90ஸ் கிட்.. லோக்சபா தேர்தலில்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இளம் பெண்.. யார் இவர்?
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் களேபரத்தில் சோபியா ஃபிர்தௌஸ் என்ற இளம் பெண் மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
இந்த களேபரங்களுக்கு இடையில்தான் சோபியா கவனம் பெற்றுள்ளார். சோபியா ஃபிர்தௌஸ் 1992ல் பிறந்த ஒரு 90ஸ் கிட். அரசியலுக்கு புதியவர். 2024 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாராபதி-கட்டாக் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இவர் களமிறக்கப்பட்டார். இஸ்லாமியரான இவர் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர்.
சோபியா ஃபிர்தௌஸ் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் ஒடிசாவில் மெஹந்திபூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ எம்.எம். மோகிமின் மகள் ஆவார். இவருக்கு காங்கிரஸ் நிர்வாகி ஷேக் மைராஜுல் ஹேக் உடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
2007 இல் கட்டாக்கில் உள்ள செயின்ட் ஜோசப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஐசிஎஸ்இ முடித்தார். அதற்கு முன்பு 2009 இல் கட்டாக்கில் உள்ள ராவன்ஷா ஜூனியர் கல்லூரியில் பிளஸ் டூ படித்தார்.
பின்னர், பி.டெக். 2013 இல் புவனேஸ்வரில் உள்ள KIIT பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங் படித்தார். 2022 இல் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எக்ஸிகியூட்டிவ் ஜெனரல் மேனேஜ்மென்ட் திட்டத்தையும் செய்தார்.
சரி அதெல்லாம் இருக்கும் பாஸ்.. இவர் யார் என்று கேட்கிறீர்களா? 2024 லோக்சபா தேர்தல் களேபரத்தில் இந்த சோபியா ஃபிர்தௌஸ் என்ற இளம் பெண் மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஒடிசாவில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி ஆவார்.
ஒடிசாவில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் யாரும் எம்எல்ஏ ஆனதே இல்லை. முதல்முறையாக இந்த சாதனையை படைத்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
2024 ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சோபியா தனது அரசியல் வெற்றியை தொடங்கி உள்ளார். அவரின் வெற்றி அம்மாநிலத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications