஜக மாநில தலைவர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் பற்றி குருமூர்த்தியின் கருத்தை அமித்ஷா கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக தமிழகத்தின் புதிய பாஜக தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஏற்கனவே கூறிவிட்டார். இதனால் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதன்படி பாஜகவின் எம்எல்ஏக்களான நயினார் நாகேந்திரன் பெயர் முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக வானதி சீனிவாசன் மற்றும் மாஜி பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் பெயர்களும் பாஜக தலைவருக்கான ரேஸில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications