எமர்ஜென்சிலயும் எவ்ளோ தெளிவு.. ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காத்த தமிழர்! யார் இந்த வெங்கடேசன்?
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் பலரது உயிர்கள் காப்பற்றப்பட காரணமான தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் யார்? விரிவாக பார்ப்போம்.
இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்விட்டரில், "ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள். உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்." என்று பதிவிட்டு உள்ளார்.
யார் அந்த வெங்கடேசன்? விரிவாக பார்ப்போம்,. ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 275 ஐ தாண்டி இருக்கிறது.
இந்த நிலையில் ரயில் விபத்தின்போது பலரது உயிர்கள் காப்பாற்றப்பட காரணமாக இருந்தவர்களில் ஒருவரான வெங்கடேசனுக்கு முதலமைச்சர் உட்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னதாக இவர் விபத்து நடந்த தினத்தில் ஒன் இந்தியா தமிழுக்கும் தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்தார். அதில், "பாலசேரை தாண்டி கோரமண்டல் ரயில் வந்துகொண்டு இருக்கும்போது எதிரே ரயில் வந்தது.
அப்போது 2 ரயில்கள் வந்த தண்டவாலத்துக்கும் இடையே சரக்கு ரயில் வந்துவிட்டது. அந்த சரக்கு ரயில் மற்றொரு ரயிலின் எஞ்சினுக்கு அருகே உள்ள பெட்டியின் மீது மோதியது. சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மீது இடிக்கவில்லை. கோரமண்டல்தான் மற்றொரு ரயில் மீது இடித்துவிட்டது. பல பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். பலி எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும்.

நான் வந்த பெட்டிக்கு விபத்தில் எதுவும் ஆகவில்லை. 7 பெட்டிகளுக்கும் மேல் தடம் புரண்டு கிடக்கின்றன. சுமார் 10 பெட்டிகள் தடம்புரண்டு இருக்கும். நானும் மீட்புப் படையில்தான் இருக்கிறேன். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு சென்றுகொண்டு இருந்தேன். அப்போது இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துவிட்டது. விபத்து ஏற்பட்டவுடன் எனது கமாண்டருக்கு தகவல் தெரிவித்துவிட்டேன்.
தஞ்சாவூர் அருகே உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவன் நான். இங்கு ஆம்புலன்ஸ்கள் வந்துகொண்டு இருக்கின்றன. தீவிரமாக மீட்பு வேலை செய்து வருகிறார்கள். உடல்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். பெரிய விபத்து என்பதால் மீட்புப் பணி முழுமையாக முடிய 2 நாட்கள் ஆகும். ரயிலுக்கு உள்ளே எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவில்லை. முக்கிய சாலை பகுதியில்தான் விபத்து ஏற்பட்டது. இந்த இடம் காட்டுப்பகுதி அல்ல.
ஒடிசா மக்கள் அதிகளவிலான உதவிகளை செய்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள், காவல் துறையினர், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர் என அனைவரும் இங்கு இருக்கிறார்கள். பலருக்கு முதல் உதவி தேவைப்படுகிறது. சீரியசாக இருப்பவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்." என்றார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications