திமுகவின் புதிய மகளிரணி செயலாளர் யார்? ஸ்டாலின் கொடுத்த சுதந்திரம்? கனிமொழி கைகாட்டும் பெண் "இவரா"?
சென்னை: திமுகவின் அடுத்த மகளிரணி செயலாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுகவின் மகளிரணி செயலாளராக இருப்பவர் கனிமொழி. இவர் இந்த பதவிக்கு வந்த பிறகுதான் திமுகவின் மகளிரணியின் செயல்பாடுகளும் திமுகவின் செயல்பாடுகளும் வெளியுலகிற்கு தெரியவந்தன.
எந்தவித மோதல்களும் சலசலப்புகளும் இல்லாமல் கனிமொழி மகளிர் அணியை நடத்தி வந்தார். அவர் சொல்லுக்கு மகளிரணியினர் கட்டுப்பட்டனர். அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

திமுக துணை பொதுச் செயலாளர்
இந்த நிலையில் திமுக துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியிலிருந்து விலகிய நிலையில் அந்த பதவி கனிமொழிக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் அவர் வகித்து வரும் மகளிரணி செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகளிரணி
இளைஞரணியை போல் மகளிரணியும் ஒரு கட்சிக்கு முக்கியமானது என்பதால் கனிமொழியை போன்றதொரு ஆளுமையையோ அல்லது அவரது மேற்பார்வையில் செயல்படும் நபரையோ அந்த பதவியில் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த பதவிக்கு இருவரின் பெயர் அடிபடுகிறது.

தமிழரசியா தமிழச்சியா
ஒருவர் முன்னாள் அமைச்சர் தமிழரசி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆவர். மகளிரணியை சிறப்பாக வழிநடத்தியதால் அந்த பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்ற பொறுப்பை கனிமொழியிடமே முதல்வர் ஸ்டாலின் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் யாரிடம் கொடுத்தாலும் கனிமொழியின் மேற்பார்வையில் மகளிரணி இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

தமிழரசியே சாய்ஸ்
எனவே தமிழரசி, தமிழச்சி தங்கபாண்டியனில் கனிமொழியின் சாய்ஸ் தமிழரசியாகவே இருக்கும் என்கிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் தமிழரசி இருந்தார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். சமூக நீதி, சமத்துவம் என்பது திமுகவின் அடிப்படை கொள்கையாக உள்ள நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கட்சியின் முக்கிய பதவியை கொடுத்தால் அது அந்த சமூகத்து வாக்குகளை பெற பிளஸ்ஸாக அமையும்.

தமிழரசி ஏன்?
இன்னொன்று இந்த முறை அமைச்சரவையில் தமிழரசி இடம்பெறவில்லை. எனவே அந்த வருத்தத்தை போக்க அவருக்கு மகளிரணி பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் அவர் கனிமொழியின் சொல்லுக்கும் கண்ணசைவுக்கும் கட்டுப்பட்டவர். ஆனால் தமிழச்சி தங்கபாண்டியனை எடுத்துக் கொண்டால் அவரும் எம்பி, கனிமொழியும் எம்பி. எனவே மகளிரணி செயலாளர் பதவியை தமிழச்சியிடம் கொடுத்துவிட்டு அதை இன்னொரு எம்பியான கனிமொழி மேற்பார்வையிடுவது சரிப்பட்டு வராது. எனவே கனிமொழியின் சாய்ஸ் தமிழரசியாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications