"பிக் நேம்".. சென்னைக்கு வருகிறது மிகப்பெரிய நிறுவனம்.. சீனாவா? ஆகா விடிவு காலம் பிறக்க போகுதே!
சென்னை: சென்னை மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலையை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு தொழிற்துறை சில பெரிய நிறுவனங்களுடன் பேசி வருகிறதாம்.
அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் திரு. என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அப்போதைய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இருந்தனர்.
இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, டாடாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.. ஆனால் இந்த சந்திப்பு பெரிதாக பலன் அளிக்கவில்லை.
இதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த தொழிற்சாலையை வாங்குவதற்கான கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடைபெற்றன. ஆனால் கடைசியில் டாட்டா நிறுவனம் குஜராத்தில் இருக்கும் போர்ட் நிறுவனத்தை வாங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் உள்ள போர்ட் ஆலை யாராலும் வாங்கப்படாமல் முடங்கியது. இதையடுத்து இந்த இடத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்யவும் ஆலோசனை செய்யப்பட்டது.
பிக் நேம்: அதே சமயம் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமும் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியது. சென்னை மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலையை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு தொழிற்துறை சில பெரிய நிறுவனங்களுடன் பேசி வருகிறதாம். சில "பிக் நேம்" அதாவது பெரிய நிறுவனங்களுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்த தொழிற்சாலையை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிஒய்டி: பிஒய்டி சீனாவில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது போர்ட் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறதாம். இந்தியாவில் அவர்கள் விற்பனையை விரிவுபடுத்த உள்ள நிலையில், போர்ட் தொழிற்சாலையை வாங்க ஆலோசனை செய்து வருகிறார்களாம். அப்படி அந்த நிறுவனம் வரும் பட்சத்தில் அது தமிழ்நாட்டிற்கும், சென்னைக்கும் மிகப்பெரிய குட் நியூஸாக இருக்கும். ஆனால் இது சீன நிறுவனம் என்பதால் சில அனுமதிகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
முதலீடுகள்: தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா காரணமாக லாக் டவுன் இருந்த 2021 இறுதி கட்டங்களிலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும். இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications