அமித்ஷா வந்து போன உடன் தந்தி டிவியின் கருத்து கணிப்பு- ராகுல் பிரதமராக 71%; மோடி- 27% பேர் ஆதரவு!
சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து சென்ற உடன் தந்தி டிவி பிரதமர் பதவி தொடர்பான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஜூரம் தமிழ்நாட்டிலும் அனலடிக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் தன்னிச்சையாகவே சில தொகுதிகளை டார்கெட் செய்து களப் பணிகளை தொடங்கி இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தென்சென்னை- வேலூர் லோக்சபா தொகு9திகளை டார்கெட் செய்து ஆலோசனைகள் நடத்தினார். வேலூரில் தேர்தல் பிரசாரத்தையும் அமித்ஷா மேற்கொண்டார். அமித்ஷாவின் இந்த பிரசாரம் பாஜகவினருக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டிருக்கிறது.

அமித்ஷா நேற்றுதான் தமிழ்நாடு வந்து சென்றுவிட்டு திரும்பினார். இந்நிலையில் தந்தி டிவி, "தமிழகத்தில் லேசாக எகிறும் மோடி 'கிராப்' - தந்தி கருத்துக்கணிப்பில் வித்தியாச முடிவுகள்" என்ற தலைப்பில் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு தமிழ்நாடு, புதுச்சேரியில் 2,500 பேரிடம் எடுக்கப்பட்டதாம். இக்கருத்து கணிப்பில் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என 71% ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 27% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதர என்ற பிரிவில் 2% கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது அமித்ஷா தமிழ்நாட்டு வந்து சென்ற பின்னர் வெளியிடப்பட்ட இக்கருத்து கணிப்பிலும் பாஜக மீது கடும் அதிருப்தி இருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அதனால் பிரதமர் மோடிக்கு வெறும் 27% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications