Robo Shankar: ரோபோ சங்கர், இந்திரஜாவுடன் போட்டோவில் இருக்கும் பெண்! யார் இவர்? உருக வைக்கும் பின்னணி
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் குடும்பம் பாசப்பிணைப்புகளுடன் இணைக்கப்பட்டது. இந்த வீட்டை விட்டு செல்ல மகள் திருமணம் செய்து கொண்டு மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்ட நிலையிலும் அவரது வீட்டில் இன்னொரு பெண் இருக்கிறாரே அவர் யார் தெரியுமா? ரோபோ சடலத்தை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தார்.
மதுரையைச் சேர்ந்த நடிகர் ரோபோ சங்கர் காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். அவருடைய உடலில் சில்வர் நிற பெயின்ட் அடித்துக் கொண்டு ரோபோ போல் நடனமாடியதால் அவர் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார்.
விஜய் டிவி
பின்னர் விஜய் டிவியில் கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர், மதுரை முத்து, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பிரபலமடைந்தனர். சுட்டி அரவிந்துடன் சேர்ந்து "ஒரு கிளி உருகுது" பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியது வரவேற்பை பெற்றது.
அது இது எது
மேலும் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய "அது இது எது" நிகழ்ச்சியில் "சிரிச்சா போச்சு" என்ற சுற்றில் ரோபோ சங்கரின் நகைச்சுவை இருக்கும். அவ்வாறு நகைச்சுவை செய்து போட்டியாளர்களை சிரிக்க வைத்து அவர்களை அவுட்டாக்க வேண்டும்.
ரோபோ சங்கர்
எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் போல் மிமிக்ரி செய்வதில் வல்லவர். கமலின் தீவிர ரசிகர். இப்படி எல்லா மக்களையும் சிரிக்க வைத்த ரோபோ சங்கர் நேற்று முன் தினம் (செப்.18) தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்திவிட்டார்.
இந்திரஜா
ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய வீட்டில் இன்னொரு மகள் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? ரோபோ வீட்டு விசேஷங்களில் இந்திரஜாவை போலவே உடை அணிந்திருப்பார்.
ரோபோ சங்கர்
ரோபோவுடன் நிறைய புகைப்படங்களில் இருப்பார். அவரை பார்க்கும் போது ரோபோ சங்கர் மாதிரியே இருப்பதால் அவர் அவருடைய 2ஆவது மகள் என்றே நினைப்பார்கள். ஆனால் அவர் மகள் இல்லை. யார் என்பதை பார்க்கலாம்.
யார் இந்த பெண்
இவர் ரோபோ சங்கரின் அண்ணன் மகள். ரோபோவுக்கு சிவராமன் என்ற ஒரு அண்ணன் இருக்கிறார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அந்த மகள்தான் இந்த இந்து சிவராமன். இந்திரஜாவுக்கு அக்காள் முறை. அவர் கல்லூரி முடித்ததில் இருந்து சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக ரோபோ சங்கர் வீட்டில்தான் வசித்து வருகிறார். இதை ஒரு முறை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பதிவிட்டிருந்தார்.
சித்தப்பா!
எனது அப்பாவை விட்டுகூட இருந்துவிடுவேன். ஆனால் சித்தப்பாவை விட்டு இருந்ததில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரோபோ சங்கருடனான புகைப்படத்தை போட்டு லவ் யூ சித்தப்பா என குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications