இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்?
சென்னை: அதிமுக, திமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்துவோம் என அறிவித்துள்ளது. அதில் எந்தக் கட்சியின் பட்ஜெட் அதிகம்? யார் டாப்?
தமிழ்நாட்டில் முதன்முதலாக கவர்ச்சியான இலவசப் பொருட்களைக் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதி கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்ததில் திமுகதான் முன்னோடி. மு.கருணாநிதி தேர்தல் வாக்குறுதியாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். நாட்டின் முதல் பொதுத்தேர்தல் (1952) நடைபெற்ற காலம் தொட்டுத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவந்த பழுத்த அரசியல்வாதியான அவரால்கூட கொள்கைகளை முன்வைத்துத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.

கலர் டிவி கலாச்சாரம்
கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக வெற்றிக்கு 14 இன்ச் வண்ணத் தொலைக்காட்சிதான் கைகொடுத்தது. அதுவே திமுக கண்டுபிடித்த தேர்தல் வெற்றி சூத்திரம். ஆனால், எதிர்க்கட்சியினர், படித்த மேல்தட்டு வகுப்பினர் இதை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
தேவையற்ற கவர்ச்சியான இலவசத் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகிவிடும் என்று வாதிட்டனர். அதற்குச் சமூகநீதி கருத்தியல் சார்பில் சில விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேல்படிப்புக்காக ஊக்கத்தொகை, சலுகைகளை ஆகியவற்றை அரசிடமிருந்து பெறும் உயர்சாதி வகுப்பினர் பாமர மக்களுக்குத் தரும் சிறிய இலவசங்களை எதிர்ப்பது மேட்டிமை மனோபாவம் என்றனர்.
திமுக ஆதரவாளரும் ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டக்குழுவின் துணைத் தலைவருமான ஜெயரஞ்சன் தொடர்ந்து இத்திட்டங்களை ஆதரித்து குரல் எழுப்பிவருகிறார். வண்ணத் தொலைக்காட்சி மறைமுகமாகத் தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியுள்ளது எனச் சான்றுகள் துணை கொண்டு விளக்கியுள்ளார்.
இத்திட்டம் அறிமுகமான சமயத்திலேயே தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்., மதுரையில் கூட்டிய முதல் மாநாட்டில் மிகக் கடுமையாக விமர்சித்தார். "டிவியை இலவசமாகக் கொடுத்துவிட்டு கேபிள் டிவி இணைப்பு மூலம் பலகோடி சம்பாதித்து விடுவார். விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் கருணாநிதி முன்னோடி. அதை சர்க்காரியா கமிஷனே சொல்லி இருக்கிறது" என்றார்.
அப்படியிருந்தும் மக்கள் வண்ணத் தொலைக்காட்சி வாக்குறுதிக்காக திமுகவை ஆதரித்தனர். ஆட்சிக்கும் வந்தது திமுக. அதன் நீட்சியாகக் கடந்த 2021 தேர்தலில் மு.கருணாநிதியின் மகன் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
வெற்றிக்குப் பின் "பொருளாதார பின்புலம் சார்ந்த தரவுகள் தெளிவாக இல்லை. ஆகவே அதைத் திரட்டிவருகிறோம்" என்றார் அன்றைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். அனைவருக்கும் என வாக்குறுதி அளித்துவிட்ட பின்னர் ஏன் பொருளாதார சார்ந்த தரவுகள் எடுக்க வேண்டும். இதை மிகப் பெரிய மோசடி என எதிர்க்கட்சிகள் குறைகூறினர்.
முடிவில் முதற்கட்டமாக 1.13 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு வழங்கினார் ஸ்டாலின். அது படிப்படியாக உயர்த்தப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக இத்திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது எதிர்க்கட்சியினரின் வெற்றிக்கு மிகப் பெரிய சவாலாக மாறியது.
ஒருபடி முன் ஸ்டாலின்
இந்த 2026 தேர்தல் களத்தில் அதிமுக பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. திமுகவும் தன் திட்டங்களில் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துள்ளது. ஆட்சிக்காலத்தில் ஒருமுறை 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்க கூப்பனை தருவதாகச் சொல்லியிருக்கிறது. தவெக தலைவர் விஜய், தன் படங்களில் அரசு இலவசங்களை எதிர்த்தார். அவரது கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களும் இலவசத் திட்டங்களை எதிர்த்தனர்.
ஆனால், அதற்கு மாறாகத் தேர்தல் வாக்குறுதியாகப் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளார் விஜய். இக்கட்சிகள் அறிவித்துள்ள திட்டங்களுக்கு எவ்வளவு நிதி செலவாகும்? யார் அதிக தொகைக்கான தீட்டங்களை அறிவித்துள்ளனர். அதைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
அதிமுக பட்ஜெட் எவ்வளவு?
ஆட்சிக் காலத்தில் ஒருமுறை 10 ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைதாரர்கள் கணக்கில் செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். மொத்தம் 2 கோடி பேர் பயனாளிகள். ஆக 2 கோடி X 10,000 ரூபாய் = 20,000 கோடி தேவை. 1.3 கோடி மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் எனில் அதற்கு ஒரு மாத செலவு ரூ.31,200 கோடி ஆகும்.
மேலும் ஒரு குடும்பத்திற்கு 3 இலவச சிலிண்டர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2.2 கோடி குடும்பம் X 930 ரூபாய் = 6,138 கோடி செலவு. 12 ஆம் வகுப்புவரை படித்து வேலையில்லாமல் உள்ள 15 லட்சம் பேருக்கு மாதம் 1000 ரூபாய். கூடவே 10 லட்சம் பட்டதாரிகளுக்கும் சேர்த்து மாத உதவித் தொகைக்கான செலவு ரூ.4,200 கோடி. 9 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி. ஒரு கணினி 21 ஆயிரம் எனில் 1,890 கோடி நிதி வேண்டும். 29 லட்சம் முதியோருக்கு மாதம் 2 ஆயிரம் எனில் மாதம் ஒன்றுக்கு 6,960 கோடி. அனைவருக்கும் இலவச பேருந்து திட்டப் பயனாளிகள் 55 லட்சம் எனில் 70 லட்சம் காலடிகள். இதற்கு மாதம் 4,581 கோடித் தேவையாகும். ஆக, அதிமுகவின் திட்டங்கள் அனைத்திற்கு 74,969 கோடிக்கு மேல் தேவையாகும்.
திமுக பட்ஜெட் எவ்வளவு?
'சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என ஸ்டாலின் அடிக்கடி கூருவதைப்போல, 2 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ஆட்சிக் காலத்தில் ஒரு முறை 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வழங்க 36,00 கோடி. மகளிர் உரிமைத் தொகை 1.3 கோடி X 2000 மாதம் 31,200 கோடி. புதுமைப் பெண் பயனாளிகள் 4.9 லட்சம் X1500 = மாதம் 888.64 கோடி.
தமிழ்ப்புதல்வன் 5.4 லட்சம் X1500 = மாதம் 972.92 கோடி. நான் முதல்வர் 5 லட்சம் பயனாளிகள் X 1500 = மாதம் 900 கோடி. மடிக்கணினி 35 லட்சம் பேர் X ஒரு கணினி 21 ஆயிரம் = 7350 கோடி. முழுத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த 57, 311.5 கோடியாகும். திமுகவைவிட அதிமுக 17,658 கோடிக்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்குவதையே நடைமுறைக்குச் சாத்தியமில்லாத திட்டம் என எடப்பாடி பழனிசாமி பேசிவந்த நிலையில் அதைவிடக் கூடுதலான செலவு அவர் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
தவெக திட்டம்
அடுத்தது தவெகவின் பட்ஜெட் எவ்வளவு எனப் பார்ப்போம். 1.3 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய். இதற்கு மாதம் 39,000 கோடி நிதி மாதம் தேவை. அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டம். 6,545.45 கோடியாகும். 2 கோடி குடும்பங்களுக்கு 6 சிலிண்டர் இலவசம். இதற்கு 11,160 கோடி. திருமண உதவித் திட்டம் 1.5 லட்சம் தம்பதிக்கு 1,600 கோடி. பெண்குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்கம். 8 லட்சம் பெண்களுக்கு எனில் ஒரு கிராம் 14 ஆயிரம் எனில் 1,120 கோடி. 15 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம். இதற்கு 2,250 கோடி.
வேலையில்லா இளைஞர்கள் 22 லட்சம் பேருக்கு மாதம் 4 ஆயிரம், 1.5 லட்சம் டிப்ளமோ படித்தவர்கள் ஆகிய அனைவருக்கும் மாதம் 2,500. இதற்கு11,010 கோடி. ஆக மொத்தம் 72,765.4 கோடியாகும். இலவசத் திட்டத்திற்கே எதிராக இருந்த தவெக இரண்டு திராவிடக் கட்சிகளைவிடக் கூடுதலான திட்டங்களை அறிவித்துள்ளது.
- கடற்கரய்
-
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
Vijay: புதுச்சேரியிலும் திருந்தாத ரசிகர்கள்! விஜய்யை பார்க்க சாலை விதிகளை மீறும் தவெகவினர்! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே -
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர்












Click it and Unblock the Notifications