போர் கண்ட பெண் சிங்கம்! செஸ் ஒலிம்பியாட்டை புரட்டி போட்ட 8 வயது "பாலஸ்தீன" சிறுமி! கலங்கடிக்கும் கதை
சென்னை செஸ் ஒலிம்பியாட் 44வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்தபடியே இந்த முறை இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது.
Recommended Video
இதில் மொத்தம் 6 இந்திய அணி ஆடுகிறது. இதில் 3 அணிகள் பெண்கள் பிரிவு அணியாகும். இதுவரை இரண்டு சுற்று போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன.
இன்று மூன்றாவது சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. முதல் இரண்டு சுற்று போட்டிகளிலும் இதுவரை இந்திய அணி வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

ஆதிக்கம்
முதல் இரண்டு சுற்றில் பிரக்யானந்த உட்பட 5 வீரர்கள் வெற்றிபெற்றுள்ளனர். பி டீம் எதிர்பார்த்தபடியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேபோல் கார்த்திகேயன் முரளி, அதிபன் பாஸ்கரன் ஆகியோரும் நேற்று வெற்றிபெற்றனர். பெண்கள் பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நந்திதா வெற்றிபெற்றார். இவர் முன்னாள் அண்ணா பல்கலை மாணவர் ஆவார். இன்றும் நடக்கும் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதேபோல் வெற்றிகளை குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 வயது சிறுமி
இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலக்கி வரும் அதே நேரத்தில் 8 வயது பாலஸ்தீன சிறுமி ஒருவர் மொத்த தொடரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தொடருக்கு வந்த வீரர், வீராங்கனைகள் யார் இது என்று உற்று கவனிக்கும் அளவிற்கும் இந்த 8 வயது பாலஸ்தீன சிறுமி ஆடி வருகிறார். மீடியாக்களின் கேமராக்களை தன் பக்கம் திருப்பி உள்ள அந்த சிறுமி யார்? அவர் செய்தது என்ன? பார்க்கலாம் வாங்க!

யார் இவர்?
இந்த தொடரில் பாலஸ்தீன ஓபன் அணி சார்பாக களமிறங்கி உள்ளவர்தான் ராண்டா செடார். ராண்டாவிற்கு 8 வயதுதான் ஆகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். அங்கு உள்ளூர் அணிகளில் ஆடி வந்தவர், தேசிய அளவில் கடந்த 2 வருடங்களாக அதிகம் கவனிக்கப்பட்டார். தேசிய அளவில் பிரபலமாக இருந்த பெண் சாம்பியன்ஷிப் அணிகளை வீழ்த்திவிட்டு இவர் டாப் இடத்திற்கு வந்தார். தேசிய அளவில் தொடர்ந்து 1 அல்லது 2 வது இடத்தில் ராண்டா இருந்து வருகிறார்.

ராண்டா
இந்த நிலையில் சமீபத்தில் அங்கு தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் அடுத்தடுத்து வெற்றிபெற்றவர் கடைசி போட்டியில் தோல்வி அடைந்தார். கடைசி இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் வென்றாலும்.. தேசிய சாம்பியன்ஷிப்பில் 2வது இடத்தை 8 வயது சிறுமி பிடிப்பது எல்லாம் சாதாரண காரியம் கிடையாது. ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் ஜூடித் போல்காரை பார்த்து வளர்ந்த ராண்டா.. அவரின் மூவ்களை பார்த்து பார்த்து.. அவரை போலவே ஆட தொடங்கி இருக்கிறார்.

மூவ்கள்
இவரின் மூவ்களில் கூட ஜூடித் போல்காரின் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சின்ன வயதில் இருந்தே செஸ் ஆடி வந்தார். ராண்டா மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் வீடு இருக்கும் ஹெப்ரான் பகுதியும் கடுமையாக போரால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். பல முறை அகதிகள் கேம்பில், பள்ளியில் தூங்கி, உயிரை காப்பாற்றிக்கொண்டு இவர் செஸ் ஆடி இருக்கிறார். போரில் இருந்து மகளின் கவனத்தை திருப்பி வேண்டும் என்பதற்காக இவரின் தந்தை செஸ் கற்றுக்கொடுத்துள்ளார்.

செஸ் போட்டி
இதனால் 4 வயதிலேயே காய்களை நகர்த்த தொடங்கிய ராண்டா இப்போது பாலஸ்தீன அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு போட்டிகளில் ஆடியவர் இப்போது தேசிய அளவில் அங்கு சிறந்த பெண் வீரர். இந்த தொடரில் ஹங்கேரி வீராங்கனை ஜூடித்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்தியாவிற்கு வர தீவிரமாக ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் இவரின் ரேங்க் 98388.. இவரின் பிறந்த வருடம் 2014!

சென்னை ஒலிம்பியாட்
தனது கலைந்த முடி.. போர் பற்றிய சுவடே இல்லாத க்யூட் முகம்.. இவர் நடந்து வரும் ஸ்டைல் எல்லாம் சென்னை ஒலிம்பியாட்டை புரட்டி போட்டுள்ளது. 3 நாட்களிலேயே அங்கு இருக்கும் பலருக்கும் செல்ல குட்டியாக ராண்டா மாறிவிட்டார். அதிலும் முதல் போட்டியிலேயே கோமோரோஸ் அணியை வீழ்த்தி.. நான் வெறும் செல்லக்குட்டி அல்ல.. செஸ் குட்டி என்பதை நிரூபித்து இருக்கிறார் இந்த போர் கண்ட பெண் சிங்கம்!
-
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications