யார் இந்த ‘ஜோக் ராஜ்’? டிரெண்டிங் ஆன மளிகைக் கடைக்காரர்?
சென்னை: சமூக ஊடகத்தில் ஜோக்ஸ் சொல்லும் வீடியோக்களை வெளியிட்டுவந்த மளிகை கடைக்காரர் ஒருவர் இரண்டு நாட்களாக டிரெண்டிங் ஆகி இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் முழுக்க டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் முத்துராஜா. இவர் ஜோக்ஸ் எனப் பேசி பதிவிடும் ரீல்ஸ் இணைய உலகில் தீயாகப் பரவிவருகிறது. இவர் ராமு, சோமு என கேரக்டர்களை வைத்து ஜோக்ஸ் சொல்வதைப் பரிதாபங்கள் சுதாகர் மற்றும் கோபி எடுத்துக் கலாய்த்து வீடியோ போட ஒரே இரவில் புகழ் மழையில் நனைந்து வருகிறார் முத்துராஜா. இவர் யார்? இவருக்கு ஜோக் எழுதித் தருவது யார்?

இந்த முத்துராஜா என்பவர் திருவொற்றியூரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் மளிகைக் கடையில் வியாபாரம் செய்கிறாரோ இல்லையோ ஃபேஸ்புக்கில் நிறையக் குட்டிக்குட்டி ஜோக்ஸ் சொல்லி ரீல்ஸ் போட்டுவிடுவார். அடிப்படையில் சினிமா வெறியர் இந்த முத்துராஜா. அவருக்குள் புதைந்து கிடந்த சினிமா கனவை சமூக ஊடகங்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தன் மனதில் உதிக்கும் ஜோக்குகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்கிறார் முத்துராஜா. அதை வீடியோவாக பதிவிட வேண்டும் என்பதற்காகத் தினம் 5 சட்டைகள் வீட்டிலிருந்து மளிகைக் கடைக்குக் கொண்டுவந்து விடுகிறார். அப்புறம் என்ன? வியாபாரத்தைக் கவனிக்கிறாரோ இல்லையோ? வீடியோ பேசி அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுகிறார்.
அத்தனையும் மொக்கை ஜோக்ஸ். ராமு, சோமு என இவரே கதாபாத்திரங்களுக்குப் பெயரை வைத்து அப்படியே ஆறாம் வகுப்பு பிள்ளையைப் போல முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் வெளிப்படுத்தி வீடியோ போடுவதால், இவரை இன்றைய இளைய தலைமுறை பூமர் அங்கிள் என்ற அளவில் கலாய்த்து வருகிறது. அதைப் பற்றி கவலை இல்லை என்கிறார் இவர்.

சோகமான இந்த உலகத்தில் நகைச்சுவைக்குத்தான் பஞ்சம் உள்ளது என்றும் யாரும் முழுமையாக வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடும் இவர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தவே இப்படி வீடியோ வெளியிடுகிறேன் என்கிறார்.
"முன்பு திருவொற்றியூரில் 5 திரையரங்குகள் இருந்தன. அதில் தினம் ஒரு படத்தைப் பார்த்து பொழுதைக் கழிப்பேன். காமெடி, ஆக்ஷன் படங்களைத்தான் பார்ப்பேன். இப்போது இரண்டு தியேட்டர்கள் தான் உள்ளன. ஆகவே அதிக நேரம் கிடைக்கிறது. அதை வைத்து வீடியோ போட்டு மக்களைச் சந்தோஷப்படுத்தி வருகிறேன்" என்கிறார் இந்த கலக்கல் காமெடி மேன்.
பரிதாபங்கள் சுதாகரும், கோபியும் தன்னைப் பற்றிப் பேசி வீடியோ போட்ட பிறகு தினம் 500 பேர் வரை இவரை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்தளவுக்குத் தான் ரீச் ஆவதற்கு இந்த இருவரும்தான் காரணம் என்கிறார் முத்துராஜா. இவரை இணைய உலகம் 'ஜோக் ஸ்டார்' முத்துராஜா என்று பட்டப்பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். அது தனக்குப் பெருமையாக உள்ளது என்கிறார் இந்த மளிகைக் கடைக்காரர்.
-
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications