யாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே!
Recommended Video
சென்னை: நம்ம ஆட்கள் சிலருக்கு ஒரு விஷயம் கிடைச்சால் விட மாட்டாங்க.. அதேபோல ஒருவர் லேசாக பேசப்பட்டு விட்டால், அவரை ஊதி.. பெரிசாக்கி.. ட்ரெண்ட் ஆக்கி விட்டுட்டுதான் மறுவேலையே பார்ப்பாங்க.. அப்படி ஒருத்தர்தான் பாலாஜிஹாசன்!
யார் இந்த பாலாஜிஹாசன்.. ஒரு ஜோதிடர்.. அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நிறைய பரிசுகளை வாங்கியவர்.
வருஷம் பிறந்தால் ராசிபலன் குறித்த டிவி டிபேட்டுகளில் நிறைய ஜோதிடர்களில் இவருக்கும் ஒரு சேர் போட்டு உட்கார வைத்திருப்பார்கள்.

மோடி
ஆனால், எப்படி இவர் இப்போது திடீரென பாப்புலர் ஆனார். ஏனென்றால் இவர் கணித்த சில விஷயங்கள் நடந்திருப்பதால்தான்.. ஆர்யாவுக்கு இந்த வருடம் கல்யாணம் ஆகும் என்றார். நடந்தது! விஷால் வரலட்சுமியை கல்யாணம் செய்துக்க மாட்டார் என்றார்.. நடந்தது! ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்றார்.. நடந்தது! மோடிதான் திரும்பவும் பிரதமர் என்றார்.. நடந்தது!

கணிப்பு
இது எல்லாவற்றையும்விட செமி பைனலுக்கு போகும், உலககிரிக்கெட் உலக கோப்பையை வெல்லாது என்றார். உலக கோப்பை போட்டி இறுதிநாளில் இருந்துதான் இவர் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தார். இதற்கு காரணம், இவரது கணிப்புகளை நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை ஷில்பா ஷெட்டி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் போன்றோர் பாராட்டியதுதான். இதுதான் இவரை ட்ரெண்டின் உச்சிக்கு கொண்டு போனது.

பரபரப்பு
இதெல்லாம் போதாதென்று, துர்கா ஸ்டாலின் இவரை வீட்டுக்கு கூப்பிட்டு ஜோசியம் பார்க்கவும் இன்னமும் இவரது பெயர் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பற்றிக் கொண்டு எரிந்தது. இப்படி ஒரு பரபரப்பு தனக்கு வரும் என்று பாலாஜிக்கே ஜோசியம் தெரிந்திருக்காது.. அதனால்தான் எதிர்பாராமல் நடந்த பரபரப்பைகூட சாதகமாக பயன்படுத்தி அரசியல் ரூட்டுக்குள் தீவிரமாக நுழைந்துள்ளார்.

சேலம்
எட்டு வழிச்சாலை வந்தே தீரும் என்று இந்த சேலத்துக்காரர் அடித்து சொல்ல காரணம் என்ன என்று இப்போது வரை தெரியவில்லை. கமலுக்கு வளர்ச்சி இருக்காது, விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று நடிகர்கள் அரசியலுக்கு எதிரான கருத்தைமுன் வைத்து வருகிறார்.

பின்னணி?
எதற்காக இப்படி ஒரு கலக்கத்தை இந்த ஜோசியர் உண்டுபண்ணுகிறார்? இவர் பின்னணியில் யாராவது இவரை இயக்குகிறார்களா? நம் மக்கள் எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்ற இளக்காரத்தை இவருக்கு ஊட்டியது யார்?

மக்கள்
ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனையில் அல்லல்பட்டு கிடக்கும் நம் மக்களின் மனதில் இப்படி ஒரு குழப்பத்தை விளைவிக்க வேண்டிய ஆபத்தை இவருக்கு யார் தர சொன்னது? இதெல்லாம் தற்செயலாக நடக்கிறதா, அல்லது இவருக்கு பின்னிருந்து இயக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.. எதுவாக இருந்தாலும் நம் தமிழக மக்களை யாராலும் அசைத்துவிட முடியாது என்பதே உண்மை!












Click it and Unblock the Notifications