Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைடு வாக்கில் சமந்தா.. நேர் வாக்கில் நயன்தாரா.. வியூஸ்களை அள்ளும் அமலா ஷாஜி.. ப்பா இவ்வளவு வருமானமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 80களில் பிறந்த பலருக்கு பேவரைட் என்றால்.. பலரும் சிம்ரன் என்று சொல்லி இருப்பார்கள்.. 90ஸ் கிட்ஸ் பலர் நயன்தாரா, திரிஷா என்று சொல்லி இருப்பார்கள்.. ஆனால் இந்த 2கே கிட்ஸ்களின் லேட்டஸ்ட் கிரஷ், பேவரைட் என்று கேட்டால்.. பலரும் அமலா ஷாஜி என்று சளைக்காமல் சொல்கிறார்கள்.. யார் இந்த அமலா ஷாஜி? கேள்வி பட்டதே இல்லையே என்று யோசிக்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்!

Recommended Video

    Who Is Amala Shaji? | நயனுக்கே Tough | Kerala வீட்டை தேடிப்போகும் Fans *Oneindia Tamil

    இப்போதெல்லாம் இணையத்தில் டிரெண்டாக.. மக்கள் இடையே பிரபலம் அடைய வயசு ஒரு தடையே இல்லை என்றாகிவிட்டது. முன்பெல்லாம் திரையில் தெரிய வேண்டும் என்றாலே கோடம்பாக்கத்திலும், வடபழனி ஏவிஎம் வாசலிலும் தவமாக கிடக்க வேண்டும்.

    ஆனால் இப்போதோ இன்ஸ்ட்டா ரீல்ஸ், பேஸ்புக், ஜோஷ் மூலமே பலர் இணையத்தில் பிரபலமாகி விடுகிறார்கள். இதில் சிலர் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துவிட்டனர்.

    பிரபலம்

    பிரபலம்

    ஜிபி முத்து தொடங்கி காத்து கருப்பு கலை வரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆனது இந்த இணையம் மூலம்தான். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் "பயங்கர" பைக் ரேசர் டிடிஎப் வாசன் கூட யூ டியூப் மூலம் பிரபலம் அடைந்தவர்தான். முக்கியமாக இதில் 2கே கிட்ஸ்களுக்குத்தான் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இணையத்தில் ஹிட் அடித்து இருக்கும் 2கே கிட்தான் அமலா ஷாஜி!

     அமலா ஷாஜி

    அமலா ஷாஜி

    அசப்பில் அமலா பால் .. மினிமைஸ் செய்தால் மீரா ஜாஸ்மின்.. சைடு வாக்கில் சமந்தா.. நடந்து வந்தா நயன்தாரா என்று 2கே கிட்ஸ்கள் இடையே பிரபலத்தின் உச்சத்தில் இருப்பவர்தான் இந்த அமலா ஷாஜி! அப்படி இவங்க என்ன பாஸ் பண்ணிட்டாங்க என்று கேட்டால்.. பெரிதாக எதுவும் இல்லை. சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் போடுவதுதான் இவரின் வேலை. ஆனால் அதன் மூலமே இவர் பல மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்று இருக்கிறார்.

    கெட்டப் நாயகி

    கெட்டப் நாயகி

    ஒரு பாடல் வருகிறது என்றால்.. அந்த பாடலில் நடிகைகள் போட்டு இருக்கும் அதே கெட்டப்பை இவர் அப்படியே போட்டு வந்து ரீல்ஸ் செய்வதுதான் இவர் ஹிட் அடிக்க காரணம். கேஜிஎப் மெகபூபா பாடலுக்கு அதே மஞ்சள் டிரெஸ்ஸில் வந்தது, 96 த்ரிஷா போலவே மஞ்சள் சுடி போட்டு நடப்பது, நானும் ரவுடிதான் காதம்பரிக்கே மஞ்சள் உடையில் டப் கொடுப்பது என்று இவர் செய்யாத ரீல்ஸ் கிடையாது.

    காத்து வாக்குல ரெண்டு ரீல்ஸ்

    காத்து வாக்குல ரெண்டு ரீல்ஸ்

    அதிலும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டூ டூ டூட்டுடூ பாடலுக்கு பச்சை புடவையில் இவர் போட்ட ஆட்டம்தான் சமீபத்திய ஹிட். பார்க்க 12 வயது சிறுமி போல இருக்கும் இவருக்கு இப்போது 21 வயது ஆகிறது. கிட்டத்தட்ட 2கே கிட்ஸ்களில் கனவு கன்னியாகவே அமலா ஷாஜி மாறிவிட்டார். ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்றபடி தேடி தேடி டிரெஸ் எடுப்பது., அதற்காக பல மணி நேரம் மேக் அப் போடுவது என்று இவர் ஒவ்வொரு வீடியோவிற்காக பெரிய மெனக்கெடல்களையும் செய்கிறாராம்.. நீ பெரும் கலைஞி.. நிரந்தர இளைஞி!

    32 லட்சம்

    32 லட்சம்

    அதெல்லாம் விடுங்க இவருக்கு என்று இன்ஸ்டாவில் மட்டும் 32 லட்சம் பின் தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். பிரபல கோலிவுட் நடிகர்களை விட இவர் அதிக பாலோயர்களை வைத்து இருக்கிறார். அதோடு இவரை பார்க்க கேரளாவில் இவர் இருக்கும் வீட்டை தேடி கூட பலர் நடையாக சென்று வருகிறார்கள். சமீபத்தில் தன்னை பார்க்க வந்த குட்டி ரசிகரிடம்.. என்னை பார்க்கணும்னா பார்க்கலாம்.. அழுக ஒன்னும் வேண்டா ஓகே என்று இவர் மலையாள தமிழில் "தாயுள்ளத்தோடு" பேசியது எல்லாம் தாறுமாறு வைரல்!

    கேரளா

    கேரளா

    கேரளாவில் திருவனந்தபுரத்தில் வசதியான பிஸ்னஸ்மேன் ஷாஜிக்கு பிறந்தவர்தான் அமலா ஷாஜி. அமலா ஷாஜி இன்ஸ்ட்டா, பேஸ்புக், யூ டியூப் மூலம் மட்டும் வாங்கும் வருவாய் மாதம் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். நடிப்பில் மட்டுமின்றி படிப்பிலும் இவர் சுட்டியாம். ஏவியேஷன் படித்து இருக்கும் இவர் கோலிவுட்டில் "லேண்ட்" ஆவதற்கு தயாராக "டேக் ஆப்" செய்து கொண்டு இருக்கிறார். இவரின் வீடியோக்களுக்கு எல்லாம் கேமரா மேன் இவரின் அப்பா ஷாஜிதான்.

    சகோதரி பிரபலம்

    சகோதரி பிரபலம்

    இவரின் சகோதரி அம்ரிதா அமலாவும் இவரை போல பிரபலம்தான். மலையாளியாக இருந்தாலும் முழுக்க முழுக்க தமிழில்தான் இவர் வீடியோக்களை போட்டு வருகிறார். அதோடு சமீபத்தில்.. எந்தா புள்ளே மலையாளத்தில் வீடியோ போடு என்று சில மலையாளிகள் இவரிடம் உரிமையாக கேட்டு, மொழி பிரச்னையை உண்டாக்கும் அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். வெறும் 21 வயதே ஆன இவர் பர்சனல் சொத்து மதிப்பு 90 லட்சம் ரூபாய் (இவராகவே சம்பாதித்து) என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    சொத்து மதிப்பு

    சொத்து மதிப்பு

    2கே கிட்ஸ்களின் தேவதையாக வலம் வரும் அமலா ஷாஜி விரைவில் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க போவதாகவும் கூறப்படுகிறது! இவர் எவ்வளவு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு இவருக்கு ஹேட்டர்களும் இருக்கிறார்கள். என்னங்க இந்த பொண்ணு போட்ட ஸ்டெப்பையே போட்டுக்கிட்டு இருக்கு என்று பலரும் அமலாவின் "நடிக்க தெரியாத" தூய உள்ளத்தை கிண்டல் செய்வதும் வழக்கம். என்ன இருந்தாலும்.. 32 லட்சம் பின் தொடர்பாளர்கள் எல்லாம் அவ்வளவு எளிதில் வந்துவிட மாட்டார்கள் தானே? .அவங்க வயிறு எரியூட்டும் நீ ஆடு தங்கம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+