Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாத்த பாத்தையே.. அப்பாத்தே கேகேனா.. 16 வயசு பட்டாம்பூச்சி நிகென் சாலிந்த்ரி! கேட்டாலே ஆட தோணுதே.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் என எங்கு சென்றாலும் நம்ம ஊரில் பாடுவது போல "அண்ணாத்த பாத்தையே அப்பாத்தே கே கே னா" என்ற பாடல் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த பாடலை பாடியவர் நிகென் சாலிந்த்ரி என்ற வெறும் 16 வயதான இளம் பெண் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இந்தோனேசியாவைச் சேர்ந்த அவர் தான் தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறார்.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் யார் எப்போது பிரபலமாவார்கள் என்பது தெரியவே தெரியாது. டிக் டாக் வந்த பிறகு மரக்கடை வைத்திருந்தவர்கள் கூட இப்போது மைக்கேல் ஜாக்சன் அளவுக்கு பிரபலமாகி விடுகிறார்கள்.

Niken Salindry Indonesia world

அந்த வகையில் ஜிபி முத்து, பிஜிலி ரமேஷ் உள்ளிட்ட பலரை சொல்லலாம். அவர்களெல்லாம் லோக்கல் கைகள் என்றால் தேசிய அளவிலும் உலக அளவில் கூட சிலர் பிரபலமாவது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபலமானது 'ச்சீ ச்சீ சீனுனே ச்சீ' என்ற ஒடிய பாடல் கடந்த மாதம் பயங்கரமாக ஹிட் ஆனது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பாடல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக தற்போது ஒரு பாடல் சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. நமது கிராமங்களில் அண்ணாத்தே, அப்பாத்தே என்ற வரிகளோடு, நளினமான நடனம், துள்ளலான இசையோடு ஒரு வாரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. பழைய வெர்சன், புதிய வெர்சன் பாடல்களும், ரீல்ஸ்களுமாக கலக்கி வருகிறது அந்த பாடல்.

Niken Salindry Indonesia world

உடனே சும்மா விடுவார்களா நம்ம இளசுகள்.. உடனே அந்த பாடலின் வரிகளை அலசி ஆராய்ந்து அந்த பாடலை பாடியவர்களின் வரலாற்றையே கண்டுபிடித்து விட்டார்கள். அவர் வேறு யாருமல்ல இந்தோனேசியாவின் ஜாவா பகுதியைச் சேர்ந்த நிகென் சாலிந்த்ரி. நிகென் சாலிந்த்ரி என்றால் அழகிய நிலவொளி என்று அர்த்தமாம். இரண்டு வயதிலிருந்து அவர் பாடல் பாடி வருகிறார். அவரது தந்தை தான் அவருக்கு மேடையை அறிமுகப்படுத்தியவர்.

Niken Salindry Indonesia world

கர்பையா பகுதியில் கிராஸ்ண்ட் பகுதி மக்களின் பாரம்பரிய மரபு சார் இசையை கொண்டு பிரபலமாக இருக்கிறார். இரண்டு வயதிலிருந்து பாடகியாக வாழ்க்கையை தொடங்கியவர் நான்கு வயதில் தனிக் கச்சேரி அமைத்திருக்கிறார். ஆனால் சில ஆண்டுகளாக தான் தற்போது பிரபலமாக இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு நுர்பயன் வெளியிட்ட மங்கு பூரில் பாடல் மூலம் பாரம்பரியமிக்க கம்பர்சாரி மரபு வழி இசையை உலகம் முழுவதும் பரப்பினார்.

தொடர்ந்து நிகென், தனது தோற்றம் நளினமான நடன அசைவுகளால் யூடியூபில் ட்ரெண்டிங் ஆனார். தொடர்ந்து டெம்பர் மியூசிக் டிஜிட்டல் சேனலை 'அடி லாலா அட்டிகா' பாடலின் மூலம் உலக அளவில் பிரபலமானார். அந்த வீடியோ 27 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தந்தது. தொடர்ந்து உங்களுக்காக போராடு, பிளட் மூன் உள்ளிட்ட பல்வேறு பாடல் தொகுப்புகள் மூலம் பிரபலமாகி இருக்கிறார். அதே நேரத்தில் அவர் மீது சில சர்ச்சைகளும் உலாவுகிறது.அவரது இன பாரம்பரியத்தின்படி பெண்கள் வெளியே செல்லக்கூடாது, பாடல் பாடக்கூடாது என்றெல்லாம் விதிகள் இருக்கிறதாம். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பிரபலமாக இருக்கிறார் நிகென்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+