தூண்டிலை வடக்கே வீசிய ஸ்டாலின்.. "இவர்"தான் பிரதமரா? பாஜகவை கலங்கடிக்கும் "இந்தியா கூட்டணி" மீட்டிங்
சென்னை: டெல்லியில் நடைபெற போகும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதேபோல இந்தியா கூட்டணியின் ஒவ்வொரு நகர்வையும் பாஜகவும் உற்றுகவனித்து வருகிறதாம்.
லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது.. தேர்தல் முடிவுகள் எப்படியிருக்க போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், நாளுக்கு நாள் இந்தியா கூட்டணியின் நம்பிக்கையானது அதிகரித்தபடியே வருகிறது.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில், வருகிற 1-ம் தேதி மாலை 3 மணிக்கு, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.. டெல்லியில் நடக்கும் இந்த கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்க போகிறார்கள்.. இறுதிகட்ட தேர்தல் காரணமாக மம்தா பானர்ஜி இதில் பங்கேற்கவில்லை..
சந்தேகம்: திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றாலும், முதல்வர் ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பாரா? என்ற ஆவல் கடந்த 2 நாட்களாகவே வலம்வந்தது.. அதுமட்டுமல்ல, ஒருவேளை 1ம் தேதிக்கு பதில் 2 அல்லது 3 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டால், அதில் ஸ்டாலின் பங்கேற்க வாய்ப்பிருக்குமா? என்றும் சந்தேகம் கிளம்பியது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 1-ம் தேதி காலை 7 மணிக்கு டெல்லி புறப்படுகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.. அதுமட்டுமல்ல, ஆலோசனை கூட்டம் எப்போது நடைபெற்றாலும் முதல்வர் ஸ்டாலின் அந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று திமுக வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன.
காரணங்கள்: இதனிடையே, தேர்தலின் இறுதிக்கட்டத்தின்போது, இப்படியொரு கூட்டத்தை, இந்தியா கூட்டணி அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்த 2 விதமான தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதாவது, தங்களுக்கு சாதகமாகவே ரிசல்ட் வரக்கூடும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்களாம்.. அதனால்தான், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் கூட்டியிருப்பதாக சொல்கிறார்கள்..
பாஜக தெம்பு: அதுமட்டுமல்ல, "100 இடங்களைகூட காங்கிரஸ் பிடிக்காது என்று சொல்லியிருக்கிறார்" பிரசாந்த் கிஷோர் .. 260 இடங்கள் வரை பாஜக பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறார் யோகேந்திர யாதவ்.. இந்த 2 கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு மிகப்பெரிய தெம்பினை தந்துவரும்நிலையில், அந்த நம்பிக்கையை குலைப்பதுபோல, ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கிறதாம் இந்தியா கூட்டணி.
"அந்தந்த மாநில தலைவர்கள் ஒத்துழைப்புடன் களப்பணியில் ஈடுபடலாம், அடுத்தக்கட்ட தேர்தலுக்கான களப்பணியாக இது அமையும்" என்று இந்தியா கூட்டணி தலைவர்களிடம் திமுக முன்னதாக வலியுறுத்தியிருந்ததையடுத்து, இந்த கூட்டத்தை நடத்த உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
கெஜ்ரிவால்: இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. வருகிற 1ம் தேதி வரைதான் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துள்ளதாம். மறுநாளே அவர் திகார் சிறைக்கு திரும்ப வேண்டுமாம்.. எனவே, கெஜ்ரிவாலும் பங்கேற்க வசதியாகத்தான் கூட்டணியின் ஆலோசனைக்கு தேதி குறிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், யார் பிரதமராக பதவி ஏற்பது? கூட்டணி அமைச்சரவையை வழிநடத்தி செல்வது யார்? கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டம் என்ன? இது குறித்தெல்லாம் ஆலோசிக்க உள்ள நிலையில், இந்த கூட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது..
மிகப்பெரிய ஆவல்: பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என்று கெஜ்ரிவால் ஏற்கனவே சொல்லிவிட்டார். ஆனால், கார்கேவை பிரதமராக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் ஏற்கனவே முன்மொழிந்திருக்கிறார்!
அதேபோல, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் விலகி தனியாக தேர்தலை சந்தித்தாலும், ஆட்சி அமைக்கும்போது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறது.
அதேபோல, இந்தியா கூட்டணி அட்சி அமைத்தால், தேர்தல் முடிவுகள் வெளியாகி அடுத்த மூன்றே நாட்களில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. எனவே, பிரதமர் பதவிக்கு இதில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமே தென்பட்டு வருகிறது..
4 நாட்களுக்கு முன்பு மூத்த தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் மு.க.ஸ்டாலின் ஆள வந்துவிடுவார் என்கிறார் பிரதமர்.. ஏன்? மு.க. ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு?" என்று திராவிடர் கழக தலைவர் கேள்வியிருப்பியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications