ஏ.வ வேலுக்கு அடுத்து.. இவர்தான் குறி.. அதிரும் திமுக.. மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் ஸ்டாலின்
சென்னை: திமுக மீது திட்டமிட்ட தாக்குதலை டெல்லி நடத்துகிறது. முறையாக திட்டமிட்டு.. திமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறது. அதில் இருந்து எப்படி தப்பிப்பது, பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்
அமைச்சர் எ.வ வேலு இடங்களில் நான்காவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. இந்த ரெய்டு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில்,தற்போது இருக்கும் அமைச்சர்களை கட்சி வேலைகளுக்கு அனுப்பி ஸ்டாலின் திட்டத்தில் உள்ளார். சீனியர் அமைச்சர்களை கட்சி வேலைக்கு அனுப்புவார். முக்கியமாக லோக்சபா தேர்தல் வருகிறது. உங்கள் மாவட்ட பணிகளை பாருங்கள். அந்த பணிகளில் கவனம் செலுத்துங்கள். கட்சி பணிகளை பாருங்கள். நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெல்ல வேண்டும். இங்கே பணிகளை செய்யுங்கள் என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். சீனியர்களை பார்ட்டி வேலைக்கு அனுப்பலாம்.
திறமையான இளைஞர்களை கொண்டு வரலாம். திறமையானவர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இளைஞர்களை கொண்டு வந்தால் அவர்கள் மீது ரெய்டு நடத்த முடியாது . அவர்கள் மீது உடனே ஆக்சன் எடுக்க முடியாது . டெல்லி தரப்பும் கைகட்டப்படும். அவர்களால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத நிலை ஏற்படும். ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் அமைச்சர்களை மாற்ற முடியாது. ஏற்கனவே செந்தில் பாலாஜியை மாற்றிவிட்டார். அதன்பின் பல அமைச்சர்கள் ரெய்டுக்கு உள்ளாகி உள்ளனர்.

ஸ்டாலின் பிளான்: ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் அமைச்சர்களை மாற்ற முடியாது. இதனால் அவர் மொத்தமாக இளைஞர்களை உள்ளே கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளன. ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதை கூறியுள்ளனர். ஏ. வ வேலுக்கு அடுத்து துரைமுருகனை அவர்கள் விசாரிக்க வாய்ப்பு உள்ளது. அவரிடம் ரெய்டு நடத்த வாய்ப்பு உள்ளது. அது திமுகவிற்கு மேலும் பிரஷரை கொடுக்கும். திமுக மீது திட்டமிட்ட தாக்குதலை டெல்லி நடத்துகிறது .
முறையாக திட்டமிட்டு.. திமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறது. அதில் இருந்து எப்படி தப்பிப்பது, பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். அதில் ஒரு ஐடியாதான் அமைச்சரவையை மாற்றுவது. தற்காலிமாக அமைச்சரவையை மாற்றலாம். 2024ல் கண்டிப்பாக ஆட்சி மாறும். அதுவரை இப்படிஸ் செய்யலாம் என்று ஸ்டாலின் இருக்கிறார். இதற்கான திட்டத்தில் அவர் இருப்பதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இருக்கின்றன.
திமுகவை எதிர்க்க வேண்டும் என்றுதான் இப்படி செய்கிறார்கள். திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடந்தது. வருமான வரித்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
2019 லோக்சபா தேர்தலில் நிற்கும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக 110 கோடி ரூபாய் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கணக்கு காட்டினார். அதோடு தனக்கு மனைவிற்கு 43 கோடி ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக புகார் வைக்கப்படுகிறது. வருமான வரித்துறை சந்தேகம் அடைந்து உள்ளது. இப்படி திமுகவிற்கு நிதி திரட்டும் நபர்கள் மீதெல்லாம் ரெய்டு நடத்தப்படுகிறது , என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications