Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay Sangeetha Divorce Paper leak: விஜய் - சங்கீதா விவாகரத்து மனுவை பொது வெளியில் லீக் செய்தது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்து, தனது கணவர் விஜய்யிடம் இருந்து இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவை பொதுவெளியில் லீக் செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

100 கோடியில் சம்பளம் வாங்கும் உச்சபட்ச நடிகரான விஜய், இத்தனை புகழ் பெறுவதற்கு முன்பே அவரது வாழ்க்கையில் ஒரு ரசிகையாக வந்து பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

vijay sangeetha divorce

பூவே உனக்காக படத்தை பார்த்துவிட்டு லண்டனில் இருந்து விஜய்யை பார்க்க நேரில் வந்தவர்தான் சங்கீதா. அந்த படம்தான் விஜய்க்கு அத்தனை திருப்புமுனையை கொடுத்தது என சொல்லலாம்.

அதுவரை அவர் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன. அப்போதே அவரை சங்கீதா திருமணம் செய்து கொண்டார். சங்கீதா ஒன்றும் சாதாரணமானவர் இல்லை. அவரது தந்தை தொழிலதிபர். நன்கு வசதிப்படைத்தவர்.

இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற 25 வயது மகனும், திவ்யா சாஷா என்ற 20 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் லண்டனில் படித்தவர்கள். ஜேசன் தற்போது சில படங்களை இயக்கி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகார் மனுவில், விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அவருடனான தொடர்பை துண்டித்துவிடுவதாக உறுதியளித்த கணவர் விஜய், இன்று வரை அந்த நடிகையுடனான உறவை தொடர்ந்து வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த நடிகை, தனது கணவர் விஜய்யுடன் பல்வேறு பொது இடங்களுக்கு செல்வதும் அங்கு அவருடன் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறும், அவரிடம் இருந்து நிரந்தர ஜீவனாம்சம் பெற்றுத் தரவும் சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து மனுவை விட அந்த மனுவில் உள்ள அம்சங்களை லீக் செய்ததுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! பொதுவாக இதுவரை தனுஷ்- ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்- சைந்தவி, ஏஆர் ரகுமான்- சாயிரா பானு, ரவிமோகன் - ஆர்த்தி உள்ளிட்டோர் விவாகரத்துககளின் போது இவர்கள் இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு விவாகரத்து குறித்து பதிவு போட்டிருந்தனர்.

அதில் "நாங்கள் இருவரும் பிரிகிறோம்" என்பதை நாசுக்காக எப்படி சொல்ல முடியுமோ அப்படித்தான் சொல்லியிருப்பார்கள். இதுவரை யாருமே பிரிவதற்கான காரணங்களை சொல்லவில்லை. ஆனால் பலர் இவர்களின் பிரிவிற்கு இவர்களாகவே ஒரு காரணத்தை கண்டுபிடித்து வதந்தி பரப்பி வருவார்கள்.

கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒத்து வரவில்லை என்பதால் அவர்கள் பிரிந்து விட்டனர். இதில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலச நாம் யார்? இப்படி இவர்களது இன்ஸ்டா பதிவுகள், அறிக்கைகள்தான் நமக்கு கிடைத்திருக்கின்றனவே தவிர, அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை இது வரை பொதுமக்கள் ஒருவரும் கண்ணால் பார்த்ததில்லை.

அப்படியிருக்கும் போது சங்கீதா தாக்கல் செய்த மனு எப்படி லீக்கானது என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னதான் கோர்ட்டுக்கு இந்த விவகாரம் வந்துவிட்டால் அந்த மனுவில் சங்கீதா குறிப்பிட்டிருந்தது அவரது தனிப்பட்ட விஷயங்கள்.

அது இன்று பேசுபொருளாகியுள்ளது. தாம்பத்ய உறவு குறித்தெல்லாம் அவர் அதில் குறிப்பிட்டுள்ளது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த மனு லீக்கானது சங்கீதாவுக்கே அதிர்ச்சிதான் என்கிறார்கள்.

இந்த மனுவை சங்கீதா லீக் செய்ய வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்த மனுவிலேயே தனது, தனது கணவர், தனது குழந்தைகளின் கவுரவத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கை தனி அறையில் வைத்து விசாரிக்குமாறும் இந்த விவகாரத்தை ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள், யூடியூப் சேனல்கள் விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரியும்தான் கேட்டிருக்கிறார்.

அப்படியிருக்கும் பட்சத்தில் இந்த மனுவை லீக் செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த மனுவை வைத்து விஜய்- சங்கீதா இமேஜை எப்படியெல்லாம் டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்து வருகிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+