Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் 10 சவரன்.. கட்டுமஸ்தான உடம்பு.. விதவை பெண்ணையும் விடாத காமுகன்! இவரா?ன்னு அலறிய சென்னை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெக்னாலஜி அதிகரித்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஆன்லைன் மோசடிகளும் பெருகிவருகின்றன.. புதுபுது ஆப்களை பயன்படுத்தி, புதுவிதமான மோசடிகளும் நடக்கின்றன. அதேபோல தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் நகை பறிக்கும் செயல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.. இதனால் உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு, ஏமாந்து போகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.. இதற்குநடுவில் திருமண மோசடிகளுக்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை.. இப்போது சென்னையில் என்ன நடந்தது தெரியுமா?

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமாருக்கு 40 வயதாகிறது.. MBA படித்துள்ள சுரேஷ்குமாருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.. அவர்களுடன் ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்.

Chennai GYM Body Gold Jewellwery 10

எனினும் பெண்களின் மீது மோகம் கொண்டவர் சுரேஷ்குமார். இதற்காக திருமணம் செய்வது போல பெண்களை ஏமாற்றுவது என்று முடிவுக்கு வந்தார்.. இற்காக திருமண தகவல் மையம் மூலமாக பல பெண்களுக்கு வலையை வீச துவங்கினார்.. அப்போதுதான், ஒரு திருமண வெப்சைட்டில் கணவனை இழந்து, 2 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், சுரேஷூக்கு அறிமுகமானார்.

கட்டுமஸ்தான ஜிம் உடல்

அந்த பெண்ணிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, உங்கள் குழந்தைகளை நன்றாக கவனித்து கொள்வேன் என்று ஆசைவார்த்தைகளைகூறி, விதவை பெண்ணின் நம்பிக்கையை பெற்றார் சுரேஷ்.

இதையடுத்து, இருவரும் நேரில் சந்தித்து கொண்டனர்.. பிறகு நெருங்கி பழகி, பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்திருக்கிறார்கள்..

அப்படித்தான், 2 நாட்களுக்கு முன்பும், நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் இருவரும் சந்தித்துள்ளனர்.. அப்போது, ஆசை வார்த்தை கூறிய சுரேஷ், அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பிறகு 2 பேரும் காரில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.. பிறகு சுரேஷ் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.

காரில் 10 சவரன் நகை

அவர் சென்றபிறகுதான், தன்னுடைய பையில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்பதை அறிந்து விதவைப்பெண் அதிர்ச்சியடைந்தார்.. உடனே சுரேஷூக்கு போன் செய்துள்ளார்.. ஆனால், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாம். பிறகு தேனாம்பேட்டை போலீசில் இளம்பெண் புகார் செய்யவும், அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷ் குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

அப்போதுதான், சுரேஷ் குமார் மீது ஏற்கனவே நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் பல பயங்கரங்கள் வெளிவந்தன.. அதாவது, சுரேஷ் குமார் இதற்கு முன்பே, 8 பெண்களை காதலித்து ஏமாற்றியிருக்கிறாராம்.

ஜிம் பாடியில் விழுந்த பெண்கள்

பெண்களை கவர்வதற்காகவே, சுரேஷ் குமார் ஜிம்முக்கு சென்று தன்னுடைய உடலை எப்போதுமே கட்டுமஸ்தாக வைத்து கொள்வாராம்.. தன்னுடைய ஜிம் பாடியை, அடிக்கடி போட்டோ எடுத்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார்... இந்த போட்டோக்களை வைத்து, இளம்பெண்களை சுரேஷ் குமார் காதல் வலையில் சிக்க வைக்க முயற்சித்துள்ளார்.. இதில்தான், 8 பெண்கள் சுரேஷின் காதல் வலையில் விழுந்துள்ளனர்.

இதில், 4 பெண்களை தன்னுடைய ஜிம் பாடியை காட்டியே வசீகரித்து, இனிக்க இனிக்க பேசி கவர்ந்துள்ளார்.. மற்ற 4 பெண்களை செல்போனில் கவர்ச்சிகரமான மெசேஜ்களை அனுப்பியே தன்னுடைய வலையில் விழவைத்துள்ளார்..

உன் குழந்தைகளே என் குழந்தை

குறிப்பாக, கணவரை பிரிந்து தனிமையில் உள்ள பெண்கள் அல்லது விவாகரத்தான இளம்பெண்களையே குறிவைத்துள்ளார்..

அதிலும் குழந்தையுடன் தவித்து வரும் பெண்களை கண்டால், உன் குழந்தைகளை, என் குழந்தை போலவே கவனித்து கொள்வேன் என்று நம்பிக்கை வார்த்தை சொல்வாராம். ஏற்கனவே கணவரை இழந்து, வாழ்க்கையில் நொந்து போயிருக்கும் பெண்களுக்கு சுரேஷின் பேச்சு பெருத்த ஆறுதலையும், நம்பிக்கையையும் தந்துள்ளது.. இதில்தான் பெண்கள் தங்களையே சுரேஷிடம் இழந்துள்ளனர்.

அந்த பெண்களை தனியே சந்தித்து உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு கிளம்பிவிடுவாராம் சுரேஷ்குமார்.. எந்த பெண்ணும் தங்கள் எதிர்காலத்தை நினைத்து பயந்து, சுரேஷ் மீது புகார் தர முன்வராதபோது, தற்போது 10 பவுன் நகையை இழந்த பெண், புகார் தந்துள்ளார்.

8 விதவை பெண்கள்

இதையடுத்து, சுரேஷ் குமார் தற்போது கைதாகி ஜெயிலில் உள்ளார்.. சுரேஷ் குமாரின் காதல் வலையில் சிக்கி நகை, பணத்தை இழந்து ஏமாந்த பெண்கள் யாராக இருந்தாலும், தயங்காமல் முன்வந்து புகார் தரலாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மறுமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 8 விதவை பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலி, நகையை பறித்துச் சென்ற எம்பிஏ பட்டதாரி கைதாகி உள்ள சம்பவம் சென்னையில் அதிர்வலையை உண்டாக்கிவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+