Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடையை கழற்றிவிட்டு.. நிர்வாணமாக ஓடிய பயணி.. பின்னாலயே ஓடிய ஆபீசர்ஸ்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாட்டில் இருந்து வருவதும், இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் செல்வதும் வழக்கம்.. இதனால், எப்போதுமே சென்னை ஏர்போர்ட் பரபரப்பாக காணப்படும்.

பயணிகள்: இந்நிலையில், சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபி செல்லும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட தயாராகி கொண்டிருந்தது... இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.

Chennai Airport passenger Chennai Madurai

இந்த பயணிகளின் உடைமைகள் சோதனை முடிந்து, குடியுரிமை சோதனைக்கு சென்று கொண்டு இருந்தனர்.. அப்போது, பெத்தனன் இளங்கோ என்ற பயணியும் வந்தார். இவருக்கு 47 வயதாகிறது.. அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் ஆவார்.

இளங்கோ: தன்னுடைய அப்பாவுடன், அபுதாபி வழியாக அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார். இவர்கள் இருவருமே, குடியுரிமை சோதனைப் பிரிவு நோக்கி நடந்துசென்று கொண்டிருந்தனர். அப்போது, இளங்கோ திடீரென்று தன்னுடைய ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக ஓட ஆரம்பித்தார். இதைப் பார்த்து ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் எல்லாருமே பதறிப்போய்விட்டார்கள்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.. பிறகு இளங்கோ பின்னாடியே அவர்களும் ஓடிச்சென்று விரட்டி பிடித்தனர்.. பிறகு, கீழே வீசியெறிந்த ஆடைகளை எடுத்து வந்து, அவரை மிரட்டி அணிய செய்தார்கள்.. பின்னர், இளங்கோவின் அப்பாவிடம் இதை பற்றி விசாரித்தார்கள்.

அதற்கு அவர், தன்னுடைய மகன் ஏதோ மன அழுத்தத்தில் இப்படி செய்துவிட்டார் என்று வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அதிகாரிகள், அப்பா சொன்ன காரணத்தை ஏற்கவில்லை.

ஆலோசனை: இப்படியெல்லாம் அநாகரீக செயலில் ஈடுபட்ட பயணியை, எங்களுடைய விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று ஏர்லைன்ஸ் தரப்பில் கறாராக சொன்னார்கள்.. அத்துடன், இளங்கோவின் அமெரிக்க பயணத்தையும், எத்திஹாட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ரத்து செய்தனர்..

அதுமட்டுமல்ல, இளங்கோவுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு, பயணம் செய்யுமாறும் அவரது அப்பாவிடம் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை சொன்னார்கள். பின்னர், ஏர்போர்ட்டிலிருந்து கார் மூலம் அவரை மீண்டும் மதுரைக்கே பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்... ஆடைகளை களைந்து ஏர்போர்ட்டில் நிர்வாணமாக ஓடிய பயணியால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+