Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிபி முத்துவுக்கு பதில்.. பிக்பாஸுக்கு "அவர்' வருகிறாரா? ஐயோ இனி "சக்குசக்குத்தானா"! களைகட்ட போகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜி.பி. முத்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஒரு பிரபலத்திடம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி விஜய் டிவியில் தொடங்கியது. இது 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், சாந்தி, சீரியல் நடிகர் அஸீம், நடிகை ஐஸ்வர்யாவின் சகோதரர் மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி தொடரின் நடிகை மீனாட்சி ரக்ஷிதா, விஜே மகேஸ்வரி, அமுதவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக ஜிபி முத்து உள்ளே வந்தார். அவர் வீட்டுக்குள் சென்றதுமே வீட்டில் யாரும் இல்லாததால் கமல்ஹாசனிடம் வீட்டிற்குள் யாருமே இல்லையே என்றார். அதற்கு கமல்ஹாசன், பொறுங்கள், இந்த வீட்டின் முதல் போட்டியாளரே நீங்கள்தான்.

ஆதாம் ஏவால்

ஆதாம் ஏவால்

ஆதாம், ஏவால் காலத்தில் கொஞ்சம் நினைத்து பாருங்கள். ஏவால் வரும் வரை ஆதாமின் நிலையை யோசியுங்கள் என கமல்ஹாசன் சொல்ல, அதற்கு ஆதாமா யாரு என ஜிபி முத்து கேட்டார். இது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் யூடியூபை போலவே பிக்பாஸ் வீட்டிலும் ஜிபி முத்து கலக்கிக் கொண்டிருந்தார்.

ஜிபி முத்து

ஜிபி முத்து

அவர்தான் வெற்றியாளராக வருவார் என ரசிகர்கள் முடிவு செய்திருந்தனர். ஜிபி முத்து என்னதான் கோபத்தில் கெட்ட வார்த்தைகளில் திட்டினாலும் தனது தம்பி குழந்தைகளையும் வளர்த்து வரும் அவரது பண்பு அனைவருக்கும் பிடித்துவிட்டது. இதனால் அவருக்கென ஆர்மியெல்லாம் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு ஜிபி முத்து வெளியேறினார்.

ஜிபி முத்து மகனின் உடல்நலம்

ஜிபி முத்து மகனின் உடல்நலம்

ஜிபி முத்துவின் மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை கேள்விப்பட்ட ஜிபி முத்து தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிக்பாஸிடம் கேட்டுள்ளார். இதற்கு பிக்பாஸ் அவருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி ஜிபி முத்துவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6-இன் டைட்டில் வின்னராக ஜிபி முத்து வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய இந்த வெளியேற்றம் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது. சுருக்கமாக சொல்ல போனால் பிக்பாஸ் வீடு கடுமையான போட்டியாளரை இழந்துள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட தற்போது ஒரு பிரபலத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானை பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. மன்சூர் அலிகான் அதிரடியாக பேசக் கூடியவர். யாரையும் வைத்து பார்க்க மாட்டார். அவர் வந்தால் பிக்பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+