பேட் முதல் கிளவுஸ் வரை.. வாங்கி கொடுத்து வளர்த்த ரெய்னா.. ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய கதை.. ப்பா!
சென்னை: ஐபிஎல் உலகின் புதிய சூப்பர் ஸ்டார் ஆகி உள்ளார் ரிங்கு சிங். குஜராத் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது.
யாஷ் தயால் வீசிய இந்த ஓவரில் 5 சிக்ஸர்களை அடுத்தடுத்து அடித்து, மேட்சை வென்றது மட்டுமின்றி.. ஐபிஎல் உலகின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தும் இருக்கிறார் ரிங்கு சிங். சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் ரிங்கு சிங்கிற்கு பின் உருக்கமான கதை ஒன்று உள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் மிகவும் வறுமையான குடும்ப பின்னணியை சேர்ந்தவர். முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடியவர் 2017ல் இருந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார். முதல் சீசனில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
உள்ளூர் போட்டிகளில் உத்தர பிரதேச அணிக்காக இவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். வறுமையான பின்னணியை கொண்ட இவர் உத்தர பிரதேச அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தார். ஒரு முறை 31 பந்தில் 91, இன்னொரு முறை 41 பந்தில் 94 ரன்கள் எடுத்து அசத்தினார். இவரின் ஆட்டம் கவனம் பெறவே 2018ல் கொல்கத்தா அணி இவரை 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதன்பின் 2022 மெகா ஏலத்திற்கு முன் இவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 55 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டார்.
அங்கே இவருக்கு மிகப்பெரிய அளவில் தொடர் வாய்ப்புகளும் ஆதரவும் வழங்கப்பட்டு வந்தது. பிரெண்டன் மெக்கல்லம்தான் இவரை தொடர்ந்து ஆதரித்து வந்தார். உத்தர பிரதேச அணியில் ரெய்னாவின் கேப்டன்சிக்கு கீழ்தான் ரிங்கு அறிமுகம் ஆனார். ரெய்னாதான் இவரின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது. இவரை உத்தர பிரதேச அணியில் மிடில் ஆர்டரில் இறங்க வைத்தது.

தொடர் வாய்ப்புகளை கொடுத்தது, சில சமயங்களில் ஆடாத போதும் தொடர் வாய்ப்புகளை கொடுத்து ஆதரித்தது என்று ரெய்னா கேப்டனாக இவரை வழி நடத்தினார். அதோடு இல்லாமல் இவருக்கு பேட், பேடு தொடங்கி அனைத்தையும் ரெய்னாதான் வாங்கி கொடுத்து பொருளாதார ரீதியான உதவிகளையும் செய்து வந்தார். ரிங்கு சிங் தற்போது இந்த நிலைக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம் ரெய்னாதான்.
யார் இவர்? :
இவரின் அப்பா சிலிண்டர் போடும் வேலையில் பணியாற்றி வந்தார். இவர் அண்ணன் ஆட்டோ ஓட்டும் வேலையை செய்து வருகிறார். இவர் சிறிய 2 ரூம் கொண்ட வீட்டில் 9 பேர் கொண்ட குடும்பத்தில் வசித்து வந்தார். இவர்களின் குடும்ப மாத வருமானம் 10 ஆயிரத்தை தாண்டாது. இத்தனை பிரச்சனைகளையும் மீறி இவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார்.
இருந்தாலும் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய இவர் சில காலம் துப்புரவு பணியாளராகவும் பணியாற்றி இருக்கிறார் . ரிங்கு சிங் தனது 9 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போக தனது பள்ளியை விட்டு வெளியேறினார். அதன்பின்தான் வறுமைக்கு இடையிலும் அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். விளையாட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ரிங்கு சிங் ஐபிஎல் 2022 இல் இருந்துதான் லைம் லைட்டிற்கு வர தொடங்கினார். அதற்கு முன்பு வரை அவரை பீல்டிங் செய்ய மட்டும் கேகேஆர் பயன்படுத்தும். கேகேஆர் தரப்பில் நிரந்தர இடத்தைத் தக்கவைக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

கடந்த வருடம் ராஜஸ்தானுக்கு எதிராக இவர் 23 பந்தில் 42 ரன்கள் எடுத்த போதுதான் அதிகம் கவனிக்கப்பட்டார். அதில் இருந்து தொடர் வாய்ப்புகளை பெற்று வந்த ரிங்கு சிங் தற்போது ஐபிஎல் உலகின் சூப்பர் ஸ்டார் ஆகி உள்ளார்.












Click it and Unblock the Notifications