பனையூருக்கு ‘டைவ்’.. அதிமுக, திமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிய முக்கியப் புள்ளிகள் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிக்கிழமை என்றாலே, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைவது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் என ஏராளமானோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

Who Joined TVK Today Full List of Former Ministers MLAs and MPs Who Switched Sides

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

இந்நிலையில் இன்று (ஜூலை 4) சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான கீதா, கிருஷ்ணராயபுரம் மணிவண்ணன், கரூர் மணிவண்ணன், திமுகவைச் சேர்ந்த வி.பி.கலைராஜன், நிலக்கோட்டை அன்பழகன், உசிலம்பட்டி பாண்டியம்மாள், ஆலந்தூர் திமுகவைச் சேர்ந்த கன்டோன்மெண்ட் சண்முகம், கூடலூர் ஜெயசீலன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.

இதற்கிடையே இன்று பிற்பகலில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்தவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் விஜய்.

இன்று தவெகவுக்கு தாவியவர்கள் பட்டியல்

வைகைச்செல்வன் - அதிமுக முன்னாள் அமைச்சர்

கீதா மணிவண்ணன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( கிருஷ்ணராபுரம் )

மணிவண்ணன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்( கரூர்)

வி பி கலைராஜன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (திமுக)

நிலக்கோட்டை அன்பழகன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

பாண்டியம்மாள் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (உசிலம்பட்டி)

கன்டோன்மெண்ட் சண்முகம் - சட்டமன்ற உறுப்பினர் (ஆலந்தூர்)

ஜெயசீலன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( கூடலூர்)

சின்னசாமி - அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர்

பெங்களூர் புகழேந்தி - முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பிரபாகரன்
பார்த்திபன்
பையூர் சந்தானம்

திரைப்பட இயக்குநர் ரவி மரியா

தயாரிப்பாளர் ஜே.எம். பஷீர்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த்

உள்ளிட்டோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+