யார் சைத்தான்?.. சைத்தான்களை விரட்டவந்தவர்கள் நாங்கள்.. திண்டுக்கல் சீனிவாசனுக்கு அண்ணாமலை பதிலடி
சென்னை: சைத்தானை எதிர்ப்பதாலேயே பாஜக மீது சிலருக்கு கோபம் ஏற்பட்டுள்ளதாக அண்ணாமலை பதிலளித்துள்ளார். நாங்கள் சைத்தான்களை விரட்ட வந்தவர்கள் என்றும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அறிவித்தார். இதனை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ததை அடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், மேடைக்கு மேடை அதிமுக தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், சைத்தான் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி உங்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்போ அந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். இனிமேல் பள்ளிவாசல் தெரு, அரசமரத்து தெரு, ஜமாத் தெருவாக இருந்தாலும் சரி, இனி பாஜக உடன் கூட்டணி இருப்பவர்கள் ஓட்டு கேட்டு வராதே என்று இனி யாரும் சொல்ல மாட்டார்கள் என்று கூறினார்.
பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி. கூட்டணி முறிவால் எடப்பாடி பழனிசாமி 1000 மடங்கு மகிழ்ச்சியாக உள்ளார். இனி செத்தாலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அக்குடும்ப்பதாரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மோகன்ராஜ் குடும்பத்தார் சமுதாயத்தை குடி எந்த அளவிற்கு அழிக்கும் என்பதற்கு உதாரணம். அவர்களது குழந்தைகளின் கல்வி செலவை பாஜக ஏற்கும். ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் போலி ரசீது , அவருக்கு சொந்தமான இடங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டதில் 1,225 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் ஆலையில் இருந்து 52 லட்சம் கேஸ் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடும் போதுதான் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடையும். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதால் அவர்களை கண்காணிக்க காவல்துறை தவறிவிட்டது. மேலும் குடி அவர்களை மிருகத்தை விட மோசமாக மாற்றி விட்டது என்று கூறினார்.
மோகன்ராஜ் குடும்பத்தார் சமுதாயத்தை குடி எந்த அளவிற்கு அழிக்கும் என்பதற்கு உதாரணம். அவர்களது குழந்தைகளின் கல்வி செலவை பாஜக ஏற்கும் என்று தெரிவித்தார்.
ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் போலி ரசீது , அவருக்கு சொந்தமான இடங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டதில் 1,225 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தளவிற்கு கருப்பு பணம் பரவுகிறது என்பதற்கு ஜெகத் ரட்சகன் வரி ஏய்ப்பு ஒரு உதாரணம் எம் பியாகவும் உள்ளார் என அண்ணாமலை குறிப்பிட்டார்.
ஜெகத்ரட்சகன் ஆலையில் இருந்து 52 லட்சம் கேஸ் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடும் போதுதான் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடையும். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதால் அவர்களை கண்காணிக்க காவல்துறை தவறிவிட்டது. மேலும் குடி அவர்களை மிருகத்தை விட மோசமாக மாற்றி விட்டது என்றும் கூறினார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி தொடர்பாக பேசும் போது செந்தில் பாலாஜி ஜாமீன் தள்ளுபடிக்கு நீதிமன்றம் சொன்ன காரணங்களில் அவர் அமைச்சர் பதவியில் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது, இப்பவாது முதல்வர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்,
திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் தொடர்பாக பேசிய அவர் நாங்கள் சைத்தான்கள் இல்லை குடியானவர்கள் , விவசாயிகள், தொழில்துறையினர் நாங்கள் சைத்தான்களை விரட்ட வந்தவர்கள் என்று கூறினார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications