ஜெம் கிரானைட்ஸ் வீரமணியை தப்பிக்க விட்டது யார்? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்சோ வழக்கில் சிக்கியிருக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணியை தப்பிக்க விட்டது யார்? அவர் தப்பித்தது எப்படி என்று திமுக விளக்கமளிக்க வேண்டும் என்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசியதாவது, "ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் விவகாரம் போன்ற எந்த விவகாரத்திலும் முதல்வர் தயவு தாட்சணியம் இல்லாமல் முடிவு எடுக்க 100% உத்தரவிட்டிருக்கிறார். யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

Granites Veeramani

திமுக ஆட்சியில் வேண்டுமானால் கொடுப்பதை கொடுத்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம். இந்த ஆட்சியில் அது நடக்காது. இதுபோன்ற பெரிய விவகாரம் முதல்வரின் தலையீடு இல்லாமல் அமைதிப்படுத்தப்பட்டு இருக்காது. காவல்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு தெரியாமல் இது மூடி மறைக்கப்பட்டு இருக்காது. இதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரது கவனத்திற்கு போகாமல் இது நடந்திருந்தால், அவர் முதல்வராக இருந்ததற்கு தகுதி இல்லை. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பிரச்சனையின் பின்னணி

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ஜெம்ஸ் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி(வயது 84). இவர் மீது சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 2025ம் ஆண்டு விபசார தடுப்பு பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளிக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில்.. வீரமணி தனது வீட்டிற்கு நிறைய சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பல தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகளை அனுப்பி வைத்தது தெரிய வந்திருக்கிறது.

தொடர்ந்து போலீசார் வீரமணி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களின் விட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில்.. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான போட்டோ ஆதாரங்கள் சிக்கின. மறுபுறம்.. வீரமணியும் அவரது கூட்டாளியான சில தொழிலதிபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மேலும் சில சிறுமிகள் போலீசில் புகார் அளித்தனர்.

விஷயம் பெரியதாக வெடித்த நிலையில்.. இந்த விவகாரத்தில், வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் அமல்ராஜூடன் கடந்த இரு நாட்களில் 2 முறை முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+