திமுக கூட்டணி உடைகிறதா? கதர் கட்சியில் இருந்து விஜய்யை சந்தித்தார்களா? சரியான ரூட்டில் போகுதா தவெக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்ஐஆரை கையில் எடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.. அந்தவகையில் இப்போதுதான் சரியான ரூட்டில் விஜய் செல்கிறார்.. இந்த வேகத்துடன் தேர்தல் வரை அவர் பயணிக்க வேண்டும்.. அடிக்கடி வெளியே வரவேண்டும்.. ரூமுக்குள்ளேயே தலைவர்களுக்கு மாலை போட்டுக் கொண்டிருந்தால் அவரது ரசிகர்களுக்கே அது சலிப்பாகிவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.

Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான வலைப்பேச்சு அந்தணன், எஸ்ஐஆருக்கு எதிராக தவெக போராட்டம் செய்துள்ளது.. இதைத்தானே எல்லாருமே வலியுறுத்தினோம்.

Congress Vijay TVK

பனையூர் பங்களாவில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போடுவது, ட்விட்டரில் அரசியல் செய்வது இதையெல்லாம் விட்டுவிட்டு, மக்களுடன் சேர்ந்து அரசியல் செய்யுங்கள் என்றுதானே பலரும் சொன்னார்கள்.. இப்படித்தான் வெளியே வந்து அரசியல் செய்ய வேண்டும்.

வெளியே வந்துள்ள விஜய்

எப்போதுமே அரசியல் கட்சிகள், தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாட்களை பயன்படுத்திக்கொள்வார்கள். அதாவது மாலை போடுவது, கூட்டம் நடத்துவது, ஊர்வல செல்வது என பொதுமக்கள் பார்க்கும்படியான, அவர்களை ஈர்க்கும்படியான செயலை செய்வார்கள்..

எனவே பனையூரில் நாலு சுவற்றுக்குள் தலைவர்களின் படங்களுக்கு மாறி மாறி மாலை போடுவது அரசியல் கிடையாது என்பதை விஜய் உணர்ந்துள்ளார்..

அடுத்தக்கட்டமாக எஸ்ஐஆரை கையில் எடுத்துள்ளார்.. அந்தவகையில் இப்போதுதான் சரியான ரூட்டில் விஜய் செல்கிறார்.. இந்த வேகத்துடன் தேர்தல் வரை அவர் பயணிக்க வேண்டும்.. அடிக்கடி வெளியே வரவேண்டும்.. ரூமுக்குள்ளேயே தலைவர்களுக்கு மாலை போட்டுக் கொண்டிருந்தால் அவரது ரசிகர்களுக்கே அது சலிப்பாகிவிடும்.

பாஜக, திமுக தவிர,

சமீபத்தில் அருண்ராஜா பேட்டி தரும்போது, "கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.. தவெக தலைமையை ஏற்று வரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.. பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக, பிஜேபியை தவிர என்று சொல்லிவிட்டதால், தவெகவுடன் கூட்டணி வைப்பது அதிமுகவும் சந்தேகம்தான். பாஜக கூட்டணியை விட்டு, அதிமுக இதற்கு பிறகு வெளியே வருவதற்கு சாத்தியமில்லை.. அப்படியே வெளிவந்தாலும் கடைசி நேரத்தில் விஜய் கைவிட்டுவிட்டால் என்னாவது? அதனால் அப்படியொரு தவறை அதிமுக செய்யாது..

நாம் தமிழர், டிடிவி தினகரன்

அப்படியிருக்கும்போது, நாம் தமிழர் கட்சி வந்தால் தவெக சேர்த்து கொள்வார்களா? தெரியவில்லை.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் இவர்கள் எல்லாம் சேர்ந்த அணி வேண்டுமானால் தவெகவுடன் சேர வாய்ப்புள்ளது..

ஏனென்றால் விஜய்க்கு ஆதரவு தரும் அளவுக்குதான் டிடிவி தினகரனின் பேச்சும் அமைந்து வருகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து அணி அமைத்து விஜய் கூட செல்ல வாய்ப்புள்ளது. அந்தவகையில் இவர்களுக்கும் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.. பலஊர்களில் ஜாதி பலமும், தனிப்பட்ட செல்வாக்கும் இருக்கவே செய்கிறது.

விஜய் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

மற்றொருபுறம் காங்கிரசுடன் விஜய்க்கு பேச்சுவார்த்தை நடப்பதாக பேச்சு ஓடுகிறது..இது பெரும்பாலும் சாத்தியமில்லைதான். எனினும், டெல்லியில் இருந்து சில காங்கிரஸ் தலைவர்கள் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. எதுவுமே இல்லாமல் எதுக்காக விஜய்யிடம் பேச வேண்டும்?

ஏதோ ஒரு ஐடியா இருப்பதுபோல தெரிகிறது.. ஆனால் அரசியலில் ஆயிரம் பேசலாம்.. ஆனால் உண்மைதன்மை தெரியாது.

அவ்வளவு பெரிய கட்சியான திமுகவை விட்டு காங்கிரஸ் வெளியே வரவேண்டுமானால், போதுமான உத்தரவாதம் விஜய்யிடமிருந்து கேட்கும்.. அத்துடன், சீட், லாப-நஷ்டம் போன்ற கணக்குகளை பார்த்துதான் திமுகவிலிருந்து வெளியே வருவார்கள்.. ஆனால் இப்போதைக்கு 2ம் கட்ட தலைவர்கள்தான் விஜய் தரப்பை சந்தித்து விட்டு போனதாக தெரிகிறது. ஒருவேளை திமுகவிடம் இதைக்காட்டியே அதிக சீட் காங்கிரஸ் கேட்கலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+