கணக்கு வாத்தியார் டூ ரோல்ஸ் ராய்ஸ் ஓனர்.. விஜய்க்கு பக்கத்து வீட்டுக்காரு! யார் இந்த பிஆர் சுந்தர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழிலதிபர், கல்வியாளர், பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர், யூட்யூபர் என பல பரிணாமங்களை கொண்ட பி.ஆர் சுந்தர், பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு சீமான் உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றனர். சீமான் அறிக்கை விடும் அளவுக்கு பிஆர் சுந்தருக்கு என்ன செல்வாக்கு? கணக்கு ஆசிரியராக தொடங்கியவர் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு அதிபர் ஆனது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்.

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் முதலீட்டு ஆலோசகராக சமூக வலைதளங்களில் பிரபலமானவர் பிஆர் சுந்தர். பங்குச்சந்தை நிபுணராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

PR Sundar

பிரபல யூட்யூப் சேனல் ஒன்று, அவரது வீட்டில் எடுத்த ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. ரோல்ஸ் ராய்ஸ் கார், பீச்சை பார்த்தபடி மொட்டை மாடி நீச்சல் குளம், வீட்டுக்குள்ளேயே தியேட்டர் என பிரம்மாண்ட பங்களாவில் வசிப்பவர்.

பிஆர் சுந்தர்

தனது பேட்டிகளின் போது விஜய் வீடு எனது பக்கத்தில் தான் இருக்கிறது. விஜய் தனது நெய்பர் என அடிக்கடி குறிப்பிடுவார் சுந்தர். இந்த நிலையில் தான் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி பி.ஆர் சுந்தர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இன்டர்வியூ கொடுக்க வேண்டும் என அலுவலகத்திற்கு அழைத்து சுமார் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அச்சுறுத்தியதாக அந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஐஸ் ஹவுஸ் காலவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பிஆர் சுந்தர் கைது

இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார் பிஆர் சுந்தர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவரது மனைவி மங்கையற்கரசி மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படும் பிஆர் சுந்தரை பெங்களூரில் அதிரடியாக போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

சீமான்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பிஆர் சுந்தர் கைது செய்யப்பட்டு இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமையை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சீமான் அறிக்கையை விடும் அளவுக்கு பிஆர் சுந்தர் பெரிய ஆளா என்றால்... நிச்சயமாக பெரிய ஆள் தான்..

முதலீட்டு ஆலோசகர்

கணித ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னர் பங்குச்சந்தையில் நுழைந்து முன்னணி வர்த்தக நிபுணர்களின் ஒருவராக மாறினார். தொடர்ந்து பங்குச்சந்தை வர்த்தகம், ஆப்சன்ஸ் குறித்தும் பலருக்கு பயிற்சி அளித்து வருகிறார். சென்னை நீலாங்கரையில் இவரது வீடு மிக பிரம்மாண்டமாக இருக்கும். மொட்டை மாடியில் நீச்சல் குளம் வீட்டுக்குள்ளே, தியேட்டர் ,லிப்ட் ஆடம்பர கார்கள் என இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் பார்வையிடப்பட்டது.

பங்குச் சந்தை

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் தனியாக டிரேடிங் குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடியை நெருங்கும் என்கின்றன தொழில்துறை வட்டாரங்கள். அது மட்டுமல்லாமல் பல அரசியல் கட்சி தலைவர்களுடன் நெருக்கமாகவும் இருந்து வருகிறார். சில அரசியல் கட்சி தலைவர்களின் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதை இரட்டிப்பாக்கி கொடுப்பதும் பி.ஆர் சுந்தரின் வேலை என்றும் தகவல்கள் உலாவுகின்றன..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+