AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்?
சென்னை: தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதி அமமுக (AMMK) வேட்பாளராக வி. கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான வேலு கார்த்திகேயன், தற்போது தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவராக இருந்து வருகிறார். நடைபெற இருக்கும் பார் கவுன்சில் தேர்தலிலும் களமிறங்கி உள்ளார்.
என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 சீட்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், அமமுகவின் 11 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர்கள்
அதன்படி, சைதாப்பேட்டை - செந்தமிழன், திருச்சி மேற்கு - ராஜசேகரன், பெரியகுளம் - டாக்டர் கதிர்காமு, மடத்துக்குளம்- சண்முகவேலு, திருப்பத்தூர் - ஞானசேகரன், காரைக்குடி - தேர்போகி பாண்டி, நாங்குநேரி - இசக்கி முத்து, பெரியகுளம் (தனி) - கதிர்காமு, மன்னார்குடி - எஸ்.காமராஜ், திருவையாறு - கார்த்திகேயன், பூந்தமல்லி (தனி) - ஏழுமலை ஆகியோர் அமமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.
யார் இந்த கார்த்திகேயன்?
வழக்கறிஞரான வேலு கார்த்திகேயன் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். வரும் 30 ஆம் தேதி நடைபெறும் பார் கவுன்சில் தேர்தலிலும் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் கார்த்திகேயன்.
அமமுக தொடங்கப்பட்டது முதலே அக்கட்சியில் பணியாற்றி வரும் வேலு கார்த்திகேயன், அக்கட்சியில் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது திருவையாறு சட்டசபை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். என்.டி.ஏ கூட்டணியில், அதிமுக, பாஜக ஆதரவோடு குக்கர் சின்னத்தில் களமிறங்குகிறார் வேலு கார்த்திகேயன்.
திருவையாறு தொகுதி
தஞ்சாவூர் மாவட்ட திமுக செயலாளரான துணைச் சந்திரசேகரன் திருவையாறு தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2 முறை எம்.எல்.ஏவான அவர், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரியுள்ளார். தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், பூதலூர் ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு ஆகியோரும் திருவையாறு தொகுதியை குறி வைத்துள்ளனர்.
துரை சந்திரசேகரன் பொருத்தமட்டில் 2 முறை தொடர்ச்சியாக திருவையாறு தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். அதிலும் கடந்த முறை அவர் 1 லட்சத்து 3,210 வாக்குகள் பெற்று திருவையாறு தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் மீண்டும் அவரே வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு திருவையாறு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாஜக சார்பில் வெங்கடேசன் என்பவர் களமிறங்கி 49 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்றார். தஞ்சை மாவட்டத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கும் கணிசமான செல்வாக்கு உள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் வேலு கார்த்திகேயன் திருவையாறு தொகுதியை குறிவைத்து தீவிரமாக களப்பணி ஆற்றி வந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications