Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fail செய்ய யார் சொன்னாங்க.. அப்படி ஒன்றும் இல்லை.. CBSE சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வாங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ - இன் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு எதை சொன்னாலும் மாநில அரசு அதற்கு எதிராக கூறி வருவதாகவும், சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி விகிதத்திற்கு குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 18 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை குழந்தைகளின் கல்விக் கனவை தகர்க்கும் நடவடிக்கை என்றும், தேர்வு என்றாலே என்ன தெரியாத மாணவர்களுக்கு இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

CBSE Schools National eduaction policy Nayinar nagendhran

9 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நிலை இருந்து வந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த நடைமுறை தற்போது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதற்கு பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதங்களையும் பள்ளிகள் சார்பில் பெறப்பட்டு வருகிறது. தற்போது, அடுத்த வகுப்புக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டதால், இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கிவிட்டது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி நாம் நம்முடைய பிள்ளைகளை பாதுகாத்துவிட்டோம். ஆனால், சிபிஎஸ்இ படிக்கும் பிள்ளைகள், பெற்றோருக்கு தனி சட்டம் அமல்படுத்தப்படும்போது இடைநிற்றல் அதிகமாகும். இதனை பெற்றோர்கள் எதிர்த்து கேள்விகள் கேட்க வேண்டும். சிபிஎஸ்இயின் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் மூலம் வரலாற்றை மறைக்க முயற்சி செய்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம்.

சிபிஎஸ்இ பள்ளிகள், 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை ஃபெயில் ஆக்குவதற்கான நடைமுறைக்கு ஒப்புதல் கடிதம் கோரினால் அதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள். சிபிஎஸ்இயின் இந்த நடவடிக்கையை நாம் வேடிக்கை பார்க்க முடியாது." என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை. மத்திய அரசு எது சொன்னாலும் மாநில அரசு அதற்கு எதிர்ப்பாகத்தான் எதையாவது சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+