தமிழ்நாட்டில் மிக இளம் வயதில் நிதி அமைச்சராக இருந்தவர் யார் தெரியுமா? யார் எந்த வயதில்? முழு லிஸ்ட்!
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசுவுக்கு வயது 57. தமிழ்நாடு அமைச்சரவையில் மிக இளம் வயதில் நிதி அமைச்சரான பெருமை கொண்டவர் செ.மாதவன். அப்போது அவருக்கு வயது 34. ஆனால் சில நாட்கள் மட்டுமே அவர் நிதித்துறைக்கு பொறுப்பு வகித்தார். கே.ஏ.மதியழகன் தனது 43வது வயதில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.
மிக அதிக வயதில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் பேராசிரியர் க.அன்பழகன். க.அன்பழகன் தனது 89வது வயது வரை தமிழ்நாட்டின் நிதி அமைச்சராகச் செயல்பட்டார். தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்களாக இதுவரை பதவி வகித்தவர்கள் தங்களது எந்த வயதில் அந்தப் பொறுப்பை ஏற்றார்கள் என்பதை இனி பார்ப்போம்..

சி.சுப்ரமணியம் : ராஜாஜி மற்றும் காமராஜர் தலைமையிலான அமைச்சரவைகளில், 1952 முதல் 1962 வரை, நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் சி.சுப்பிரமணியம். நிதித்துறை மட்டும் இன்றி சட்டம், கல்வி ஆகிய துறைகளையும் கவனித்தார் சுப்ரமணியம். நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது சி.சுப்ரமணியத்தின் வயது 44.
எம்.பக்தவத்சலம் : முதலமைச்சராக பதவி வகிப்பதற்கு முன்பு, 1962 முதல் 1963ஆம் ஆண்டு வரை காமராஜர் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார் பக்தவச்சலம். நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது பக்தவச்சலத்தின் வயது 65.
அறிஞர் அண்ணா : திமுகவின் முதல் முதலமைச்சரான சி.என்.அண்ணாதுரை, 1967 முதல் 1969 வரை நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது அண்ணாவுக்கு வயது 58.

செ.மாதவன் : முதலமைச்சராக இருந்து நிதித்துறையையும் கவனித்து வந்த அண்ணாவின் மறைவுக்கு பிறகு, நிதித்துறையை செ.மாதவன் சில காலம் கவனித்து வந்தார். அப்போது செ.மாதவனுக்கு வயது 34.
கே.ஏ.மதியழகன் : திமுக தொடங்கப்பட்ட காலத்தில், அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.ஏ.மதியழகன், 1969 முதல் 1970 வரை நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது அவருக்கு வயது 43.

மு.கருணாநிதி : 1971 முதல் 1976 வரையிலும் 1989 முதல் 1991 வரையிலும் முதலமைச்சராக பொறுப்பு வகித்த கருணாநிதி, நிதித்துறையையும் கவனித்து வந்தார். 1971ல் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது கருணாநிதியின் வயது 47.
நாஞ்சில் மனோகரன் : திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியபோது, திமுகவில் இருந்து சென்ற முக்கியமான தலைவர்களில் ஒருவர் நாஞ்சில் மனோகரன். தனது முதல் அமைச்சரவையில் நாஞ்சில் மனோகரனை நிதி அமைச்சர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அப்போது நாஞ்சில் மனோகரனுக்கு வயது 47.
நெடுஞ்செழியன் : திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நாவலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 1980 முதல் 88 வரையிலும் ஜெயலலிதா அமைச்சரவையில் 1991 முதல் 96 வரையிலும் நிதியமைச்சராக இருந்தார். முதல் முறை நிதி அமைச்சராக பொறுப்பேற்றபோது நெடுஞ்செழியனின் வயது 60.
சி.பொன்னையன் : இரண்டாவது முறையாக வெற்றிபெற்று முதலமைச்சரான ஜெயலலிதாவின் அமைச்சரவையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பொன்னையன் 2001 முதல் 2006 வரை நிதி அமைச்சராகப் பதவி வகித்தார். நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபோது பொன்னையனின் வயது 59.
க.அன்பழகன் : 2006 முதல் 2011 வரை, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பேராசிரியர் க.அன்பழகன், நிதித்துறையை கவனித்து வந்தார். 2006ல் க.அன்பழகனுக்கு வயது 84. நிதி அமைச்சர் பதவியில் இருந்து இறங்கும்போது அவருக்கு வயது 89.
ஓ.பன்னீர்செல்வம் : 2011 முதல் 2017 வரை நிதித்துறையை கவனித்து வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். 2018 முதல் 2021 வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையிலும், நிதி அமைச்சராக பதவி வகித்தார். முதல் முறை நிதி அமைச்சராகப் பதவி வகித்தபோது ஓபிஎஸ்ஸின் வயது 60.
டி.ஜெயக்குமார் : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பிப்ரவரி 2017 - முதல் ஆகஸ்ட் 2017 வரை நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார் ஜெயக்குமார். அப்போது அவரது வயது 57.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் : 2021ல் அமைந்த திமுக அரசில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபோது அவரது வயது 55.
தங்கம் தென்னரசு : 2006 முதல் 2011 வரையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் 2021 முதல் நேற்று முன்தினம் வரை, தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்த தங்கம் தென்னரசு நேற்று நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வயது 57.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications