“நியாயமான தொகுதி மறுவரையறை கேட்கிறோம்! எட்டப்பர் யார் என்பது ரிசல்ட் வந்தபோது தெரிந்ததே!” - கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்று அனைத்துக் கட்சி எம்பிக்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில் திமுக பங்கேற்கவில்லை. இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்துள்ள திமுக எம்பி கனிமொழி, "முதல்வர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்திற்கான காரணம் தெளிவாக இல்லை" என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதாவது, "புதியதாக கொண்டுவரப்படக்கூடிய இந்த மசோதாவில் என்ன மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும்? பழைய மசோதாவுக்கும், இதுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எந்த தகவலும் இல்லை. இந்த கூட்டத்தை நடத்துவது யார்? தவெக அரசை இயக்குவது யார்? என்கிற கேள்விகள் எழுகின்றன.

Kanimozhi

பொதுவாக அனைத்துக்கட்சி கூட்டம் எனில், கட்சி தலைவர்களுக்குதான் கடிதம் எழுதப்படும். ஆனால், இங்கு தலைமை செயலாளர்.. ஒவ்வொரு எம்பிக்கும் தனித்தனியாக கடிதம் எழுதுகிறார். இதுவே சந்தேகத்தை கிளப்புகிறது. தலைமை செயலாளர் என்பவர் அரசுக்குதான் வேலை செய்கிறாரா.. அல்லது ஒரு தனி இயக்கத்திற்கு வேலை செய்கிறாரா? தவெக தலைமை செயலாளர் போல அவர் செயல்படுகிறார். நாங்கள் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியபோது, ஒவ்வொரு கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதினோம். அந்த கட்சிதான் யாரை அனுப்புவது என்பது குறித்து முடிவு செய்யும்.

எந்த தேவையும் இல்லாத இந்த நேரத்தில்.. குறிப்பாக மேகதாது, விவசாய பிரச்சனைகள் சீரியஸாக இருக்கும் நிலையில், திசைத்திருப்பும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

தொகுதி மறுவரையறையை அமல்படுத்தினால்.. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே! அப்படி எனில் பேச வாய்ப்பு வழங்கப்படாதா? என்று கேள்விகள் எழுகின்றன. ஆனால், கட்சிகளில் எத்தனை எம்பிக்கள் இருக்கின்றனர்? என்பதன் அடிப்படையில்தான் நேரம் ஒதுக்கப்படுகிறது. சுயேட்சை எம்பிக்களுக்குதான் பேசுவதற்கான நேரம் குறைவாக இருக்கிறது. இதையெல்லாம் காரணமாக சொல்லி.. மசோதாவை எதிர்க்க முடியாது.

நாங்கள் கேட்பது, பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வேண்டும். இது எங்களின் தொடர் கோரிக்கை. மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய கூடாது என்றும் கூறி வருகிறோம். தமிழகத்திற்கு எந்த விதத்திலும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது. மக்கள் தொகையை குறைத்திருப்பதற்காக பழிவாங்கப்படக்கூடாது என்பததான் எங்களின் நிலைப்பாடு.

தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு எட்டப்பர்கள் யார் என்பது தெரிந்தது" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+