Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வராகவனின் மனைவி இவரா.. இத்தனை நாள் தெரியாம போச்சே.. திமுக அரசுக்கு கீதாஞ்சலி நன்றி..காரணம் இதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை உள்ள பகுதிக்கு வி.பி. ராமன் சாலை என தமிழ்நாடு அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது... அந்தவகையில், வி.பி.ராமன் சாலை பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்,

பொதுவாக, முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகளுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்கள், நாட்டுக்காக உழைத்த தியாகிகள், பெயர்கள் சூட்டப்படுவது வழக்கம்..

Who is this Geethanjali and vp raman road name board cm stalin inaugurated today

தலைவர்களையும், அவர்களது பங்களிப்பையும் வருங்கால சந்ததியினர் நினைவு கூறுவதற்காக ஆட்சி செய்த அரசுகள் எடுத்த கொள்கை முடிவாக இது இருந்து வருகிறது.
மவுண்ட் ரோடு: அப்படித்தான், 1969ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு, ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக தலைவர், கருணாநிதி, சென்னை மாநகரத்தின் பிரதான சாலையாக இருந்த மவுண்ட் ரோடுக்கு "அண்ணா சாலை" என்று பெயர் சூட்டினார். பரங்கிமலையை வைத்துதான் மவுண்ட் என்கிற பெயரை வைத்து மவுண்ட் ரோடு என்றும் பெயர் இருந்தது... இன்னும் இப்படி பல சாலைகள், பல தலைவர்களின் பெயரால் நினைவுகூரப்பட்டு வருகிறது.

அதிமுக தலைமையகம்: அந்தவகையில், சென்னையில், அதிமுக தலைமையகம் அமைந்துள்ள சாலையின் பெயருக்கு, புதிய பெயராக வி.பி.ராமன் சாலை என்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.. யார் இந்த வி.பி.ராமன் தெரியுமா? இவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். இவர் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞர்.. திமுகவின் ஆரம்ப கால உறுப்பினர் ஆவார்.. 26 வயதில் திமுகவின் சட்டதிட்ட குழுவில் இருந்தார்... 1977-1979 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர்.. திமுகவின் செயற்குழுவில் இடம்பெற்றவர்..

திமுகவின் சட்டதிட்டத்தை உருவாக்கும் குழுவிலும் இடம்பெற்றவர். பேரறிஞர் அண்ணாவின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் ஆங்கில இதழான ஹோம் லேண்ட் இதழின் துணை ஆசிரியர் என்று பல பொறுப்புகளை வகித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் சமகாலத்து தலைவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றவராகவும் திகழ்ந்தார்.

கண்ணதாசன்: திராவிட நாடு கொள்கையில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக இயக்கத்திலிருந்து, 1961-ம் ஆண்டு தன்னை விடுவித்துக் கொண்டார்... எனினும், 1967-ம் ஆண்டு தேர்தலில் அண்ணாவுக்கும் ராஜாஜிக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்து கூட்டணிக்கு உதவியவர் வி.பி.ராமன்தான்... முன்னாள் முதல்வர் அண்ணா மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் வி.பி.ராமன் நடந்து சென்று மரியாதையை செலுத்தியவர். எம்ஜிஆர் வி.பி.ராமனை அவரது கட்சியில் சேர அழைத்தபோதுகூட. அவர் சேரவில்லையாம்.. அந்த அளவுக்கு கொள்கைப்பிடிப்பு மிக்கவராக இருந்தவர்.. பி.வி.ராமனின் மகன்தான், தற்போது புகழ்பெற்ற நடிகர் மோகன்ராமன்.

Who is this Geethanjali and vp raman road name board cm stalin inaugurated today

நடிகர் மோகன் ராம்: வி.பி.ராமன் வழக்கறிஞராக மட்டுமின்றி பன்முகத்தன்மையுடன் திகழ்ந்தவர்.. அதாவது, அரசியல்,சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்து துறைகளிலும் திறமை கொண்டிருந்தார். கவிஞர் கண்ணதாசனுடன் மிக நெருங்கிய நட்பில் இருந்தவர்.. வழக்கறிஞராக மட்டுமல்லாது அரசியல், சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்து துறைகளிலும் திறமை கொண்டிருந்தார் விபி ராமன்... மொத்தத்தில் தமிழக வரலாற்றை தீர்மானித்த தனி மனிதர்களில் வி.பி.ராமனும் தவிர்க்க முடியாதவராக கருதப்படுகிறார்.

இந்த அளவுக்கு பெருமைவாய்ந்த வி.பி. ராமனுக்கு, மேலும் சிறப்பு சேர்க்கின்ற வகையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லக்கூடிய அவ்வை சண்முகம் சாலை என பெயரிடப்பட்டுள்ள சாலைப்பகுதியினை "வி.பி. ராமன் சாலை" என தமிழ்நாடு அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வி.பி. ராமன் வாழ்ந்த லாயிட்ஸ் கார்னர் இல்லமும் இப்பகுதியில்தான் அமைந்துள்ளது..

முதல்வர் ஸ்டாலின்: வி.பி.ராமன் சாலை பெயர் பலகை- முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் வி.பி. ராமனின் மகன்கள் வழக்கறிஞர் பி.எஸ். ராமன், பி.வி.மோகன் ராமன், பி.ஆர். ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காணொலிக் காட்சி வாயிலாக வி.பி. ராமனின் மனைவி கல்பகம் ராமன் மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

Who is this Geethanjali and vp raman road name board cm stalin inaugurated today

பிரபல டைரக்டர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, வி.பி. ராமனின் பேத்தி ஆவார்.. "தமிழ்நாடு அரசுக்காக நிறைய செய்துள்ள, என்னுடைய தாத்தாவின் பெயரை இன்று சூட்டியுள்ளது மிகவும் எங்களுக்கு கிடைத்த பெருமை என்று பூரித்து சொல்கிறார் கீதாஞ்சலி.. "இன்று எங்களுடைய முக்கியமான நாள்.. இது என்னுடைய தாத்தா விபி ராமன் வளர்ந்த வீடு.. நிறைய முக்கியமான மீட்டிங்குகள், அரசு சம்பந்தப்பட்ட விவாதங்கள் எல்லாமே அந்த ரூமில்தான் எல்லாமே நடந்துள்ளது..

செல்வராகவன் மனைவி: மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, மூதறிஞர், ராஜாஜி, மற்றும் நெடுஞ்செழியன், துரைமுருகன், கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுமே இந்த வீட்டிற்கு வந்துள்ளார்கள்.. இந்த வீட்டின் 100வது வருஷத்தில், தமிழக அரசு என் தாத்தாவை நினைவுகூர்ந்து பெயர் சூட்டியுள்ளது இதயப்பூர்வமான நன்றியை, முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது குடும்பதினருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.. மாநகராட்சி உட்பட திமுக அரசுக்கு என்னுடைய நன்றிகள்.. கீதாஞ்சலி செல்வராகவனாக நான் இன்று ரொம்பவே பெருமைப்படுகிறேன்" என்று பூரித்துசொல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+