5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி.. 51 விவரங்களை லிஸ்ட் எடுத்த தமிழக அரசு.. யாருக்கெல்லாம் கடன் ரத்து?
சென்னை: 5 சவரன் வரையிலான கூட்டுறவு நகை கடன்களை தள்ளுபடி செய்வதற்காக மொத்தம் 51 விவரங்களை பயனாளிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
Recommended Video
5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். தேர்தலின் போது திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி தீவிரமாக எழுந்து வந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கடைசி நாளான இன்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போலவே 5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். யாருக்கெல்லாம் இந்த தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

ஸ்டாலின்
தகுதியின் அடிப்படையில் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். நகை கடன் மற்றும் மற்ற அடிப்படை விவரங்கள் தொடர்பாக கடந்த ஆட்சியில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க எதிர்காலங்களில் வங்கி கணக்குகள், விவரங்கள் எல்லாம் கணினியில் ஏற்றப்படும்.

கோர் அடிப்படை
அதோடு கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு கோர் அடிப்படையில் இனி கூட்டுறவு வங்கிகள் செயல்படும். இது வங்கிகள் செயல்படுவதை எளிதாக்கும். முறையான தகுதியின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அடிப்படையாக வைத்தே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தகுதியின் அடிப்படை
பயனர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டார்கள் என்று பார்க்கலாம்,
1. மொத்தம் 51 தகவல்களை வைத்து பயனாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
2. நகைக்கடன் வாங்கியவர்கள் பெயர். 5 சவரனுக்கு உள்ளே எவ்வளவு நகையை வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். கணக்கு எண், ஆதார் எண், கூட்டுறவு சங்க விவரம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்துள்ளனர்.
3. இந்த தகவல்களை வைத்து பயனர்கள் தகுதியின் அடைப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த லிஸ்ட் மொத்தமும் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது.

லிஸ்ட்
இதன் அடிப்படையில், வருமான குறைவான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்படும். 2021ம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி வழங்கியதில் பயன் பெற்றவர்கள் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் பலர் இருந்தனர். அது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவே இந்தமுறை 50க்கும் மேற்பட்ட விவரங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செலவு
ஏழைகள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை லிஸ்ட் எடுத்து அதற்கு ஏற்றபடி கடன் தள்ளுபடி செய்யப்படும். இதற்கான முறையான வழிகாட்டுதல் இன்னும் ஒரு நாட்களில் வெளியிடப்படும். உரிய முறையில் அவசியமாக தேவைப்படும் நபர்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும். இதனால், அரசுக்கு 6000 கோடி கூடுதல் செலவாகும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications