"அல்டிமேட்".. பாஜக வேட்பாளர் "அவர்" தானாமே.. பக்குனு கிளம்பிய புது சிக்கல்.. எடப்பாடிக்கு யோகம்தான்
முருகானந்தம் பாஜக வேட்பாளராக அறிவிக்க பெருமளவு வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்
சென்னை: இடைத்தேர்தலில் கிட்டத்தட்ட பெரும்பாலான கட்சிகள் மும்முரமாகிவிட்டன.. இதில் பாஜகவின் முடிவு மட்டும் என்னவாக இருக்க போகிறது என்ற டென்ஷன், எகிறி கொண்டிருக்கிறது.
இடைத்தேர்தலில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இரு தரப்புமே களத்தில் இறங்கி உள்ளது..இந்த விவகாரத்தில் பாஜகவின் ரோல் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது..
யாருக்கு பாஜக ஆதரவு என்பதில், எத்தனையோ அனுமானங்களும், வதந்திகளும், தகவல்களும், வியூகங்களும் இணையத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே, ரவுண்டு கட்டி வருகின்றன..

காய்நகர்த்தல்
எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில், அவருக்கு ஆதரவு தரலாம் என்று பாஜக கணக்கு போட்டுவந்த நிலையில், அதற்கு சிக்கலாகி உள்ளது.. காரணம், பாஜக போட்டியிட்டால், ஆதரவு தர தயார் என்று ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துவிட்டார்.. உடனே, பாஜவுக்கு எங்கள் ஆதரவு என்று புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக்கழகம் போன்ற கட்சிகளும் அறிவித்தது, இந்த விவகாரத்தில் ட்விஸ்ட்டாக மாறியது.. பாஜகவை பொறுத்தவரை, எம்பி தேர்தலை மனதில் முன்னிறுத்தியே காய்களை நகர்த்தி வருகிறது.

அசையும் களம்
இவர்கள் 2 பேரில் யாராவது ஒருவருக்கு ஆதரவை வழங்கினால், அது எம்பி தேர்தல் களத்தை அசைத்து பார்த்துவிடும் என்பதால், நடுநிலை நிலைப்பாட்டை எடுக்கவே வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.. அதேசமயம், தமிழக பாஜக நினைத்திருந்தால், அன்றே களமிறங்கி, வேட்பாளரை நிறுத்தியிருக்கக்கூடும்.. மேலும், தேமுதிக, டிடிவி தினகரன், போன்றோர்களின் ஆதரவை பெற்று வேட்பாளர்களை நிறுத்தி, எடப்பாடிக்கே டஃப் தந்திருக்கக்கூடும்.. ஆனால், அப்படி எந்த முடிவையும் பாஜக எடுக்காமல் இருந்தது.. இந்நிலையில், நேற்றைய தினம், ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்தார்.

டஃப் எடப்பாடி
அதேசமயம், பாஜகவிடம் தேர்தலுக்காக ஆதரவு கோரியுள்ளோம் என்றும், ஒருவேளை அவர்கள் வேட்பாளரை அறிவித்தால் தங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.. இதனால், பாஜக, அநேகமாக ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், தமிழக பாஜக போட்டியிடுவது குறித்து, கடந்த ஒரு வார காலமாகவே ஆலோசனைகள் நடந்துவந்தன.. பாஜக தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்ற யூகமும் கிளம்பியது. அந்தவகையில், நேற்றைய தினம் மாநில பாஜக வேளாண் செயலாளர் ஜிகே நாகராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

முருகானந்தம்
இப்போது, மூத்த தலைவர் பி முருகானந்தம் பெயர் வலுவாக அடிபட துவங்கி உள்ளது.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோரின் ஆதரவோடு களம் காண போகிறதாம் பாஜக.. இதற்கான வியூகமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல இன்னொரு தகவலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ள நிலையில், புது சிக்கலும் கிளம்பி உள்ளதாம்..

பூத் கமிட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் 258 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் பாஜகவிற்கு அதில் பாதியளவில் கூட பூத் கமிட்டி இல்லை என்ற விவரம் டெல்லிக்கு பாஸ் செய்யப்பட்டதாம்.. பூத் கமிட்டியே இல்லாத தொகுதியில் போட்டியிட்டு அவமானப்பட வேண்டாம்.. எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலுக்காக பாஜகவைப் புறக்கணித்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது ஆதரவு கண்டிப்பாகத் தேவை. அதனால், எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அறிக்கை அளித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாமல் இருப்பது அல்லது இடைத்தேர்தலை புறக்கணிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications