"நிஜம் நிழலாகிறது".. எடப்பாடியையே முந்திக்கிட்டு வந்துட்டாருல்ல.. பாஜகவில் புயல்.. திமுகவுக்கு தலைவலி
சென்னை: தமிழ்நாடு அரசியல் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.. அத்துடன் திமுக அரசுக்கு எதிரான கட்சிகளின் அதிரடிகளும், மெல்ல மெல்ல துவங்கி உள்ளன.. இதற்கு திமுக என்ன பதிலடியை தரப்போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது..!!
கடந்த 2 வருட காலமாகவே அதிமுகவில் சூழல் சரியில்லை.. உட்கட்சிபூசல் தலைதூக்கவும் இது தொடர்பான செயல்பாடுகளிலேயே கவனத்தை அக்கட்சி செலுத்த வேண்டியதாக இருந்தது..
உட்கட்சி பூசல்: ஓபிஎஸ் விவகாரம், வழக்கு விசாரணைகளில் மூழ்க வேண்டியதாயிற்று.. இடைத்தேர்தலிலும் பெருத்த நன்மையை பெற முடியவில்லை.. தங்கள் விவகாரத்திலேயே பெரும்பாலான கவனத்தை அதிமுக தரப்பு செலுத்திக் கொண்டிருக்க, சைலண்ட்டாக மேலே எழுந்து வந்தது தமிழக பாஜக.. அதிமுகவின் பலவீனங்கள் பாஜகவுக்கு பலமாகி கொண்டே போனது.

தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்ற வாதத்தையும், வலுவாக முன்வைத்தது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் முன்னெடுத்தது.. அந்தவகையில், பாஜகவின் எழுச்சி கடந்த ஒரு வருடத்தில் அபரிமிதமாகவே வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது.. இது அதிமுகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. இப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும்கூட, தாங்கள்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பதை அதிமுக அழுத்தமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது..
எம்பி தேர்தல்: விரைவில் எம்பி தேர்தலும் வரப்போகிறது. இப்போதைக்கு ஒட்டுமொத்த அதிமுகவும் கையில் கிடைத்துள்ள நிலையில், முழு அதிகாரமும் எடப்பாடி வசம் சென்றுள்ளது.. எனவே, அதிமுகவின் செல்வாக்கையும், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுகவுக்கு மட்டுமல்லாமல், பாஜகவுக்கும் சேர்த்தே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.. கடந்த 4 நாட்களாகவே, திமுக அரசை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கள்ளச்சாராய விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைத்துவிட்டார்.. 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டியிருந்த நிலையில், திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டங்களை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அப்படி எதுவுமே முடிவாகவில்லை.

திருமாவளவன்: இதைத்தான் நேற்று, விசிக தலைவர் திருமாவளவனும் கேட்டிருந்தார்.. கள்ளச்சாராயம் இறப்பு விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மவுனமாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே.. மதுவிலக்குக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி இதுவரை போராட்டம் நடத்தியிருக்கிறாரா? அப்படி, மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால், அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக இருக்கிறது" என்றும் திருமாவளவன் அதிரடியாக அறிவித்தார்.
ஆனால், இதற்கு பதிலாக, அதிமுக வேறு வகையான போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.. கள்ளச்சாராயம் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை குறித்து அதிமுகவினர் தன்னுடைய தலைமையில் 22ம் தேதியன்று பேரணியாக சென்று, மனு கொடுக்கவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவும் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை துவங்கி உள்ளது. அதாவது, அதிமுகவிற்கு முன்னதாகவே, போராட்டத்தை நடத்தி பாஜக முடிவு செய்துவிட்டதாம்..
அதிரடி ட்வீட்: பாஜக தலைவர் அண்ணாமலையும் அதனை உறுதி செய்யும் வகையில், "தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜக சார்பில் வரும் 20-ம் தேதி (நாளை) மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்த போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'" என்று பதிவிட்டுள்ளார்..
மறுபடியும் போட்டி: கடந்த 2 மாதங்களாகவே, கர்நாடக தேர்தலில் அண்ணாமலை படுபிஸியாக இருந்தநிலையில், இப்போது மீண்டும் தமிழக அரசியலில் அவரது கவனம் குவிந்துள்ளது.. மீண்டும் திமுகவை டேமேஜ் செய்யும் போக்கும் ஆரம்பமாகியுள்ளது.. அத்துடன், தமிழ்நாட்டின் நிஜமான எதிர்க்கட்சி யார் என்ற போட்டியும் ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது.. அதிமுக, பாஜக என மாறி மாறி போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், இதில் கடுப்பாகி உள்ளது திமுகதான்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications