விஜயலட்சுமி கூறுவது போல் திமிரு, அகங்காரம் பிடித்தவரா நாம் தமிழர் சீமான்? யார் இந்த கயல்விழி?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் அவருடைய மனைவி கயல்விழி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் குறித்து தேடுதலும் நடந்து வருகிறது.
இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்பட்டவர் சீமான். அவர் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தனது கொந்தளிப்பு பேச்சுகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். சீமான் கட்சி ஆரம்பித்ததும் அந்த இளைஞர்கள் அப்படியே தொண்டர்களாகிவிட்டனர்.

2016ஆம்ஆண்டு முதல் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் சீமானின் கட்சி போட்டியிட்டு தோல்வி அடைந்த போதிலும் அவரது கட்சியின் வாக்கு வங்கியானது கணிசமாகவே உள்ளது.
இப்படிப்பட்ட சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். வாழ்த்துகள் திரைப்படத்தின் போது 2007ஆம் ஆண்டு சீமானுடன் தனக்கு உறவு ஏற்பட்டதாக விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். அது போல் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் அவர் போலீஸில் 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
அப்போது முதல் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே சமூகவலைதளங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. அவ்வப்போது விஜயலட்சுமியை சீமானின் தம்பிகள் கடுமையாகவும் ஆபாசமாகவும் விமர்சித்து வந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்திருந்தார்.
இந்த பிரச்சினை அவ்வப்போது தலைத்தூக்கும். சீமான் குறித்து விஜயலட்சுமி குற்றம்சாட்டுவதும் அதற்கு தம்பிகள் ரியாக்ஷன் செய்வதுமாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி நேற்று சீமான் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்தது உண்மைதான். அவரால் அவமானப்பட்டு நிற்கிறேன்.
அவரை கைது செய்யும் வரை எனது போராட்டம் தொடரும் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் சீமான் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
திமிரு பிடித்த அகங்காரம் பிடித்த ஒருத்தருடன் நான் வாழ்ந்து இருக்கிறேன். அந்த திமிரை எப்படி அடக்குவது என எனக்கு தெரியும். சீமானை அடக்குவோம் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சீமானின் மனைவி யார் என தேடல் கூகுளில் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு என்ற மகன் இருக்கிறார்.
சீமானுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு கயல்விழியுடன் திருமணம் நடந்தது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பழ நெடுமாறன் தலைமையில் இந்த திருமணம் நடந்தது. சீமானின் மனைவி அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள்தான். காளிமுத்துவுக்கு இரண்டு மனைவிகள்.
நிர்மலா, மனோரி என்ற இரு மனைவிகளில் நிர்மலாவுக்கு இரு மகன்களும் 3 மகள்களும், இரண்டாவது மனைவிக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். இதில் கயல்விழி இரண்டாவது மனைவி மனோகரிக்கும் காளிமுத்துவுக்கும் பிறந்தவர். தமிழகம் தமிழர்களுக்கே என முழங்கி வரும் சீமானின் மாமியார் தெலுங்கு விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர். கயல்விழி எதை சொன்னாலும் அதை சீமான் தட்டமாட்டார் என கயல்விழி ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். ஆனால் கட்சி என வந்துவிட்டால் தன்னையும் தனது மகனையும் மறந்துவிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில் கயல்விழி கூறிய போது எங்காவது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் இரவு வெகுநேரம் ஆகிவிட்டால் எனக்கு போன் செய்து முடித்துவிட்டேன், இதே கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு நாம் தமிழர் என கூறிதான் போனை வைப்பார் என கூறியிருந்தார். இதற்கு சிரிப்பலை எழுந்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications