"அடச்சீ".. பிஞ்சுனு கூட பாக்கலியே.. இருட்டில் சீண்டிய "பாஜக" பிரமுகர்.. அந்த பைக் உள்ளே பார்த்தால்?
சென்னை: லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அது நைட் நேரம் -
சென்னை வில்லிவாக்கத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.. சிவன் கோயில் அருகில் ஒரு சிறுவன் பைக்கில் இருந்து அழுதுகொண்டே இறங்கியிருக்கிறான்.

அப்போது, அங்கிருந்தவர்கள் இதை பார்த்துவிட்டு, சிறுவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள்.. அதற்கு அந்த சிறுவன் அழுதுகொண்டே சொல்லியிருக்கிறான்:
பாலியல் சீண்டல்: "நான் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு ஸ்கூலில் படிக்கிறேன். நான் ஒருத்தர்கிட்ட லிப்ட் கேட்டு வில்லிவாக்கத்தில் பைக்கில் ஏறினேன்.. அவரும் என்னை பைக்கில் ஏற்றிக்கொண்டார்.. பிறகு, பாடி மேம்பாலம் அருகே இருட்டான இடத்தில் பைக்கை அவர் நிறுத்தினார். அப்பறம் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்" என்று அழுது கொண்டே சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.. உடனே தங்கள் செல்போனில், சிறுவன் சொன்னதை வீடியோ எடுத்து கொண்டுள்ளனர்.. அதற்கு பிறகு, சிறுவன் சொன்ன அந்த நபரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்..
மழுப்பல்: ஆனால், அந்த நபர் வாயே திறக்கவில்லையாம். பொதுமக்கள் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும், பதில் சொல்லாமல், அங்கிருந்து நழுவி செல்வதிலேயே அந்த நபர் குறியாக இருந்திருக்கிறார். இதனால் கடுப்பான பொதுமக்கள், அவர் ஓட்டி வந்த பைக்கை சோதனை செய்திருக்கிறார்கள்..

அப்போதுதான், அந்த பைக்கில் பாஜக கொடியும், பாஜக துண்டும், இருந்திருக்கிறது.. அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பாஜக உறுப்பினர் அடையாள அட்டையும் இருந்திருக்கிறது.. அந்த அடையாள அட்டையில் அம்பத்தூர் பகுதி பாஜக பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் என்று அச்சிடப்பட்டிருந்தது.. அதற்கு கீழே பாலச்சந்திரன் என்று பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாஜக பிரமுகர்: இதைப்பார்த்து அதிர்ந்த பொதுமக்கள், பைக்கில் இருந்த பாஜக ஆதாரங்களையும் வீடியோ எடுத்து வைத்து கொண்டனர்.. பிறகு அத்தனை வீடியோ பதிவையும் சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.. இதெல்லாம் இணையத்தில் வேகமாக பரவி பரபரப்பை கிளப்பியது.. அதற்கு பிறகுதான் வில்லிவாக்கம் போலீசாருக்கே விஷயம் தெரியவந்துள்ளது.. உடனடியாக விசாரணையையும் மேற்கொள்ள துவங்கினர்..
இதனிடையே, அந்த சிறுவனின் அம்மா போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. போலீசார் சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்த பாஜக பிரமுகர் பாலசந்தரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணயை மேற்கொண்டனர்.. போக்சோவிலும் அவர் மீது கேஸ் பதிவு செய்யப்பட்டு, அதிரடியாக கைதும் செய்யப்பட்டார்.. இப்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சேட்டை: பாலச்சந்திரனுக்கு 47 வயதாகிறதாம்.. லிப்ட் கேட்டு டூவீலரில் ஏறியதுமே பாலியல் சேட்டையை ஆரம்பித்திருக்கிறார்.. தன்னை இறக்கிவிடும்படி அந்த பையன் கெஞ்சியும், வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டே இருந்தாராம்.. இதெல்லாம் அதிர்ச்சி விலகாமல் அந்த சிறுவன் சொன்னதும், வீடியோவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோவும் இணையத்தில் இப்போது சுற்றிக் கொண்டிருக்கிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications