Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் வீழ்ச்சிக்கு துரோகம் காரணமா? பிரேமலதா காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேச்சு மூச்சு இல்லாமல் கடந்த இரண்டு தேர்தல்களுக்குப் பின் மவுனமாகக் கிடந்த தேமுதிகவைப் பற்றி மீண்டும் ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கி உள்ளன.

அதற்கு அந்தக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது ஒரு முக்கியக் காரணம். அடுத்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து சில மோசமான தகவல்கள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், அவர் கட்சியின் பொதுக்குழுவில் கலந்து கொண்டது.

Who is responsible for Vijayakanths ill health

இவை எல்லாம் மக்கள் நினைவிலிருந்து மறைந்துபோன கட்சிக்கு புதிய வெளிச்சத்தை அளித்திருக்கிறது. இதனளவில் தேமுதிகவுக்கு அது பலமாக மாறி இருக்கிறது.

இதில் பல ஊடகங்கள் விவாதிக்க மறந்த விசயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், குடும்ப அரசியலைப் பற்றி மேடை தோறும் விளாசி வந்த விஜயகாந்த் கட்சி, அவருக்கு அடுத்து அவரது மனைவியிடம் சென்றிருக்கிறது. அது குறித்து பெரிய அளவில் விவாதம் உருவாகவில்லை.

அதற்குக் காரணம், அவர் கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தேமுதிக அவரது குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. அவரது மனைவிக்கு மகளிர் அணி தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.

Who is responsible for Vijayakanths ill health

அப்படியே பிரேமலதாவின் சகோதரரும் கட்சிக்குள் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு மேல் விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரத்தில் முகம் காட்டமுடியாது என்ற நிலை வந்தபோது அவரது மகனுக்குக் கட்சியின் தலைமை அதிக முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தது.

மேடைகள் தோறும் 'கேப்டன் சிங்கம்போல திரும்ப வருவார்' என அவர் டயலாக் பேச ஆரம்பித்தார்.

ஒரு காலத்தில் வாரிசு அரசியலை எதிர்த்த விஜயகாந்த் கட்சி, இன்று வந்து நின்றிருக்கும் இடம் பரிதாபத்திற்கு உரியது. அக்கட்சி மீண்டு வருமா? பிரேமலதா கட்சியை மீட்டு எடுப்பாரா என்பதற்கு வரும்காலம் தான் பதில் சொல்லும். அதற்கு பிரேமலதா கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்.

பிரேமலதா அவரது கணவர் உருவாக்கிய கட்சியின் தலைமையை ஏற்றுக் கொண்ட பிறகு ஜெயலலிதாதான் ரோல் மாடல் என்கிறார். அப்படி என்றால் விஜயகாந்த்தின் அரசியல் வாரிசு இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

காரணம், மிகக் கடுமையாக ஜெயலலிதாவை எதிர்த்ததால்தான் அவர் அரசியலில் ஆரம்பக்காலங்களில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அப்படி உருவான கட்சியின் தலைமைக்கு வந்த பிரேமலதா திடீர் என்று ஜெயலலிதா மீது பாச மழை பொழிய ஆரம்பித்திருப்பது பெரிய விநோதமாக இருக்கிறது.

Who is responsible for Vijayakanths ill health

அரசியல் ரீதியாக விஜயகாந்த்தைப் பழிவாங்கியவர் ஜெயலலிதா. சட்டசபைக்குள் நடந்த வாய்க்கால் தகராறுகளை உலகமே அறியும். ஆனால், கட்சி எம்.எல்.ஏக்கள் துரோகம் செய்ததால் விஜயகாந்த் மனநிலை பாதிக்கப்பட்டது என்கிறார் பிரேமலதா.

ஒரு கட்சியில் இருப்பவர் வேறு கட்சிக்குச் செல்வது ஒரு ஜனநாயக நடைமுறை. அதை அறியாதவர் அல்ல விஜயகாந்த். அதற்காக அவர் பாதிக்கப்பட்டு, உடல்நிலை கெடும் அளவுக்குப் போனார் என பிரேமலதா சொல்வது அரசியல் ஆதாயத்திற்காக வைக்கப்படும் வாதமாகத் தெரிகிறது. அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள் சில அரசியல் ஆர்வலர்கள்.

எம்.எல்.ஏக்கள் விலகி செல்வதற்கு முன்பே அவரது உடல்நிலையில் மாற்றம் வந்துவிட்டது என்பதுதான் உண்மை. பல ஆண்டுகளுக்கு முன், விஜயகாந்த் அவரது நெருங்கிய நண்பர்களைச் சந்திப்பதற்காக ஒரு சந்திப்பை நடத்தினார்.

Who is responsible for Vijayakanths ill health

அவரது அழைப்பை ஏற்று அவரது பத்திரிகையாளர் நண்பர்கள் உட்படப் பலரும் அந்த பார்டியில் கலந்து கொண்டனர். அங்கு நடந்த பெரிய சோகம் என்ன தெரியுமா? சந்திப்பில் கலந்து கொண்ட யாரையும் விஜயகாந்த்தால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவரது நினைவு தப்பி இருந்தது அன்றைக்கே.

அவரது உடல்நிலை எம்.எல்.ஏக்கள் செய்த துரோகத்தால் கெட்டதா என்று அவரது நெருங்கிய வட்டாரத்தை விசாரித்தால், நமக்குக் கிடைத்த தகவல் வேறு மாதிரியாக உள்ளது.

அவர் எடுத்துக் கொண்டு சிகிச்சைதான் அவரது உடல்நிலை மோசமடைய காரணம் என்கிறார்கள். அவர் உட்கொண்ட மருந்துகளின் ஒவ்வாமையால் அவர் பாதிக்கப்பட்டாரே ஒழிய, அவரது எம்.எல்.ஏக்கள் செய்த துரோகத்தால் அல்ல என்று அடித்துச் சொல்கிறார்கள்.

Who is responsible for Vijayakanths ill health

உண்மை நிலை அப்படி இருக்க பிரேமலதா, வேறு கதையைச் சொல்கிறார். தேமுதிகவிலிருந்து மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன், மாஃபா பாண்டியன் ராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் அதிமுக பக்கம் சென்றார்கள். உண்மைதான். ஆனால், அவர்கள் யாரும் விஜயகாந்த்தை விரும்பாமல் செல்லவில்லை. கட்சியில் பிரேமலதாவின் தலையீடு இருப்பதாக மறைமுகமாக உணர்த்திவிட்டே சென்றார்கள்.

பலரையும் இழந்த கட்சி, இறுதியில் இப்போது விஜயகாந்த்தையும் இழந்திருக்கிறது. கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட தேமுதிகவை மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. அந்தளவுக்கு அரசியல் களத்தில் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், ஒரு மருத்துவராக விஜயகாந்த் உடல்நிலை குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டோம்.

அவர்,"தேமுதிக என்பது ஒருவருடன் முடிந்துபோன கட்சி. அந்த ஒருவர் விஜயகாந்த். அன்று பொதுக்குழுவுக்கு அவர் வந்தபோது நாம் அனைவரும் அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பதைப் பார்த்தோம். அவர், சுயநினைவுடன்தான் இருந்தாரா என்பதுகூட சந்தேகப்படும்படி தான் இருந்தது. அவர் சாய்கிறார். கீழே விழுகிறார். இந்த நிலையில் அவரை வைத்த பிரேமலதா அரசியல் செய்ய ஆசைப்படுகிறார்.

அன்றைக்கு பிரேமலதாவின் செயல்பாடு எதிர்மறையாகத்தான் மக்களால் பார்க்கப்பட்டது. அவரது வாய்க்கு மாஸ் ஏன் போட்டார்கள்? அதற்கு என்ன காரணம்? நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். அவருக்குச் சுயநினைவே அன்று இல்லை.

Who is responsible for Vijayakanths ill health

அவரது தொண்டர்களே விஜயகாந்த் நிலையை நினைத்துக் கண்கலங்கிய காட்சியை நாம் பார்த்தோம். அவர் உடல்நிலை கெட்டு விட்டது. அதற்கு யாரும் காரணம் இல்லை. சதி வேலை என்று பிரேமலதா சொல்வதில் உண்மை இல்லை. அந்தக் கருத்துகள் ஏற்கும் படியாகவும் இல்லை.

விஜயகாந்த் உடல்நிலை சரியாக இருந்த காலத்திலேயே இவர் பேசிய அரசியல் பேரம் என்ன என்று நமக்குத் தெரியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு கட்சியிடம் பிரேமலதா பேசிய பேரம் உலகத்திற்கே தெரியுமே?அவரை வைத்து இவர் பேரம் பேசியதால் கட்சி வீழ்ச்சியடைந்தது. அது எல்லோருக்கும் தெரியும்.

Who is responsible for Vijayakanths ill health

அவரது கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் ஏன் வேறு கட்சிக்குப் போனார்கள்? தலைவர் இனி சரியாகச் செயல்படமாட்டார் என்பதை உணர்ந்ததால் போனார்கள். அப்படிப் பார்த்தால் எம்.எல்.ஏக்களை விஜயகாந்தினாலே கட்டிக்காக்க முடியவில்லையே ? அவர் விட்டுவிட்டாரே? அப்புறம் எப்படி, இனி வரும் காலத்தில் பிரேமலதா கட்டிக்காப்பார்? அதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது?

நான் இதுவரை பிரேமலதா தலையீடு ஏற்பட்ட பிறகுதான் பிடிக்காமல் எம்.எல்.ஏக்கள் சென்றுவிட்டார்கள் என்று. ஆனால், இவர் சொல்வதைப் பார்த்தால் விஜயகாந்த்தாலே அவரது எம்.எல்.ஏக்களைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியவில்லை என்பது புரிகிறது. அவரது பேச்சுக்கு அப்படித்தானே அர்த்தம் வருகிறது?" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+