ஏகப்பட்ட அவமானம்! ஹை-பை தர கூட ஆள் இல்லை! இந்திய டீமில் இடம்பிடித்த ஹனுமான்! யார் இந்த ராஜத் படிதார்
சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ராஜத் படிதார் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக கலக்கிய ராஜத் படிதார் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
ராஜத் படிதார் பல கஷ்டங்களை, ஏமாற்றங்களை கடந்து வந்து இருக்கிறார். சொந்த அணியாலேயே புறக்கணிக்கப்பட்ட இவர்.. ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
கிரிக்கெட்டிற்கு சம்பந்தமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கு கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை கூட சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு, தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார் ராஜத்.

யார் இவர்?
இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் மத்திய பிரதேச அணிக்காக பல உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். உள்ளூர் போட்டிகளில்தான் இவர் தன்னுடைய சிறப்பான ஆட்டம் மூலம் கவனம் ஈர்த்தார். அப்போதே தேசிய தேர்வாளர்கள் இவர் மீது கண் வைத்தனர். முக்கியமாக ஐபிஎல் ஸ்கவுட் பிரிவினர் பலர் இவர் மீது நம்பிக்கை வைத்து இருந்தனர், மாநில அணியில் இவரை ஹனுமான் என்றுதான் அழைக்கிறார்கள். ஆம் அந்த அளவிற்கு இவர் சிறப்பாக ஆட கூடியவர். 2015ல் இருந்து மத்திய பிரதேச அணிக்கு பல வெற்றிகரமான இன்னிங்ஸ் ஆடி உள்ளார். 28 வயதாகும் இவர் பிஸ்னஸ் மேன் குடும்பத்தை சேர்ந்தவர்.

குடும்ப பிஸ்னஸ்
இவரின் குடும்பம் இவரை குடும்ப பிஸ்னஸ் பார்க்க கட்டாயப்படுத்திய நிலையில் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இவர் தொடர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி ஆடி வந்துள்ளார். இவரின் குடும்பத்திற்கும் கிரிக்கெட்டிற்கும் சம்பந்தமே இல்லை. என்ன வேணா கிரிக்கெட் ஆடு. ஆனா கடைசியில் குடும்ப பிஸ்னஸை மட்டும் பாரு என்பதுதான் இவரின் குடும்பம் ராஜத்திற்கு சொன்ன அறிவுரை. குடும்ப எதிர்ப்பை மீறி கிரிக்கெட்டை காதலித்தவர் தற்போது தேசிய அளவில் வைரலாகி உள்ளார்.

காயங்கள்
கடந்த 4 வருடங்களில் ஏற்கனவே இவருக்கு காலில் காயம் ஏற்பட்டு, ஆபரேஷன் எல்லாம் செய்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் இவர் ஷமியை எதிர்கொண்ட விதம், தமிழ்நாட்டிற்கு எதிராக ராஞ்சி கோப்பை போட்டியில் 196 ரன்கள் எடுத்தது என்று பல கவனிக்கதக்க ஆட்டங்களை ஆடி உள்ளார். முக்கியமாக இவர் பாஸ்ட் பவுலர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவர், இப்போது கிரிக்கெட் உலகில் நல்ல பவுலிங் லைன் அப் கொண்ட அணி தென்னாபிரிக்காதான். அதன் காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கு எதிராகவும் அவர் வாய்ப்பு பெற்றுள்ளார்.

பெங்களூர்
ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து 50 ரன்களை எடுத்து இவர் பெங்களூர் அணியில் கவனம் பெற்றார். அதிலும் ப்ளே ஆப் போட்டிகளில் அரை சதம் அடித்து இவர் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில்தான் இவர் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார் ஷிகர் தவான் தலைமையிலான அணியில் இவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2022 ஐபிஎல் ஏலத்தில் முதலில் இவரை பெங்களூர் அணி ஏலம் எடுக்கவில்லை. அந்த சீசனில் அவர் அன் சோல்ட். ஆனால் கடைசியில் பெங்களூர் அணியில் கர்நாடக வீரர் லுவனித் சிசோடியா காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.இதனால் மாற்று வீரராக படிதார் உள்ளே வந்து அசத்தினார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவர் மிகவும் சிறப்பாக ஆடினார்.

செஞ்சுரி
அதோடு பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆடி கடந்த சீசனில் இவர் செஞ்சுரி அடித்தது கூட குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியில் ஒரு ஓரமாக இருந்த வீரர்தான் ராஜத். ஏன் பெங்களூர் அணி வென்ற சில சமயங்களில் இவருக்கு ஹை பை கொடுக்க கூட ஆள் இல்லை. இதை பற்றிய உருக்கமான வீடியோக்கள் கூட அப்போது இணையத்தில் வெளியாகின. அப்போது ஹை பை தரகூட ஆள் இல்லாமல் இருந்த ராஜத்தான் அந்த சீசனில் பெங்களூர் அணியின் சூப்பர் ஸ்டார். இப்போது அவரேதான் இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றுள்ளார். இவர் இந்திய அணியில் இடம் பிடித்ததை அடுத்து பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications