"ஏய் ஏய்".. குட்டை பாவாடை வேற.. கட்டிப்பிடித்து முத்தம் தந்துகொண்டே.. இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்தம் தந்துகொண்டே பைக் ஓட்டிய ஜோடி யார் என்று தெரியாமல் போலீசார் திணறி கொண்டிருக்கிறார்கள்.. யார் அவர்கள்? என்ன நடந்தது?

சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை பகுதியில் உள்ள ஹைவேஸில் ஒரு சம்பவம் நடந்தது.
பெட்ரோல் டேங்க்: ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்... பைக் நடுரோட்டில் சென்று கொண்டிருந்தபோதே திடீரென அந்த இளம்பெண், பின்பக்க சீட்டில் இருந்து, பைக்கின் முன்னால் உள்ள, பெட்ரோல் டேங்க்கின் மீது வந்து உட்கார்ந்து கொண்டார்.

Who is this young woman and kissing harsh bike riding by the young girls

முன்பக்கம் தன்னுடைய காதலனை பார்த்தவாறு உட்கார்ந்ததுடன், அவரை இறுகி அணைத்துக் கொண்டார்.. இப்படியே பைக்கில் 2 பேரும் சென்றனர்.. நடுநடுவே சில்மிஷங்களும் ஆரம்பமாகின.. பிறகு திடீரென காதலனை இறுக்கி கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார் அந்த பெண்.. இதையெல்லாம் பார்த்து, சாலையில் சென்று கொண்டிருந்த சக பயணிகள் அதிர்ந்து போனார்கள்.. மேலும் பலர், உடனே தங்கள் செல்போனில் இதை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. அப்பறம் என்ன? காதலனை தேடிப்பிடித்து மைசூர் போலீசார் அள்ளிக் கொண்டு போனார்கள்.

இளம்ஜோடி: இந்த சம்பவம் நடந்து, அடுத்த சில நாட்களிலேயே வடமாநிலம் ஒன்றில் இதேபோல இன்னொரு சம்பவம் நடந்தது.. நடுரோட்டில் சென்றுகொண்டிருந்தது அந்த இளம் ஜோடி.. பின்னாடி உட்கார்ந்திருந்த அந்த பெண்ணை முன்பக்கம் பெட்ரோல் டேங்க் மீது ஏறி உட்கார சொன்னார்.. அந்த பெண்ணோ குட்டை ஸ்கர்ட் அணிந்திருந்ததால், அவர் மறுத்துவிட்டார்.

அந்த இளைஞர் கட்டாயப்படுத்தியதால், ஏற முயற்சித்தார்.. பிறகு சற்று தடுமாறிதான், டேங்க் மீது ஏறி உட்கார்ந்தார். இது அனைத்தையுமே அங்கிருந்த போலீசார் கவனித்து கொண்டிருந்தனர்.. பிறகு அருகில் வந்து, 2 பேரையும் பைக்கை ஓரங்கட்ட சொன்னார்கள்.. போலீசார் திடீரென வந்துவிட்டதால், ஸ்கர்ட் அணிந்திருந்த அந்த பெண்ணால் மறுபடியும் கீழே டேங்கில் இருந்து இறங்க முடியவில்லை. இறுதியில், பெண் போலீசார் உதவியதையடுத்து கீழே இறக்கிவிடப்பட்டார்.. 2 பேருக்கும் பலத்த டோஸ் விழுந்தது. வார்னிங் தந்து அனுப்பி வைக்கப்பட்டனர்..

Who is this young woman and kissing harsh bike riding by the young girls

குட்டைப்பாவாடை: நம் சென்னையிலும் ஒரு சம்பவம் நடந்தது.. தாம்பரத்தில் இரவு நேரம் ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்றுள்ளது.. அந்த இளைஞர் பைக் ஓட்ட, பெட்ரோல் டேங்கில் இளம்பெண் உட்கார்ந்து கொண்டார்.. காதலனையும் இறுக்கி கட்டிப்பிடித்து கொண்டார்.. 2 பேருமே ஹெல்மெட் போடவில்லை.. ஹைவேஸில் இவர்கள் செல்வதை, பின்னாடி வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் கவனித்து, இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த ஆட்டோ டிரைவரை அசிங்க அசிங்கமாக அந்த பெண் திட்டினார். அப்போதுதான் தெரிந்தது, அந்த பெண் போதையில் இருக்கிறார் என்று..

இப்போது இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், ஜார்க்கண்டை சேர்ந்த இன்ஸ்டா வலைதளப்பக்கத்தில்தான் இந்த வீடியோ பதிவாகி உள்ளது.. அது ஒரு பழைய ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக் போல தெரிகிறது.. பைக் 60 கிமீ வேகத்தை தாண்டி போகிறது.. அதில் இருந்த 2 பேருமே ஹெல்மெட் அணியவில்லை.. அந்த பெண், பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து கொண்டார்.. பிறகு, இருவருமே மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தம் தந்து கொள்கிறார்கள்..

Who is this young woman and kissing harsh bike riding by the young girls

2 ஹைலைட்: இதில் 2 விஷயம் ஹைலைட்டாக உள்ளது.. பைக்கில் உட்கார்ந்துகொண்டு, மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தம் தந்து கொண்ட 2 பேருமே இளம்பெண்கள் ஆவர்.. மற்றொன்று, அந்த பைக்கின் நம்பர் பிளேட் தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் எண் என்பது கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

பைக் ரைடர் என்றால், அதற்கான முறையான அனுமதியை பெற வேண்டும்.. ரைடிங் கியர்களுடன் (ஹெல்மெட், ஜாக்கெட், க்ளோவ்ஸ், ஷுக்கள்), உரிய ட்ராக்கில் இருந்தால்தான், அதை அங்கீகரிக்கவும் முடியும்.. ஆனால், இவர்கள் அப்படியான அனுமதியை பெற்றார்களா என்று தெரியவில்லை.. பசங்க ரேஞ்சுக்கு பொண்ணுங்களும் இறங்கிட்டாங்களே, இவங்களைக் கைது செய்யவேண்டாம், ஆனால், எச்சரிக்கை அபராதம் விதிக்க வேண்டும் கொதித்தெழுந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அசிங்கம்: நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகமாகி வருவதால், போலீசார் எவ்வளவோ விழிப்புணர்வுகளை விடாமல் சொல்லி வருகிறார்கள்.. ஆனால், பெரிதாக யாரும் மதிப்பதில்லை.. குறிப்பாக, இளைஞர்கள், ஹெல்மெட் கூட போடாமல் பைக்குகளை ஓட்டி வருவதுடன், பைக்குகளில் சர்க்கஸ் என்ற பெயரில் வித்தை காட்டி, விபத்துகளில் சிக்குவதும் அதிகமாகி வருகிறது.

இந்த பிள்ளைகள், ஹெல்மெட் போடாமல் போகிறார்களே என்று நினைத்து நாம் கவலைப்படுவதா?? அல்லது இப்போதே குடிபோதை, முத்தம், என்று நடுரோட்டில் சிக்கி அசிங்கப்படுகிறார்களே என்று நினைத்து கவலைப்படுவதா??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+