சென்னை மாநகராட்சி துணை மேயர் யார்? பரபரக்கும் மறைமுகத் தேர்தல்! திமுகவில் வரிந்துகட்டும் இருவர்!
சென்னை: சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான போட்டியில் திமுகவின் இரண்டு முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.
சிற்றரசு, கே.கே.நகர் தனசேகரன் ஆகியோரில் ஒருவர் சென்னை மாநகராட்சியின் துணை மேயராக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கே.கே.நகர் தனசேகரனை பொறுத்தவரை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி மேயர் பதவியானது பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதற்கு அடுத்த நிலையில் உள்ள துணை மேயர் பதவியில் யார் அமரப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், உதயநிதி ஸ்டாலினின் நெருக்கமான வட்டத்தில் இருப்பவருமான சிற்றரசுவுக்கு தான் சென்னை துணை மேயர் பதவி எனக் கூறப்பட்டு வந்த நிலையில் புதிய போட்டியாக வந்து நிற்கிறார் கே.கே.நகர் பகுதி முன்னாள் செயலாளரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.கே.நகர் தனசேகரன்.

ஸ்டாலின் சமாதானம்
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே விருகம்பாக்கம் தொகுதியை எதிர்பார்த்து அது கிடைக்காத காரணத்தால், தனது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக கூறி அண்ணா அறிவாலயத்தில் தனது உள்ளக்குமுறலை கொட்டியவர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் திமுகவுக்கு மிகப்பெரிய அளவில் வாக்குவங்கியை கட்டமைத்த தனக்கு தலைமை சீட் கொடுக்காதது வருத்தமளிப்பதாக கண்ணீர் வடித்தார். பிறகு ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் தலையிட்டு பேசி கே.கே.நகர் தனசேகரனை சமாதானம் செய்தனர்.

துணை மேயர்
இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிபெற்றிருக்கும் தனசேகரன், சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதற்காக தென் சென்னை மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மா.சுப்ரமணியத்துடன் தனக்கிருக்கும் மனக்கசப்புகளையும் மறந்து அவருடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறாராம்.

பலரும் எதிர்பார்ப்பு
சிற்றரசு, கே.கே.நகர் தனசேகரனை போல் மேலும் சில முக்கியப் பிரமுகர்களான இளைய அருணா, மதன்குமார், மகேஷ்குமார், ராஜா அன்பழகன் என பலரும் துணை மேயர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications