மச்சான் கம்யூனிஸ்ட் எம்.பி.. மாமா, அப்பா முன்னாள் எம்.பிக்கள்.. யார் இந்த பாஜக வேட்பாளர் SGM ரமேஷ்?
சென்னை: நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் எஸ்.ஜி.எம்.ரமேஷ். இவர் பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரமேஷின் அப்பா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியாக இருந்தவர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் முடித்துள்ளன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், கட்சிகள் பரப்புரையை தொடங்கிவிட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதேபோல் அதிமுக கூட்டணியிலும் அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
பாஜக வேட்பாளர்கள்: பாஜக கூட்டணியில் புதுச்சேரி உட்பட பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது. இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
நாகை வேட்பாளர்: அதன்படி, நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் எஸ்.ஜி.எம். ரமேஷ். நாகை மாவட்ட பாஜகவின் முக்கிய புள்ளியாக இருந்து வரும் ரமேஷ், நாகை வேட்பாளராக பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் களமிறங்குகிறார்.
யார் இந்த எஸ்.ஜி.எம் ரமேஷ்?: திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியை சேர்ந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி எஸ்.ஜி. முருகையனின் மகன் தான் எஸ்.ஜி.எம்.ரமேஷ். எஸ்.ஜி.முருகையன் மன்னார்குடி பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் முக்கிய தலைவராக இருந்தார். எம்.பியாக இருந்தபோதே படுகொலை செய்யப்பட்டார்.
அரசியல் குடும்பம்: அ.தி.மு.கவில் திருவாரூர் எம்.ஜி.ஆர் இளைஞர் பேரவை துணைத் தலைவராக இருந்தவர். இவரது மைத்துனர்தான் தற்போது நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியாக இருக்கும் செல்வராஜ். போதாக்குறைக்கு எஸ்.ஜி.எம் ரமேஷின் மாமனார் தி.மு.க விவசாய அணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன். இப்படி இவர்களது குடும்பமே பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம்.
லோக்கல் செல்வாக்கு பெற்றுள்ள ரமேஷ், கடந்த 2022ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். ரமேஷ் பாஜகவில் இணைந்த பிறகு நாகை மாவட்டத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டி கெத்து காட்டி வருகிறார். அவரது செல்வாக்கைப் பார்த்து பா.ஜ.கவினரே புருவத்தை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் ரமேஷ். நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி. செல்வராஜ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் களம் காண்கிறார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய சுர்ஜித் சங்கர் கடந்த மாதம்தான் அதிமுகவில் இணைந்தார். தற்போது ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக உள்ளார். அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக முழுமையான வேட்பாளர் பட்டியல்:
தென்சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய சென்னை - வினோத் பி செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (கூட்டணி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
கோவை - அண்ணாமலை
நீலகிரி - எல்.முருகன்
பெரம்பலூர் - பாரிவேந்தர் (கூட்டணி)
நெல்லை - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
திருவள்ளூர் - பால கணபதி
சென்னை வடக்கு - பால் கனகராஜ்
திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
நாமக்கல் - கே.பி ராமலிங்கம்
திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்
பொள்ளாச்சி - வசந்த ராஜன்
கரூர் - செந்தில்நாதன்
சிதம்பரம் - கார்த்தியாயினி
நாகை - எஸ்.ஜி.எம் ரமேஷ்
தென்காசி - ஜான் பாண்டியன்
தஞ்சாவூர் - எம்.முருகானந்தம்
சிவகங்கை - தேவநாதன் யாதவ்
மதுரை - ராம சீனிவாசன்
விருதுநகர் - ராதிகா சரத்குமார்
புதுச்சேரி - நமச்சிவாயம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
வரிந்து கட்டி வந்த எடப்பாடி, அண்ணாமலை.. ஆதவ் பெயரை சொல்லாமல் அட்டாக்! பின்னணியில் ரஜினி கணக்கு?! -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
செந்தில் பாலாஜி பதட்டமாக இருக்கிறார்.. கரூரில் ஈரோடு பாணியில் நடக்கும் சம்பவம்.. அண்ணாமலை பேட்டி












Click it and Unblock the Notifications